7/12/2009
| 0 commentaires |
சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. –கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்
கடந்த பல காலங்களாக யுத்தத்தினாலும் பயங்கரவாதத்தினாலும் பாதிக்கப்பட்டு இருந்த எமது மக்கள் இன்றுதான் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இம் மக்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதற்கு எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித்தந்திருக்கின்றார். இதனை நாம் அதாவது மக்களாக இருந்தாலும் சரி அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது சரியான தருணத்தில் பிழையான முடிவினை எடுக்கக் கூடாது. அதே போல் சலுகைகளுக்காக எமது உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது. என நேற்று (11.07.09)பேத்தாழையில் குகநேசன் கலாசார பண்டபத்தினைத் திறந்து வைத்து உரையாற்றும் போது கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது மிகவும் தெளிவான ஓர் சிந்தனையோடும் ஆக்கபூர்வமான சேயற்பாடுகளோடும் அமைந்த வகையிலே சென்று கொண்டிருக்கின்றது. சிலர் பல்வேறு புரளிகளைக் ஏற்படுத்தி விட்டு புதினம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் குழம்பத் தேவையில்லை காலத்தின் தேவை கருதி வேலை செய்வோமாக இருந்தால் நாம் நிச்சயமாக வெற்றி பெறலாம் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவத்த முதல்வர் இன்று திறந்து வைக்கப் பட்டிருக்கின்ற இக்கலாசார மண்டபத்திற்கு குகநேசன் கலாசரா மண்டபம் எனப் பெயரிடப் பட்டிருக்கின்றது. மறைந்த இந்தக் குகநேசன்தான் இப்போது பெரிதாக வளர்ந்திருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியினை வளர்த்தவர்களில் மிக மிக முக்கியமானவராவார். எனவேதான் அவரின் நினைவாக இப் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.
மக்களாகிய நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடும் தெளிவான ஒருமித்த அரசியல் சிந்தனைகளோடும் இருக்கின்ற போதும் யாரும் ஏமாற்றமுடியாது. காலங்காலமாக எமது மக்களைத் தூண்டிவிட்டுச் சென்றவர்களில் ஒருசிலர் இன்று வேடிக்கையாக தங்களது பேச்சுக்களை மாற்றிக் கொண்டு அரசியல் நடாத்த முற்படுகின்றார்கள். இவர்களை நீங்கள் இனம் கண்டு சரியான உங்களின் பதிலை வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வி;ற்குகிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பிரதீப் மாஸ்டர், நெகோட் திட்டப் பணிப்பாளர், உள்ளுராட்சி ஆணையாளர் மா. தயாபரன், உதவி உளளுராட்சி ஆணையாளர் து. சத்தியானந்தி, தமிழ் மக்கள் விடுதபை; புலிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரும் திரளான மக்குளும் கலந்து கொண்டார்கள். கலாசார நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலான கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது.
0 commentaires :
Post a Comment