புலிகளின் பிடியில் சேவையாற்றிய டாக்டர்களான சிவபாலன், சண்முகராஜா, வரதராஜா, சத்தியமூர்த்தி, இளஞ்செழியன் ஆகிய ஐவரும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படம்.
மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின்போது புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்கள் ஊடாக வழங்க நேர்ந்ததாக புலிகளின் பிடியில் இறுதி வரையிருந்து சேவையாற்றிய ஐந்து டாக்டர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.
உண்மைக்குப் புறம்பான தகவல்களை அப்பொழுது வழங்கியமைக்காக தாங்கள் தற்பொழுது வருந்துவதாக தெரிவித்த அவர்கள் புலிகளின் துப்பாக்கி முனையில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டமையினாலேயே உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
புலிகள் சில சந்தர்ப்பங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களது பெயர்களை பயன்படுத்தி பலாத்காரமாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கும் இணைய தளங்களுக்கும் வழங்கியதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின் போது புலிகளின் பிடியில் இறுதிவரையிருந்து சேவையாற்றிய வண்ணம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய ஐந்து டாக்டர்களும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து தமது உண்மை நிலைமைகளை விபரித்தனர்.
இரகசிய பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் சின்னத்துரை சிவபாலன், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வீரகத்திப்பிள்ளை சன்முகராஜா, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி டாக்டர் கதிரவேல் இளஞ்செழியன் வள்ளவன் ஆகியோரே இதில் கலந்து கொண்டனர்.
இவர்கள் இங்கு மேலும் தகவல் தருகையில்:-
நாங்கள் அரசாங்க வைத்தியர்களாக இருந்த போதிலும் புலிகளின் ஆயுதங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலிலேயே இறுதிவரை புலிகளுக்கும் சேவையாற்ற நேர்ந்தது.சிவிலியன்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாக புலிகளுக்கும் சிகிச்சை வழங்க வேண்டியேற்பட்டது. எனினும் இறுதி வரை நாங்கள் அரசாங்கத்தின் சம்பளத்தையே பெற்றுக் கொண்டோம்.
நாங்கள் எமது சொந்த விருப்பத்திற்காக இவ்வாறு செயற்படவில்லை. எம்மையும் எமது குடும்பத்தையும் பாதுகாக்க இது தவிர எமக்கு வேறு வழியில்லை.புலிகளின் தாக்குதல்கள் காரணமாகவே அதிகமானவர்கள் காயமடைந்தனர். எனினும் உயிரிழந்தவர்களதும், காயமடைந்தவர்களதும் எண்ணிக்கை தொடர்பில் மிகைப்படுத்தி கூறும்படியே புலிகள் அதிகமான சந்தர்ப்பங்களில் வற்புறுத்தி வந்துள்ளனர்.
உண்மையாக இந்தப் பிரதேசத்தில் மருந்து தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு கூறும் பட்சத்திலே பலரது கவனத்தை ஈர்த்து யுத்தத்தை நிறுத்த வழி செய்ய முடியும் என்றனர்.எட்டு தடவைகள் அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மருந்து, சத்துணவு போன்றவற்றை அனுப்பிவைத்திருந்தது. அவற்றில் பெரும் தொகையான மருந்துகளை புலிகள் எடுத்துச் சென்றனர் என்றனர்.
நாங்கள் காயமடைந்த சிவிலியன்களுக்கே அதிகமாக சிகிச்சை வழங்கியுள்ளோம். ஏனெனில் புலிகளுக்கு சிகிச்சை வழங்கவென தனியான வைத்தியசாலைகளை புலிகளின் மருத்துவக் குழுவினர் வைத்திருந்தனர். தேவையேற்படின் மாத்திரமே எம்மிடம் கொண்டு வருவார்கள் என்று டாக்டர் சன்முகராஜா தெரிவித்தார்.
இறுதியாக வந்த மூன்று கப்பல் பொருட்களையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம்.எமது வைத்தியசாலையின் சுற்றுப் புறங்களில் புலிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது உண்மைக்கு புறம்பானது. எனினும் ஷெல் ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் வந்து விழுந்தது. நாங்கள் ஐ.சி.ஆர்.சி.க்கு அறிவித்தோம்.
பின்னர் புலிகளின் முகாம்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அவர்கள் கூறினார்கள்.நாங்கள் பல முறை தப்பிவர முற்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை. எமது குடும்பத்தினரும் உறவினர்களும் இங்கு சிக்கிக் கொண்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் நாங்கள் சேவையாற்றி வந்தோம். படையினர் முன்னேறி வர வர நாங்கள் எமது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டோம். இறுதியாக பொக்களை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் தற்காலிக வைத்தியசாலைகளை அமைத்து சேவையாற்றினோம்.
இறுதியாக பாதுகாப்புப் படையினர் நாங்கள் இருக்கும் இடத்தை நெருங்கினர். வெடிச் சத்தம் குறைந்த நிலையில் நாங்கள் இருக்கும் இடத்தை ஐ.சி.ஆர்.சி. ஊடாக அறிவித்து எம்மை பாதுகாக்குமாறு தெரிவித்தோம். மே மாதம் 15ம் திகதி நாங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். எங்களை பாதுகாத்தமைக்கான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.
மக்களை அகதிகள் ஆக்கியவர்கள் கண்ணீர் வடிப்பதில் அர்த்தமில்லை
புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் மூலதனமாக்கும் முயற்சியில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பங்கேற்க மறுத்து ஒதுங்கியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமன்றி பதின்மூன்றாவது திருத்தம் நடைமுறைக்கு வருவதை உயிரைக் கொடு த்தும் தடுக்கப்போவதாக வீரவசனம் பேசும் மக்கள் விடுதலை முன்னணிகூட நிவாரணக் கிராமங்களிலுள்ள தமிழ் மக்களுக்காகக் கண்ணீர் வடிக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களின் ‘துன்பங்கள்’ பற்றிப் பாராளுமன்றத்தில் அழுதழுது பேசியதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மக்களின் நலன்கள் பற்றிப் பேசும் தார்மீக உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கு உண்டா என்ற கேள்விக்கு வருவதற்கு முன் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற வசதிகள் பற்றிப் பார்ப்போம்.
நிவாரணக் கிராமங்களில் பெருந்தொகையான மாணவர்கள் உள்ளனர். இவர்கள் தங் கள் கல்வியைத் தொடர்வதில் எவ்விதத் தடங்கலும் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற் படுத்தியிருக்கின்றது. இம்மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களும் அப்பியாச கொப்பிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆரம்பக் கல்வி, இடை நிலைக் கல்வி, உயர் கல்வி என மூன்று பிரிவுகளாக இம் மாணவர்களுக்குக் கல்வி புகட்டப்படுகின்றது. க.பொ.த உயர்தர பரீட்சைக்கும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மீட்டல் வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இக்கிராமங்களிலுள்ள இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இடம் பெயர்ந்த மக்கள் உள்ளூரிலும் வெளிநாடுகளிலுமுள்ள தங்கள் உறவினர்களுடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கான வசதியும் அங்கு உண்டு. பிரிந்திருந்த பல குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெருந்தொகையான மக்கள் உள்ள இடங்களில் சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். ஆனால் குறை பாடுகளிலும் பார்க்க நிறைவுகள் மிகக்கூடுதலாக உள்ளன. நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் நாளொன்றுக்கு இருபத்தைந்து கோடி ரூபா செலவிடுகின்றது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்று வதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக மேற் கொள்ளப்படுகின்றன. வவுனியா வடக்கிலுள்ள எட்டுக் கிராமங்கள் மீள்குடியேற்றத்துக் குத் தயாரான நிலையில் இப்போது உள்ளன. அடுத்த வாரமளவில் இந்த எட்டுக் கிரா மங்களிலும் மீள்குடியேற்றம் இடம்பெறவிருக்கின்றது.
நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்காக இப்போது கண்ணீர் வடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தாங்களும் இம்மக்களின் அவல நிலைக்குப் பொறு ப்பாளிகள் என்பதை மறந்து பேசுகின்றனர்.
இவ்வளவு பெருந்தொகையான மக்கள் அகதிகளாகியதற்குப் புலிகளின் பிழையான அர சியல் கொள்கையே காரணம். இந்தப் பிழையான அரசியல் கொள்கையை ஏற்றுப் புலிக ளின் பதிலிகளாகச் செயற்பட்டதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சம அளவில் பொறுப்பேற்க வேண்டும்.
இன்று அகதிகளாக நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போர் புலிகளால் பலவந்த மாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். இவர்களை விருப்பத்துக்கு மாறாகப் புலிகள் தடுத்து வைத்திருந்ததற்கு எதிராக ஒரு வார்த்தை கூடக் கூட்டமைப்புத் தலைவர்கள் பேசவில்லை. புலிகளின் சகல செயற்பாடுகளுக்கும் இவர்கள் அங்கீகாரம் வழங்கியதன் மூலம் மக்களின் துன்பங்களுக்குப் பொறுப்பாளிகளானார்கள்.
மக்களை அகதிகளாக்கிவிட்டு அவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் அர்த்தமில்லை. இடம் பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது செய்த பாவத்துக்குப் பரிகாரமாக அமையும்.

0 commentaires :
Post a Comment