7/11/2009

ஒஸ்லோவில் ஐந்து இலங்கையர்களுக்கு கடூழியச் சிறை


சமுராய் வகை வாள்களைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்ட ஐந்து இலங்கையர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக நோர்வே இணைய தள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரையில் குறித்த இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோர்வேயின் கல்பெக்கன் பகுதியில் ரமணன் விவேகானந்தன் என்ற 20 வயது இளைஞரை வாளால் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கு ஒஸ்லோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டு நீரூபிக்கப்பட்டதை அடுத்தே குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மேற்படி சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலிருந்து இந்நபர்கள் ஒஸ்லோவின் கல்பெக்கன் பகுதிக்கு வந்தே ரமணன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. ஒஸ்லோவில் இரு தமிழ் குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த முறுகல் நிலையின் விளைவே இந்த படுகொலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.


0 commentaires :

Post a Comment