7/29/2009

அ’புரம் விமானப்படை தளம் மீதான தாக்குதல் சூத்திரதாரி மன்னாரில் கைது

அநுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய பிரதான சூத்திரதாரியை மத்திய மாகாண புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் மறைந்திருந்த நிலையிலேயே மன்னாரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இராமலிங்கம் தபரூபன் என்பவரே கைது செய்யப்பட்டவராவார். இவர் காங்கேசன்துறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். மத்திய மாகாண புலனாய்வு பிரிவினர் அண்மையில் கைதுசெய்த புலிச் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த பிரதான சூத்திரதாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புலிகளின் ராதா படைப் பிரிவில் பயிற்சிபெற்ற இவர், அந்தப் படைப் பிரிவின் புலனாய்வுத் துறை முக்கியஸ் தராவார்.
2002ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் ஆயுதம் ஏந்தி சுடுதல், குண்டுத் தாக்குதல் நடத்துதல், கடல் வழி தாக்குதல், காட்டுப் பிரதேச நடவடிக்கை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
விமானப் படைத்தளம் மீதான தற்கொலை தாக்குதல்களை தற்கொலைதாரிகள் 2007ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி அதிகாலை 3.20 மணியளவில் மேற் கொண்டனர். இதுதவிர விமான தாக்குதல் களும் நடத்தப்பட்டதென புலனாய்வுப் பிரிவினரிடம் இவர் வாக்குமூலம் வழ ங்கியுள்ளார்.
இந்த சூத்திரதாரி வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் மேலும் கூறியுள்ளதாவது :-
பிரபாகரனின் கோரிக்கையின் பேரில் 25 தற்கொலை குண்டுதாரிகள் இந்த தாக்கு தல்களை மேற்கொண்டனர். விமானப் படைத் தளத்திற்குள் நுழைவது தொடர்பாக பல நாட்கள் வேவு பார்த்தோம்.
சிலாவத்துறை, மல்வத்து ஓயா - நுவரவெவ, சாலியபுர மற்றும் கண்டிய கிராமங்களில் மாடு மேய்ப்பவர்கள் போன்ற வேடத்தில் தான் வேவுபார்த்த தாகவும் மேற்படி புலி உறுப்பினர் குறிப் பிட்டுள்ளார்.
நுவரவெவவுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வேவுபார்த்துக் கொண்டிருந்த போது மாடு ஒன்றைத் தேடிவந்த அப்பு ஹாமி என்பவர் தங்களை நேரில் கண்டு கொண்டதை அடுத்து அவரைச் சுட்டுக் கொலை செய்ததோடு அவரின் கழுத்தை வெட்டி துண்டாக்கி மரப் பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாகவும் குறிப் பிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு ஜனவரி 21ம் திகதி பல குழுக்களாக பிரிந்து சுமார் இரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை நெருங் கியதாகவும் தாக்குதல் நடத்துவதற்கு ஜனவரி 22ம் திகதி வருமாறு தன்னிட மிருந்த அதிநவீன தொலைத் தொடர்பு கருவி ஊடாக புலிகளின் விமானப் பிரிவி னருக்குத் தகவல் வழங்கியதாகவும் குறிப் பிட்டுள்ளார். விசுவமடுவிலிருந்து வந்த புலிகளின் விமானம் ஆகாய மார்க்கமாக விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துகையில் மறைந்திருந்த தற்கொலை தாரிகள் தரை மார்க்கமாக தளத்துக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தினர்.
தாக்குதல் நடத்தப்படுவதை வீடியோ படம் பிடிக்கும் பொறுப்பே புலி தலைமைத்துவத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதான பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.


0 commentaires :

Post a Comment