7/28/2009

குறித்த பிரதேச மக்களுக்கான உரிய சேவையினை அம்மக்களின் விருப்பத்தோடு மேற்கொள்வதே உள்ளுராட்சி சபைகளின் முக்கிய நோக்கமாகும்- கிழக்கு முதல்வர்


உள்ளுராட்சி வாரத்தின் நிறைவினை கொண்டாடும் மூலமாக இன்று திருமலை நகராட்சி மண்டபத்தில் நகராட்சி மன்றத் தலைவர் கௌரி முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற உள்ளுராட்சி வாரம் நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியபோது கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் அடிமட்டத்தில் உள்ள ஜனநாயக அரசியல் நிறுவனம்தான் உள்ளுராட்சி சபையாகும். அதாவது ஒரு நாட்டு மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்ற மிகச்சிறிய அரசாங்கமாகும்.மத்திய அரசின் செயற்பாடுகளுடன் மக்கள் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடியாது ஆனால் உள்ளுராட்சி அரசின் செயற்பாடுகளில் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு குறித்த பிரதேசத்தின் சமூகத்தில் வாழ்கின்ற பிரஜைகளுக்கான கல்வி, அரசியல், பொருளாதார செயற்பாடுகளை விருத்தி செய்தல் போன்ற உயரிய நோக்கங்களை கொண்டு செயற்படுகின்றது.ஒவ்வொரு குறித்த பிரதேசங்களினது மக்களே பிரதிநிதிகளை தெரிவு செய்து அவர்களை ஆட்சியில் இருத்தி இருக்கின்றார்கள். நீங்கள் உங்களது பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் குறித்து இலகுவாக தொடர்பு கொண்டு அறியமுடியும் அப்போது அவர்கள் அனைவருமே பொறுப்புடன் செயற்படுவார்கள். கிராமங்கள் மட்டத்தில் இருந்து அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்ற போதுதான் அபிவிருத்தி என்பது முழுமை பெறுகின்றது எனவே கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் திருமலை நகர சபையானது மிகப் பெறுமதி மிக்க சேவையினை மக்களுக்கு ஆற்றி வருவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நகராட்சி மன்றத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கல்வி துறை சார்ந்த போட்டிகளில் பங்கு பற்றிய மாணவ மணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்தோடு பிரதேசங்களை முதன்மைப்படுத்தி செயற்பட்ட முக்கிய பிரமுகர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் அமிர்தலிங்கம், உள்ளுராட்சி ஆணையாளர் குகநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


0 commentaires :

Post a Comment