7/26/2009

காணிப்பிரச்சினையை தீர்ப்பது உள்ளுராட்சி பிரச்சினையில் அரைவாசியை தீர்ப்பதற்கு சமம்.



காணியோடு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளுராட்சி பிரச்சினையில் அரைவாசிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சமமாகுமென கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் யு.எல்.எம்.என். முபீன் தெரிவ்த்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அங்கு காணி தொடர்பான பிரேரணையொன்றில் உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முபீன், கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம்.யுத்தம் நடைபெற்ற சகல நாடுகளிலும் காணியோடு தொடர்புடைய பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன எனவும், கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லையென்று சொல்வதை விட அந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அல்லது இந்த சமூகத்தின் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற அடிப்படை காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற ஐம்பது வீதமான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் எனக்குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment