7/24/2009

பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு எப்போதுமே எமது கட்சி ஆதரவளிக்கும்.





த.ம.வி.பு கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் திருமதி ஜுடி தேவதாசன்.ஆண்கள் மாத்திரமே அரசியலுக்கு தகுதியானவர்கள் என்கின்ற பெரும்பாலான மக்களின் கருத்துக்களுக்கு எமது த.ம.வி.பு கட்சி சரியான ஓர் சமத்துவ வாத அரசியல் சிந்தனையினை கொண்டிருக்கிறது. என்பதற்கு சிறந்த உதாரணமாக பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு எப்போதும் எமது கட்சி ஆதரவளிக்கும் என திருமதி ஜுடி தேவதாசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கௌரவ முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி பொறுப்பேற்றதனால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு விடிவுகாலம் ஆரம்பித்துள்ளதை மக்கள் தொடர்பு அதிகாரி என்ற வகையில் மக்களின் மனங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது எனவும், பெண்கள் உரிமைகள் தொடர்பாக பேசுகின்ற பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்களில் சேவை ஆற்றிய நான் அரசியல் ரீதியான ஓர் பின்புலத்தின் ஊடாகா பெணகளுக்கான உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில் முக்கியமாக பெண்களினதும்; சிறுவர்களினதும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டே எமது மாவட்ட அமைப்பாளர்கள் இயங்கி வருகிறார்கள். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிழ்மட்ட நிலையில் இருக்கின்ற பெண்கள் அனைவரினதும் வாழ்வாதாரம், கல்வி, தொழில் முயற்சி,அரசியல் பிரவேசம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக எமது கட்சி அற்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் செயற்படுகின்றது. இதனூடாக எமது பெண் சமுதாயத்திற்கான ஓர் அரசியல், சமூக அபிவிருத்தி மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment