7/24/2009

முதலமைச்சர் தலைமையில் விசேட குழு நியமனம்



கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளது கோரிக்கை தொடர்பாக ஆராய்வதற்கென கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற மாகாண சபை மாதாந்த அமர்வின்போது இக்குழு நியமிக்கப்பட்டது.சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். பாயிஸ் இது குறித்து உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இக்குழுவில் அடங்கியுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் தற்போது வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள சுமார் 1400 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி மட்டக்களப்பில் கடந்த 22 நாட்களாக பட்டதாரிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு உடனடியாக சந்திக்க உள்ளது.
மாகாண சபை அமர்வில் இது குறித்து கடுமையான விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


0 commentaires :

Post a Comment