மாகாண சபையின் அங்கிகாரமின்றி வெளியாருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது.அரசியல் அமைப்பின் 13ம் திருத்தத்தின் பிரகாரம் காணி நிர்வாகம் மாகாண சபைகளுக்குரியதாகும் ஆனால் இத்திருத்தம் முழுமையாக இன்னமும் அமுல்படுத்தப்படாத நிலையில் மாகாண நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் மத்திய அரசு தனியாருக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடும் ஆட்சேவணையை வெளியிட்டிருக்கிறார்.
கந்தளாய் பிரதேசத்தில் உள்ள அரச காடுகள் மாகாண சபையின் அங்கிகாரமின்றி வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசு நிலம், மாகாண சபையின் அங்கிகாரம் பெறாமல் தனியார் கம்பனிகளுக்கு மத்திய அரசாங்கத்தரினால் பகிர்ந்து வழங்கப்படுவது குறித்து எதிர்காலத்தில காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.முதலமைச்சர் தொடர்ந்து கூறியதாவது. கிழக்கு மாகாணத்தில் காணிகள் தனியார் கம்பனிக்கு வழங்கப்படுவது மாகாணத்தில் வாழும் சகல இன மக்களையும் புண்படுத்துவதாக அமைகிறது. ஆதிகார சக்தி இதில் தலையீடு செய்கிறது கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமானதொன்றாகும். ஏனைய மாகணங்களிலும் பார்க்க கிழக்கு மாகாணத்தில்தான் காணிப்பங்கீடு முக்கியமாதொன்றாக கருதப்படுகின்து மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து இன மக்களின் மனங்களை புண்படுத்துவதாக அமைகின்றது
0 commentaires :
Post a Comment