7/28/2009

தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும் தேசிய இனப் பிரச்சினையும்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர் தல்கள் முடிவுற்றதும் இனப் பிரச் சினைக்கான அரசியல் தீர்வு தொட ர்பாக ஏனைய தமிழ்க் கட்சிகளு டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்தும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைப் பொறுத்த வரையில் காலங்கடந்த ஞானோதய மெனினும் இது ஒரு உற்சாக மூட்டும் ஆரம்பம்.

தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு இல ங்கையர் அனைவருக்கும் முக்கியமானது. சகல துறைகளிலும் இலங்கையின் முன் னேற்றத்துக்கு இத்தீர்வு அத்தியாவசியமா னது. தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் சகல கட்சிகளும் இவ்விடயத்தில் கவனம் செலு த்தக் கடமைப்பட்டுள்ளன.
அதாவது தமி ழ்க் கட்சிகள் மாத்திரமன்றித் தேசிய மட் டத்தில் செயற்படும் கட்சிகளும் இவ்விட யத்தில் கரிசனைகொள்ள வேண்டியவையே. தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் வேறொரு பரிமாணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.
இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஒவ்வொரு தமிழ்க் கட்சியும் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைக்காமல் கூடிப் பேசி ஒரே கோரிக்கையை முன்வைப்பது பிரச்சினையின் தீர்வை இலகுவாக்கும். கட ந்த காலத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இனப் பிரச்சினையை மையமாகக்கொண்டு தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் ஏற்படுத்தப்பட்டது. ஒன்று தமிழர் விடு தலைக் கூட்டணி. மற்றது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. இரண்டிலிருந்தும் மக்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணி யதார்த்தத் துக்கு முரணானதும் நடைமுறைச் சாத்தி யமற்றதுமான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்ததால் அதனால் எதையும் சாதி க்க முடியவில்லை.
நடைமுறைச் சாத்திய மற்ற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மாவட்ட சபைத் திட்ட த்தை ஏற்றுக்கொண்டது. பின்னர் பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதி காரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்குக் கடை சிக் கட்டம் வரை ஆதரவளித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாட்டுத் தீர்மானம் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகளைப் பலப்படுத்தியதைத் தவிர வேறெ ந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தனிநாட்டுப் பாதையிலேயே செல்லத் தொட ங்கியது. மற்றைய தமிழ்க் கட்சிகளை எதி ரிகளாகவே கருதியது. தனிநாட்டைத் தவிர வேறெந்தத் தீர்வு பற்றியும் பேச அது விரும்பவில்லை. இச்செயற்பாட்டின் விளை வாக ஏராளம் தமிழ் மக்கள் உயிரிழந்த தோடு லட்சக் கணக்கானோர் அகதி முகா ம்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது.
மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவா ர்த்தை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வருகின்ற இச்சந்தர்ப்ப த்தில் கடந்த காலத்தின் கசப்பான நிகழ்வு களை நினைவூட்டுவது மீண்டும் அத்தவறு நேராமலிருப்பதற்கு உதவும்.
தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து தயாரி க்கும் தீர்வுக் கோரிக்கை நடைமுறைச் சாத் தியமானதும் தமிழ் மக்களுக்குப் பாதி ப்பை ஏற்படுத்தாததுமாக இருக்க வேண் டியது அவசியம். அதேநேரம், தமிழ்க் கட்சி களால் மாத்திரம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்பதால், அரசாங்கத்துட னும் சாதகமான தேசியக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவ சியத்தையும் தமிழ்க் கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தமி ழ்த் தலைமைகள் அறுபது வருடங்களாக மேற்கொண்ட முயற்சிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவவில்லை. பிரச்சினை சிக்கலாகுவதற்கே அவை உதவின. இந்த வரலாறு தொடராமலிருப்பதை உறுதிப்ப டுத்தும் பொறுப்பு தமிழ்க் கட்சிகளைச் சார் ந்தது.

thinakaran.

0 commentaires :

Post a Comment