7/10/2009

மட்டு. நகரில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம் : பயணிகள் மகிழ்ச்சி


மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நெடுஞ்சாலைகளிலுள்ள அநேகமான வீதித் தடைகளும் பொலிஸ் சோதனைச் சாவடிகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர், வெளியூர் பயணங்கள் கடந்த காலங்களை விட இலகுவாக இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மட்டக்களப்பு - கொழும்பு பயணத்தின் போது மட்டக்களப்பிலிருந்து மன்னம்பிட்டி வரை 7 சோதனைச் சாவடிகளும் 10இற்கும் மேற்பட்ட வீதித் தடைகளும் அமைந்திருந்தன.
சோதனைகளின் போது பயணிகள் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாமதங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
தற்போது இவை அகற்றப்பட்டுள்ளதாலும், சோதனைச் சாவடிகளில் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பயணங்கள் இலகுவாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.



0 commentaires :

Post a Comment