உண்மை எப்போதும் காலந்தா ழ்த்தியே வெளிவரும் எனக் கூறுவர். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொட ர்பான பல உண்மைகள் காலந்தாழ்த்தியே வெளிவருகின்றன.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடி க்கை இடம்பெற்ற காலத்தில் உள்நாட்டி லும் வெளிநாடுகளிலும் செய்யப்பட்ட பொய் யான பிரசாரங்கள் பல சர்வதேச அமைப் புகளும் பிரமுகர்களும் அரசாங்கம் மீது குற் றச்சாட்டுக் கணைகளை வீசுவதற்குக் காரண மாக இருந்தன.
வன்னியில் வகைதொகை யின்றித் தமழ் மக்கள் இலங்கை இராணு வத்தால் கொல்லப்படுகின்றனர் என்றும் அர சாங்கம் இன ஒழிப்பில் ஈடுபட்டிருக்கின் றது என்றும் வெளிநாடுகளில் பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரம் தமிழ் நாட்டில் உச்ச கட்டத்தை அடைந்தது என லாம்.
தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை இந்தப் பொய் மூட்டை களை அவிழ்த்துவிட்டுத் தமிழக மக்களைத் தவறாக வழிநடத்தினார்கள். இப்படியான பொய்ப் பிரசாரத்தின் உண்மையை இராணுவ நடவடிக்கைக் காலத்தில் வன்னியில் தங்கி யிருந்து புலிகளுக்குச் சார்பாக அறிக்கைகள் வெளியிட்ட ஐந்து டாக்டர்கள் இப்போது வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
மருந்துத் தட்டுப்பாட்டினால் மக்கள் இற க்கின்றனர் என்றும் இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக் காரணமாகப் பல்லாயிரக் கண க்கானோர் மடிந்துவிட்டனர் என்றும் இந்த டாக்டர்கள் பி. பி. ஸி செய்திச் சேவைக்கும் வேறு செய்தி நிறுவனங்களுக்கும் அளித்த தக வல்கள் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்து க்கு எதிரான பிரசாரத்தின் கருப்பொருளாக விளங்கின.
இத் தகவல்கள் பொய்யானவை என்று அரசாங்கம் தெரிவித்த மறுப்புகள் சர் வதேச செய்தி நிறுவனங்களாலும் வேறு அமை ப்புகளாலும் கவனத்தில் கொள்ளப்படவி ல்லை. தாங்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் புலி கள் அச்சுறுத்தி நிர்ப்பந்தித்ததாலேயே அத் தகவல்களை வெளியிட்டதாகவும் ஐந்து டாக் டர்களும் இப்போது கூறுகின்றனர்.
சில சந் தர்ப்பங்களில் புலிகள் தாங்களாகவே இந்த டாக்டர்களின் பெயரில் பொய்த் தகவல் களை வெளியிட்டிருக்கின்றார்கள் என்ற உண் மையும் இப்போது தெரிய வந்திருக்கின் றது. பொய்த் தகவல்களின் அடிப்படையில் அரச எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டவர் கள் இப்போது தங்கள் தவறைப் பகிரங்க மாக ஒத்துக்கொள்வார்களா?
புதுமாத்தளனில் புலிகள் யாரையும் பல வந்தமாகத் தடுத்து வைத்திருக்கவில்லை என் பது அக்காலத்தில் சொல்லப்பட்ட இன்னொரு பொய். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பொய்த் தக வலை அடிக்கடி வெளியிட்டார்கள்.
மக்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே புலிகளுடன் தங்கியிருக்கின்றார்கள் என்று இவர்கள் கூறி னார்கள். ஆனால் புதுமாத்தளனிலிருந்து விடு விக்கப்பட்டு இப்போது நிவாரணக் கிராம ங்களில் தங்கியுள்ள மக்கள் சொல்லும் சோக கதைகள் இந்தப் பொய்யைத் தோலுரித்துக் காட்டுகின்றன.
நிவாரணக் கிராமங்களில் மக்கள் கைதிக ளாக நடத்தப்படுகின்றார்கள் என்பது இப் போது கட்டவிழ்த்து விடப்படும் பொய். நிவாரணக் கிராமங்களின் பக்கம் திரும்பி யும் பார்க்காதவர்களே இப்பிரசாரத்தில் ஈடு படுகின்றார்கள்.
நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்களின் தேவைகளுக்கும் நல ன்களுக்குமாக நாளொன்றுக்கு இருபத்தை ந்து கோடி ரூபா அரசாங்கத்தினால் செலவி டப்படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து நிவா ரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொ ண்ட எல்லோரும் இடம்பெயர்ந்த மக்களுக் குச் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் பற்றி வியந்து பேசியிருக்கின்றார்கள்.
இடம் பெயர்ந்தவர்களுக்கு வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவு வசதிகள் செய்துகொடுக் கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறியிருக்கின்றா ர்கள். நிவாரணக் கிராமங்களுக்கு ஒருபோ தும் செல்லாதவர்களே விமர்சனம் செய்கின் றார்கள்.
டாக்டர்களின் பெயரில் வெளியாகிய பொய்த் தகவல்கள் பற்றிய உண்மை கால ந்தாழ்த்தி வெளிவந்தது போல, எல்லாப் பொய்ப் பிரசாரங்கள் பற்றிய உண்மையும் நிச் சயம் பகிரங்கமாக வெளிவரும்.
0 commentaires :
Post a Comment