7/10/2009

சுனாமி வீட்டுத்திட்டத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்ட காரைதீவு மக்கள் முதலமைச்சரை சந்தித்து முறைப்பாடு.


இன்று கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலகத்தில் காரைதீவு கிராமத்தில் வசிக்கும் 27 குடும்பங்கள் சுனாமி வீட்டுத்திட்டத்தின் கீழ் தாம் புறக்கணிக்கப்பட்டது என தெரிவித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக அம்மக்களிடம் பேசிய முதலமைச்சர், அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, உரிய அதிகாரிகளையும் தொடர்புகொண்டு மிக விரைவில் இது தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து தருவதாகவும் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment