7/20/2009

முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காங்கேயன் ஓடை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற 30 வருட புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில்



காங்கேயன் ஓடை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் எ.எல.எம்.ரிபாய் மௌலவி தலைமையில் நடைபெற்ற புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஷ்புல்லா, ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் உருத்திரா, போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் சிறிதரன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம், மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி.சத்தியசீலன், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு முதல்வர் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுத்தப்படவேண்டும் இதற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் மதப்பாகுபாடின்மை, சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பவை சீராக அமைவதன் ஊடாகவே எமது நாட்டின் சகல பாகங்களிலும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்பு அமையும். இதுபோன்ற மத நிகழ்வுகளில் இனமத பேதமின்றி அனைவருமே பங்கு கொள்கின்ற வேளையில் அனைவருமே ஒருமித்த சிந்தனை உடையவர்களாக எமது நாட்டிற்கான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் வேண்டி நிற்பவர்களாக மாறிவிடலாம். பல நெடுங் காலமாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட குரோதங்கள் மறக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுத்துவதற்கு இலங்கையில் வாழ்கின்ற அனைத்தின மக்களும் ஒருமித்த கருத்துக்களோடு ஒரே குடையின் கீழ் ஒன்று திரளவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் மாகாண அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஷ்புல்லா சமூகங்களுக்கடையிலான ஒற்றுமை பற்றியும் புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

0 commentaires :

Post a Comment