7/11/2009

கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர்களில் 1,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் - 9ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு என்கிறார் இராணுவ தளபதி



பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள 10ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்த சட்டப் பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இதேவேளை, ஏனைய 9ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். . வன்னியின் நடைபெற்ற இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளை விளக்கும் வகையில் "வன்னி இறுதி மகா யுத்தம்' என்ற பெயரில் கொழும்பில் நேற்று நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்

0 commentaires :

Post a Comment