இன்று (09-06-2009) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழுவின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
அண்மையில் எமது கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பாக வெளியான வதந்தியினைத் தொடர்ந்து அதுதொடர்பான உண்மை நிலைமையினை எமது கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தும் நோக்கில் உயர்மட்டக் கலந்துரையாடல் இடம் பெற்றது. எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களுமே மிகவும் திடமான ஓர் நம்பிக்கை கொண்டு ஜனநாயக ரீதியில் எம்மக்களுக்கான அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதற்காக ஓர் அடித்தளத்தினை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியானது ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.
விதிவிலக்காக எமது கட்சியில் இருந்து அரசியல் அங்கிகாரம் பெற்று மட்டக்களப்பு மாநகர முதல்வாரன திருமதி சிவகீத்தா பிரபாகரன் அவர்கள் தனது சுயவிருப்பின் பெரில் தனிப்பட்ட காரணங்களுக்காக எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியிலிருந்து விலகி தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்து தான் உத்தியோகபூர்வமாக எமது கட்சியின் தலைவரிடம் தெரிவித்துச் சென்றார்.
எமது கட்சி ஓர் ஜனநாயகக் கட்சியாகும். ஒரு தனிநபர் தான் விரும்புகின்ற கட்சியில் இணைந்து செயற்பட இந்நாட்டில் சுதந்திரமுண்டு. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகர முதல்வரின் செயற்பாடும் அவ்வாறே அமைந்தது. எமது கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்கள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்தும் எமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கட்சியின் மத்திய செயற்குழு முன்னெடுத்துச் செல்லும் என கட்சியின் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Categories: செய்திகள்
Tags:
-->

0 commentaires :
Post a Comment