6/05/2009

கருணாவின் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் உறுப்பினரான அரவான் என்றழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார்(27) இன்று(04.06.09) மட்டக்களப்பு புதூரில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது கருணாவின் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இவரின் மார்புப் பகுதியில் நான்கு குண்டுகள் பாய்ந்திருந்த நிலையில் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியில் மரணமடைந்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பிலிருந்து விடுபட்டு ஜனநாயகத்தை விரும்பி கிழக்கு மக்களுக்கான அரசியல் இருப்பிடத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சியினையும் அதன் உறுப்பினர்களையும் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் விசமிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது. ஆயுதங்களே தேவையில்லை எமது அரசியல் உறுப்பினர்களுக்கு அரசினது பாதுகாப்பே போதும் எனத் துணிந்து ஆயுதங்கள் அனைத்தையுமே ஒப்படைத்த பின்னர் இவ்வாறான கோழைத்தனமான தாக்குதல்களை நடாத்தும் ஆயுத தாரிகளை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளால்தான் எமக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் இன்று பயங்கரவாதமே முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற இந் நிலையில் நிராயுதபாணியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்துவது என்பது கிழக்கில் மீண்டும் ஜனநாயகத்திற்கான கேள்வியினைத் தோற்றுவித்திருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் அண்மைக் காலங்களாக கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இது அனைத்தையும் மேற்கொள்பவர்கள் ஆயததாரிகளே. எனவே அரசு இந்த ஆயுத தரிகளை இனம் கண்டு அவர்களிடத்திலிருக்கும் ஆயுதங்கள் அனைத்தையுமே களையவேண்டும் என்பதே ஜனநாயகத்தை விரும்பு கின்ற கிழக்கு மக்களின் எதிhபர்ப்பாகும்.
முப்பது வருடங்களாக பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிர்த்த எமது தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைத்திருக்கிறது என எண்ணத் தோன்றும் முன்பே இவ்வாறான ஆயுதக் கலாச்சாரத்தின் பிண்னணியில் ஜனநாயக அரசியல் கட்சி உறுப்பினர்களும் பொது மக்களும் கொலை செய்யப்படுகின்றமையானது கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பீதியினை தோற்றுவித்திருக்கிறது.
மட்டக்களப்பு விநாயகம்.





0 commentaires :

Post a Comment