6/09/2009

மட்டக்களப்பில் மத்தியஸ்தர் பரீட்சை

கிழக்கு மாகாண உதைபந்தாட்ட வீரர்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு, இலங்கை உதைபந் தாட்ட சம்மேளனம், கிழக்கு உதைபந்தாட்ட மத்தியஸ் தர்களுக்கான பரீட்சையை இம்மாத இறுதியில் மட்டக்களப்பில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்படி சம்மேளனம் செய்துவருவதாக அதன் மத்தியஸ்தர்களுக்கான பணிப்பாளர் ஏ. எம். யாப்பா தெரிவித்தார்.
பரீட்சைக்கு தோற்றவிருக்கும், பரீட்சகர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 26ம், 27ம் திகதிகளில் நடாத்தப்பட்டு இறுதிப் பரீட்சை 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படும்.
இது சம்பந்தமான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனச் செயலாளரும், இலங்கை உ. சம்மேளன இணைப்பாளருமான எஸ். சாண்டேஸ் செய்து வருகின்றார்


0 commentaires :

Post a Comment