6/09/2009

வணங்கா மண் தலை வணங்கியது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப் பொருட்களை எடுத்து வந்த கப்பல் ஒன்றை தாம் திருப்பி அனுப்பி விட்டதாக இலங்கை கூறுகிறது.
புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு ஒன்றினால் அனுப்பப்பட்டு கடந்த வார இறுதியில், இலங்கை கடற்படடையினரால் மறித்து அழைத்துச் செல்லப்பட்ட அந்தக் கப்பலில், சிரியா மற்றும் எகிப்திய மாலுமிகளும், பிரிட்டிஷ் தமிழர் ஒருவரும் மற்றும் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர்.

'கப்டன் அலி' என்னும் அந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அது கொழும்பு துறைமுகத்துக்குள் சென்று பொருட்களை இறக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கடற்படையின் சார்பிலான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கப்பலை அனுமதிக்காத காரணத்தால் அதிலிருந்த நூற்றுக்கணக்கான தொன் எடை கொண்ட பொருட்கள் வீணாகப் போகாதா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், அந்த முடிவு பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்டதாகவும், தன்னால் அது குறித்து எதுவும் கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.
அது குறித்துக் கருத்துக் கூற பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் எவரும் உடனடியாக கிடைக்கவில்லை.
தமிழ் சமூகத்தினரால், நல்லிணக்க நோக்கில் அனுப்பப்பட்ட இந்த கப்பலில் வந்த பொருட்களை பயன்படுத்துவதில்லை என்று எடுக்கப்பட்ட அந்த முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக அந்த கப்பலை அனுப்பிய புலம்பெயர் தமிழர் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment