நாளொன்றுக்கு ஏழாயிரம் பேர் கென்யாவுக்குள் பிரவேசம்
கென்யா, ஜூன். 04 ராய்ட்டர்
சோமாலியாவில் தொடரும் மோதல்க ளால் கென்யாவுக்குத் தப்பிச் செல்லும் அகதி களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஐ. நா. அதிகாரி நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். சோமாலிய அரசைக் கவிழ்ப்பதற்காக இஸ் லாமியப் போராளிகள் மேற்கொள்ளும் தாக் குதலில் வெளிநாட்டுப் போராளிகளும் இணைவதாகவும் அந்த அதிகாரி தெரிவித் தார்.
இதனால் அரச படைகளுக்கும், அல் ஷெபாப் இஸ்லாமிய போராளிகளுக்குமி டையே மோதல்கள் உக்கிரமாக இடம் பெறுகிறது. மக்கள் உயிர்களுக்கஞ்சி இருப்பி டங்களை விட்டு அகதிகளாக கென்யாவுக் குத் தப்பியோடுகின்றனர். நாளொன்றுக்கு சுமார் ஏழாயிரம் பேர் கென்யாவுக்குத் தப்பி வருவதாகவும் ஐ. நா. அதிகாரி கூறினார்.
சோமாலியாவில் 1991 ம் ஆண்டிலிருந்து உள்நாட்டு மோதல்கள் தலைதூக்கின. இது வரை எண்பதாயிரம் பேர் கொல்லப்பட் டுள்ளனர். இலட்சக்கணக்கானோர் அகதிக ளாக கென்யாவுக்குள் தப்பி வந்தனர். இன் னும் சிலர் எதியோப்பியா டிஜிபோட்டி ஆகிய நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். 15 வது தடவையாக சோமாலிய அரசை வீழ்த்துவதற்கான முயற்சிகளும் போர்க ளும் சோமாலியாவில் இடம் பெறுகின்றன.
அகதிகளைக் கையாள தேவையான நட வடிக்கைகளைச் செய்துள்ளதாகத் தெரிவித் துள்ள கென்யா அரசாங்கம் அகதிகளின் தொகை அதிகரிக்குமானால் வேறு ஏற்பா டுகள் செய்ய வேண்டிவரும் எனத் தெரிவி த்துள்ளது. மழை காலம் ஆரம்பித்தால் நிலைமை மேலும் மோசமடையும். எனவே அகதிகளுக்கான வீடுகளைக் கட்டும் பணி கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளனவென்றும் கென்யா அரசு அறிவித்துள்ளது.
இரண்டு இலட்சம் வீடுகள் அமைக்கப்பட்டு அகதி கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சோமாலி யாவுக்கு இராணுவ உதவிகளை வழங்கி எதியோப்பியா, ஆபிரிக்க யூனியனின் கோரி க்கைக் கிணங்கப் படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டது. ஆபிரிக்க யூனியன் சோமாலியாவின் உள்நாட்டுப் போரை முடி த்து வைக்க முயல்கின்ற போதும் இதுவரை அம் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
0 commentaires :
Post a Comment