6/10/2009

மட்டக்களப்பு மக்களின் மன உணர்வுகளை விலைபேசும் கைங்கரியமே மேயர் சிவகீதாவின் கட்சித்தாவல். -புளியந்தீவு சுதாகர்-.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற அமைப்பின் ஊடாக அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்ட திருமதி.சிவகீதா அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி சி.சு.கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். ரி.எம்.வி.பி. யில் இருந்து விலகுவதற்கோ வெளியேறுவதற்கோ இவர் தரப்பில் இருந்து எந்தக் காரணமும் வைக்கப்படவில்லை. மாறாக எவ்வித அழுத்தங்களோ மூளைச்சலைவைகளோ தன் முடிவுக்கு காரணம் அல்ல என்பதை மட்டுமே தெரிவித்தள்ளார். இதனை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கும் அளவிற்கு அவருக்கு அழுத்தம் இருந்துள்ளது என்பது புலனாகின்றது. கடந்த வாரம் முதலமைச்சர் வெளிநாடு சென்றிருந்த வேளையில் மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சர் முரளிதரன் நேரடியாகவே கட்சி மாறாதவிடத்து பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படும் என்பதை தெரிவித்தார். இது மட்டக்களப்பு மக்கள் அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் கருணா அம்மானின் பாராளுமன்றத் தேர்தல் கணக்கு வழக்குகளுக்காக மேயர் பலியாக்கப்பட்டிருக்கின்றார் என்பது புலனாகின்றது. எது எப்படியிருந்த போதிலும் ரி.எம்.வி.பி.யில் இருந்து விலக மேயருக்கு தகுந்த காரணம் எதுவும் இல்லை. அந்த வகையில் தமது சொந்தக் கட்சிக்கும் அக்கட்சிக்காக வாக்களித்த மட்டக்களப்பு மக்களுக்கும் சிவகீதாவின் இந்த முடிவானது துரோகம் இளைத்துள்ளதென மக்கள் விசனப்படுகின்றனர். இவரது கட்சி தாவலானது மட்டக்களப்பு மக்களின் மனவுணர்வுகளை விலைபேசும் கைங்கரியமேயாகும். எது எவ்வாறிருந்த போதிலும் ரி.எம்.வி.பி.யில் இருந்து வெளியேறும் அவரது முடிவை கட்சியின் உயர் பீடம் முழுமையாக மதித்து அவரது அரசியல் சுதந்திரத்துக்கு இடமளித்திருக்கின்றமை பாராட்டுதற்குரியது.



0 commentaires :

Post a Comment