6/12/2009

எமது கட்சியின் தனித்துவம் பேண வேண்டும்..- ஆஸாத் மௌலானா.


எமது கட்சியின் தனித்துவம் பேணிக் கொண்டு அரசாங்கத்தின் உற்ற பங்காளியாக இருந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விலும் அபிவிருத்தியிலும் காத்திரமான பங்கு வகிப்போம். – தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர்.- ஆஸாத் மௌலானா.
இன்றைய சூழ்நிலையில் எமது கட்சியின் தனித்துவத்தைப் பேணிக் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசின் உற்ற பங்காளியாக இருந்து தமிழ் மக்களுக்காக முன்வைக்கப்படுகின்ற அரசியல் தீர்விலும் ,அபிவிருத்தியிலும் காத்திரமான பங்கு வகிப்போம். இது தொடர்பில் எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான கட்சியின் உயர்பீடம் உறுதியுடன் செயற்படுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
பன்னெடுங்காலமாக அரசியலிலும் , அபிவிருத்தியிலும், ஆயுதப் போராட்டத்திலும் மேலாதிக்க சக்திகளினால் ஒதுக்கப்பட்ட கிழக்கு மக்களின் காலத்தின் தேவையாக அவர்களின் உரிமைக் குரலாகவே மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க 2004ம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உதயமானது. இது வெறுமனவே உருவாக்கப்பட்ட ஓர் கட்சி அல்ல. மாறாக பலரின் செங்குருதியும் , கண்ணீரும் சிந்தப்பட்டு , பலரின் உயிர்கள் காணிக்கையாக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கமாகும். இதற்கான அரசியல் அஙகி;காரத்தையும் மக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தையும் எமது மக்கள் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் , மாகாணசபைத் தேர்தலிலும் வழங்கி இருந்தார்கள். தமது தனித்துவத்தைப் பேணுவதன் ஊடாக எமது மக்களின் அரசியல் பேரம் பேசும் சக்கியை அதிகரித்து, அதனுர்டாகவே எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் ,அபிவிருத்திகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது எமது மக்களினால் என்றோ அங்கிகரிக்கப்பட்ட ஒருநிலையான வாதமாகும். அதற்கிணங்கவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்பட்டு வருகின்றது.
இன்றைய மஹிந்த ராஜபக்ஸ அரசானது பயங்கரவாதத்தை வெற்றி கரமாக தோற்கடித்ததுடன், தமிழ் மக்களுக்கான காத்திரமான அரசியல் தீர்விலும் உறுதி யாக இருக்கின்றது. அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 13வது அரசியல் சீர்திருத்தம் தொடர்பிலும் அதற்கு அப்பாலான தீர்வு தொடர்பிலும் பேசி வருகின்றார். நாங்கள் இப்போது இவ் அரசாங்கத்தின் உற்ற பங்காளியாக நெருக்கமான தோழனாக இருக்கின்றோம். இவ்வரசாங்கத்தை பலரும் ஏற்றுக் கொள்வதற்கு முன்பாகவே நாங்கள் நேசக்கரம் நீட்டி அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள். எனவே எங்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஒருதுளியும் கருத்து வேறுபாடுகிடையாது. நாங்கள் ஒரே பாதையில் பயனிக்கின்றோம்.
தமிழ் மக்களின் துரதிஸ்டம் காலத்திற்கு காலம் காட்டிக் கொடுப்புக்களும் , களுத்தறுப்;புக்களும் உள்ளிருந்துதான் ஆரம்பிக்கப்படுகின்றன. அதேபோன்றுதான் இப்போது ஒரு சிலர் எமது கட்சியின் நிழலில் வளர்ந்துவிட்டு , எம்மையே நசுக்க முற்படுகின்றார்கள். இந்த யதார்த்தை மக்கள் நன்கு புரிந்துள்ளார்கள். எனவே அவர்கள் உரிய காலத்தில், உரிய வேளையில்,உரிய முடிவினை எடுப்பார்கள். அப்போது மீண்டெழும் நாங்களும் எங்கள் மக்கள் சக்தியும் தனித்துவத்தை நிருபித்து, இவ் அரசிற்கு இன்னும் பலம் சேர்ப்போம். அதனூடாக எமது மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் வென்றெடுப்போம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment