நீண்டகால கொடிய யுத்தம் இலங்கையில் முடிவுக்கு வந்திருக்கிறது. வெல்ல முடியாதவர், தமிழ்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதி… வீ வாண்ட் தமிழீழம், அவர் லீடர் பிரபாகரன் என்றெல்லாம் கொதித்துக் கூத்தாடிய புகலிடம் அடங்கிப்போனது. பல ஆண்டுகளாக வேர்கொண்டு சடைத்து நின்று தமிர்கொண்ட தமிழ்ப்பாசிசத்தின் ஒரு வடிவம் அழிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்வீரம் மறவர்குலம் மாவீரம் என்னும் கதையாடல் கேலிக்கூத்தாகிவிட்டிருக்கிறது. கடந்த இரண்டுவருடமாக தொடர்ந்து வந்த யுத்தம் மிகப்பெருமளவிலான தமிழர்களைப் பலியெடுத்திருக்கிறது. விடுதலைப்புலிகள் தமிழ்மக்களது விடுதலைக்கான ஒரு இயக்கமாக வளரவில்லை என்பதை நாம் பல ஆதாரங்களுடன் தெளிவாக முன்வைத்திருக்கிறோம். மக்களை ஆயுத முனையில் மேய்த்துச் செல்லக்கூடியளவுக்கே அவர்களது செயற்திறன் உள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கிறோம். தனியே இராணுவரீதியாக மட்டுமே சிந்திக்கத் தெரிந்த விடுதலைப்புலிகள் வன்னியில் கடந்த காலத்தில் கட்டாய இராணுவப் பயிற்சிக்காக சிறுவர்களைக் கடத்திச் சென்றது குறித்து நாம் எமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறோம். விடுதலைப்புலிகள் இயக்கமானது பாசிசத்தின் உச்ச வடிவமாக இருந்து தமிழ்மக்களையும் தனக்குக்கீழ் கொண்டுவந்தது. ஒட்டுமொத்த தமிழினமே பாசிசமயப்படும் நிலையில் விடுதலைப்புலிகளது ஒவ்வொரு செயற்பாடுகளும் நகர்வுற்று வந்தது. இறுதியில் தனது இருப்பிற்காகவே ஆயிரக்கணக்கான மக்களையும் பலிகொடுத்தது.
மக்கள் உயிர்மீது அக்கறை கொண்டவர்களென காட்டிக் கொண்ட புகலிட படையெடுப்புகள் யாவும் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாப்பதில்தான் மையம் கொண்டிருந்தது. இந்தப் படையெடுப்புகளில் பல்லாயிரம் அப்பாவி மக்கள் அள்ளுண்டு இழுபட்டு சென்ற சூழலை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் புத்திஜீவிகள், மனிதநேயம் பேசுபவர்கள், மாற்றுக்கருத்தியலை மதிப்பவர்கள் என ஒரு சாரார் இந்தப்புலிப்பாசிசத்தை தக்கவைப்பதற்காக யுத்த நிறுத்தம் கோரியதையும் சமாதானக் குரல் கொடுத்ததையும் தான் எம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்று பாசிசம் அழிக்கப்பட்ட நிலையில் மாற்றுக் கருத்தியல் பேசும் ஒரு சாரார் தமிழ் பேசும் மக்களது அரசியல் நிலையானது வெறுமையாகிப் போய்விட்டதாக வருந்துகிறார்கள். இலங்கை அரசாங்கம் எனிமேல் எம்மை அடிமைகளாகவே வைத்திருப்பார்கள் என தமது “தீர்க்கதரிசனப் பார்வையை“ எமக்கும் காட்ட முனைகின்றார்கள். தமிழ் பிரதேசம் எங்கும் சிங்கள மயமாகிவிடுமாம் என்றும் புலம்புகின்றார்கள். புலிகளின் பாசிச கலாச்சார இராட்சியத்தில் இவர்கள் எந்த சுதந்திரத்தை அனுபவித்தார்கள் என்று கேட்கின்றோம். நினைத்தை எழுதவும், நினைத்ததை பேசவும், புலிகளின் இராட்சியத்தில் இவர்களுக்கு கிடைத்த சுதந்திரம்! சிங்கள அரசிடம் இருந்து கிடைக்காதா என்று கேட்கின்றோம்.
புலிப் பாசிசமும் யாழ்சாதிய மேலாதிக்கமும் கைகோர்த்து திரிந்த காலங்கள் எமக்கு மிக நல்ல அனுபவங்கள். புலிப்பாசிசம் ஒழிக்கப்பட்ட பிற்பாடு யாழ்சாதியம் இவ்வாறுதான் தன் முகத்தைக் காட்டும் என்பதையும் நாம் அறிவோம். பல்லாயிரம் ஆண்டுகளாக பக்கத்து வீட்டு வெள்ளாள மேலாதிக்க சாதியினருடன் வாழ்ந்த எமக்கு சிங்களவன் அருகில் இருப்பதால் ஒன்றும் குடிமூழ்கிவிடாது. வரும் காலங்களில் கிழக்கைப்போல் வடக்கிலும் பல்வேறு இன மக்களும் சேர்ந்து வாழும் சூழலை உருவாக்க அரசியல் பணிபுரிவோர் முயற்சிக்கவேண்டும்.
எமது தலித் சமூகத்திற்கு வெறும் அரசியலால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது. நாம் எமது பண்பாட்டுக் கலாச்சாரத் துன்பத்திலிருந்தும் விடுதலையடைய விரும்புகின்றோம்.
கடந்த மே17ந் திகதிவரை ஈழமெங்கும் தேவையற்ற ஒரு யுத்தத்தினால் மரணித்த அத்தனை மக்களுக்கும் நாம் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது கலாச்சாரம் பற்றியும் அதனோடு இயங்கும் சாதியம் பற்றியெல்லாம் நாம் தந்தை பெரியாரிடமிருந்து கற்கவேண்டியது ஏராளம். எனவேதான் தலித் மக்களுக்கான அரசியல் போராட்ட அவசியத்துடன் எமது கலாச்சாரத் துன்பத்திலிருந்தும் நாம் விடுதலையடைய வேண்டியவர்களாயுள்ளோம். இதில் இணைக்கப்பட்டுள்ள பெரியாரின் உரை எமது கலாச்சாரத்தை குலைத்துக் காட்டுகின்றது.
தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

0 commentaires :
Post a Comment