கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பணிப்பின் பேரில் அசிசி சிறுவர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அசிசி இல்லமானது பல பொறியியலாளர்களையும், வழக்கறிஞர்களையும், புத்திஜீவிகளையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறான இல்லங்கள் மூலம் யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்டுவது வரவேற்கத்தக்க விடையம். கிழக்கு மாகாண முதலமைச்சரும் இவ்வாறான பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும், இவ்வாறான இல்லங்களுக்கும் பல வழிகளில் இன, மத, மொழி பேதமின்றி உதவிகளை புரிந்துவருகின்றார். எதிர்காலத்தில் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வாறான உதவிகளையும், சேவைகளையும் வழங்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த அசிசி சிறுவர் இல்லத்திற்கு முதலமைச்சரின் பணிப்பின் பெயரிலேயே விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும், இங்கு உள்ள தேவைகளை அவரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார். இந்த விஜயத்தின் போது போப் அரசசார்பற்ற நிறுவனத்தின் இணைப்பாளர், சர்வோதய சீட்ஸ் நிறுவன மாவட்ட பணிப்பாளர் மற்றும் பல அதிகாரிகளும் விஜயம் செய்திருந்தனர். இவர்கள் அசிசி நகர் வீடமைப்புத் திட்டத்தையும் பார்வையிட்டனர்.
இந்த அசிசி இல்லமானது யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மேம்பாட்டிற்காகவும், வலுவாக்கத்திற்காக குருக்கள்மடத்தில் 1982ம் ஆண்டு கிறிஸ்தவ பாதிரியார்களால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டுவருகின்றது. இவ்வில்லத்தில் 1ம் தரம் தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்கும் 61 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றனர்.கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஏற்கனவே ஜீவஜோதி இல்லத்திற்கு பஸ்வண்டியும், இந்த அசிசி இல்லத்திற்கு ஒலிபெருக்கியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories: செய்திகள்
Tags:
-->
0 commentaires :
Post a Comment