6/06/2009

சுட்டுக்கொல்லப்பட்ட ரி.எம்.வி.பி உறுப்பினர் அரவானின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியின் உறுப்பினரான அரவான் என்றழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார்(27) நேற்று அவரது இல்லத்தில் வைத்து கருணா குழுவின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் சுமார் மாலை 4.30மணியளவில் சின்னப்பாரதிபுரம் பொது மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவதற்கு ரி.எம்.வி.பியின் முக்கியஸ்த்தர்கள் மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பின்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
மட்டக்களப்பின் இயல்பு வாழ்க்கையினைக் குழப்பும் நாசகார சக்கிகளின் கைவரிகை ஓங்கிக் கொண்டே போகின்றது. ஆயுதங்களை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பது மற்றும் கடத்தல் கப்பம் கோரல், மிரட்டல், கொலை என அவர்கள் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் அதனை வெளியே சொல்லப் பயப்படுகின்றார்கள். ஆனால் என்றோ ஒரு நாள் அவர்;களின் ஆயுதங்கள் அனைத்தம் பறிக்கப்பட்டு சட்டத்தின் முன் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள். மக்களே பயப்பட வேண்டாம்.


0 commentaires :

Post a Comment