19 வயது பிரிவுக்குட்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைக ளுக்கிடையே நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி 2009 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. நேற்றுமுன்தினம் (3) திருகோணமலை மெக்கெயிஷர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தச் சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து 8 பாடசாலைகளைச் சேர்ந்த உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றின.
வலய, மாவட்ட, மற்றும் மாகாண மட்டங்களில் தொடர் சம்பியனான கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மாகாண மட்ட இறுதிப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரியை எதிர்த்தாடி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிக் கொண்டது.
இந்தச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி 2 ஆம் இடத்தையும் ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயம் 3 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த 3 பாடசாலைகளும் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கிண்ணியா கல்வி வலயத்தில் இருந்து 2 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment