செங்கலடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபையினை கிழக்கு மாகாண முதலமைச்சரும் ரி.எம.;வி.பி கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (10.06.09) சென்று பார்வையிட்டார். ஏறாவூர் பற்று பிரதேசசபைத் தவிசாளர் ஜீவரங்கன்(உருத்திரா) மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்களுடன் கலந்துரையாடிய முதல்வர், பிரதேச சபையின் செயற்பாடுகள் மற்றும் உத்தியோகஸ்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் தெரிந்து கொண்டார். அத்தோடு பிரதேச சபையினால் எவ்வாறான அபிவிருத்தித் திடட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பது தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டமுதல்வர், அதிலும் குறிப்பாக கல்வி தொடர்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலர் பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து உத்தியோகஸ்த்தர்கள் மத்தியில் பேசிய முதல்வர் எமது மாகாணத்திற்கு வேலை செய்கின்றோம் என்கின்ற அர்ப்பணிப்புடன் அனைவருமே ஒன்றிணைந்து எமது கடமைகளை செவ்வனே செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து உத்தியோகஸ்த்தர்கள் மத்தியில் பேசிய முதல்வர் எமது மாகாணத்திற்கு வேலை செய்கின்றோம் என்கின்ற அர்ப்பணிப்புடன் அனைவருமே ஒன்றிணைந்து எமது கடமைகளை செவ்வனே செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
0 commentaires :
Post a Comment