யுத்தம் முடிந்த நிலையில் தமிழ் சமூகத்தின் தலைவிதி அகதி வாழ்வாகிப் போனது என்ற அச்சமே உண்மையாகியுள்ளது. இன்று இந்த மக்களின் எதிர்பார்ப்பும் ஆதங்கமும் அவர்களது சொந்த இடங்களில் சென்று வாழ்வதே ஆகும் இதனை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையாக நிறைவேற்றி மக்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பும் மீழ் குடியேற்ற செயற்பாடுகளை எவ்வாறு நம்பிக்கை கொள்வது?
உண்மையில் கிழக்கு மாகாணத்தில் மாவிலாறிலே தொடங்கிய யுத்தம் வட மாகாணத்தின் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் முடிவடைந்து விட்டதுடன் சமாதானக்காற்றும் வீசத் தொடங்கியுள்ளது.
கிழக்கின் யுத்தம் முடிவடைந்து “கிழக்கின் உதயம்” கோசம் வானளாவ எழும்பிய வேகத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் கட்டம் கட்டமாக தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதில் விசேட பொருளாதார வலயமாக சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கடற்கரைச் சேனை, கூனித்தீவு, நவரத்னபுரம் கிராம சேவையாளர் பிரிவுகள் பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவாக இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் 615 குடும்பங்களை சேர்ந்த 2121 நபர்கள் மட்டக்களப்பில் 12 நலன்புரி நிலையங்களிலும், 136 குடும்பங்களை சேர்ந்த 465 நபர்கள் உறவினர்கள் நண்பர்களுடனும், திருகோணமலை, மூதூர், கிளிவெட்டி, பட்டித்திடல், மணல்சேனை நலன்புரி நிலையங்களின் 493 குடும்பங்களை சேர்ந்த 2230 நபர்களும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் அநேகர் தமது சொந்த காணிகளில் விவசாயம் செய்தும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டும் தமது வாழ்வை சீராக நடாத்தி வந்தவர்கள் இவர்கள் தற்போது சுமார் பல்லாயிரம் ஏக்கர் காணிகளையும், உடமைகளையும், வதிவிடங்களையும், கால்நடைகளையும், இழந்து நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். இவர்களுக்காக குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் விஸ்த்தீரணமுள்ள மாற்று இடங்களை தெரிவு செய்யும்படி பலமுறை வற்புறுத்தியும்,ஒதுக்கீடு செய்தும் அரசாங்கம் சுட்டிக்காட்டும் காணிகள் குடியிருப்புக்கு பொருத்தமற்றதென நிராகரித்து விட்டனர் இதன் காரணமாகவே இம்மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஜீன் மூன்றாம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற தேசிய வீரர்களின் அணிவகுப்பு விழாவின் போது எமது அதி உத்தம ஜனாதிபதி அவர்கள் சிங்களத்திலும், தமிழிலுமாக உரையாற்றிய பொழுது தமிழ்மக்கள் அனைவரும் இந்நாட்டு மக்கள், இவர்கள் எனது மக்கள், எனது சொந்தக்காரர்கள், எனது நண்பர்கள் என்று சர்வதேசத்திற்கும் கேட்கும் வண்ணம் உரையாற்றியதுடன் இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் தமிழ் மக்களின் இதயங்களை கவரும் வண்ணம் அம்மக்களோடு எதுவித வேற்றுமைகளுமின்றி வாழவேண்டும் என விடுத்த கோரிக்கையானது முற்றும் முழுவதுமாக நிறைவு பெறவேண்டுமாகவிருந்தால் முதலில் யுத்தம் தொடங்கிய மாவிலாறு போல மீள் குடியேற்றமும் சம்பூர் தமிழ் மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வண்ணமாக பாதுகாப்பு அல்லது விசேட பொருளாதார மையமாக மாற்றப்பட்டுள்ள பகுதிகளை மீளப்பெற்று திரும்பவும் அப்பகுதியில் வாழ்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதுவதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களை கட்டி ஆள்வதுடன் இம்மக்கள் விடும் கண்ணீரையும் துடைத்தவராவார்.
இந்த மேற்படி விடயங்களை அம்மக்களை நான் அண்மையில் சந்தித்த பொழுது கண்ணீருடனும், கவலையுடனும் ஜனாதிபதியவர்கள் தம்மை தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினர் எனவே இவர்கள் விடயங்களை அதி உத்தம ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றி வைப்பார் என நானும் நம்புவதனூடாக அனைவரும் அவர் மீது நம்பிக்கை கொள்ளலாம்.
அத்தோடு வடக்கில் யாழ்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது புத்தளம்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்களும், தற்போது இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களும் “:வடக்கின் வசந்தம்” ஆரம்பமாகும் இவ்வேளையில் மீளவும் தமது சொந்த இருப்பிடங்களுக்கு குடியமர்த்தப்படும் பொழுது அம்மக்களின் வாழ்விலும் வசந்தம் உருவாகும் என நம்புவதுடன் எமது அதி உத்தம ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என எவருமிருக்க முடியாது அனைவரும் இந்நாட்டு மக்களே இலங்கை தேசத்தின் குடிமக்களே என பாராளுமன்ற அமர்வின் ஆரம்பவிழாவில் கூறியதும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
ஆகவே அனைத்து மக்களினதும் கண்ணீரையும் அதி உத்தம ஜனாதிபதி அவர்களும் அவரின் அதிகாரிகளும் நிறைவேற்றி வைப்பார்கள் எனக் கூறுவதுடன் மக்கள் ஜனாதிபதி அவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளலாம் எனக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

0 commentaires :
Post a Comment