வடக்கில் நடைபெறவுள்ள இரண்டு உள்ளூராட்சித் தேர் தல்களிலும் போட்டியிடுவதற் கான முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கின் றது. இக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு மட்டங்களில் இதற்காக முயற்சிக்கின்றார்கள்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண த்தில் ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். இன்னொருவர் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் கூட்டணி அமைப்பதற்குப் பகீர தப் பிரயத்தனம் செய்கின்றார்.
கூட்டணி அமைந்துவிட்டது எனப் பொய்யான செய்திகளைப் பத்திரிகைகளுக்குக் கசிய விடுவதுடன் இவரது முயற்சி முடிந்து விட்டது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்வதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டன.
தமிழ் மக்களின் தனிப்பெரும் பிரதிநிதி கள் எனத் தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னர் யார் யாரையெல்லாம் துரோகிகள் என்று வசை பாடினார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்பதற்கு இப்போது முயற்சிப்பதிலிருந்து இவர்களின் தனிப் பிரதிநிதித்துவக் கோஷம் போலியானது என்பது தெளிவாகிவிட்டது.
தமிழ் மக்களின் இன்றைய நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப் பேற்க வேண்டும் என்று தமிழர் விடு தலைக் கூட்டணித் தலைலர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி விடுத்த அறிக்கை நேற்றைய பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடய ங்கள் அத்தனையும் உண்மையானவை.
புலிகளின் தவறான செயற்பாடுகள் காரணமாகத் தமிழ் மக்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியிருக் கின்றனர். கிட்டத்தட்டப் படுகுழியில் தள்ளப்பட்ட நிலையிலேயே இன்று தமிழ் மக்கள் உள்ளனர். புலிகளின் தவறான செயற்பாடுகள் அனைத்துக்கும் பக்கத்துணையாக இருந்த காரணத்தி னால் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புத் தலைவர்கள் பிரதான பொறுப்பாளி கள் ஆகின்றனர்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் தமிழ் மக்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்த வேளையில் கூட இவர்கள் மக்களின் நலனில் சிறிதளவேனும் அக்கறை செலுத்த வில்லை. புலிகளின் நலனிலேயே கவன மாக இருந்தார்கள்.
தமிழ் மக்களின் இழப்புகளுக்கும் அழி வுகளுக்கும் புலிகளுடன் சம பங்காளிக ளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் இம் மக்கள் மத்தியில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமானால் தங்களின் கடந்த கால மக்கள் விரோத செயற்பாட்டுக்குப் பகிரங்கமாக மன்னிப் புக் கேட்பதோடு மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய நடைமுறைச் சாத்திய மான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
தமிழ் மக்கள் அளப்பரிய அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் முகங் கொடுத்ததற்கும் அவர்களின் அரசியல் போராட்டம் பல தசாப்தங்கள் பின்தள்ளப் பட்டதற்கும் பொறுப்பாளிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புத் தலைவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் முன் குற்றவாளிகளாகவே உள்ள னர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலை வர்கள் தங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டு தங்களைத் திருத்திக் கொள்வார்கள் எனக் கருதுவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை. இந்த நிலை யில் இவர்கள் அரசியலிலிருந்து முழு மையாக ஒதுங்குவது தான் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும்.
0 commentaires :
Post a Comment