கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ரி.எம்.வி.பி. யும் தேசிய காங்கிரசும் போட்டியிட்டன. இத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டானது வெற்றியீட்டியதன் காரணமாக கிழக்குமாகணத்தில் கூடிய வாக்குப் பலத்தைப் பெற்ற ரி.எம்.வி.பி. யின் தலைமை வேட்பாளரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சரானார். கிழக்கு மக்களின் கூடிய அபிமானத்தைப் பெற்ற ரி.எம்.வி.பி. யானது மத்தியில் ஆழும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டாலும் கிழக்கு வாழ் அனைத்து இனங்களினதும் உரிமைகள் தொடர்பாகவும், கடந்த 25 ஆண்டுகாலமாக பயங்கரவாதிகளினால் பாரிய இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலைபெற்ற தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகவும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வலுப்படுத்துவது தொடர்பாகவும் தொடர்சியாக குரல் கொடுத்து வருகின்றது. கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மக்களின் உரிமைகள் உறுதிசெய்வதற்கு யாருடனும் சமரசம் செய்யத் தயார் என்பதில் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் உறுதியாக உள்ளமையை அவரது நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
கடந்த மாதம் உள்ளுராட்சி மன்ற சட்ட திருத்தமொன்றிற்கு கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலை பாராளுமன்றம் கோரியபோது அதற்கு ஒப்புதல் அளிப்பதானது சிறுபான்மையினரின் உரிமைகளை மத்திய அரசு பறித்தெடுக்கும் செயல் என்பதனால் அதனை கிழக்கு மாகாண சபை நிராகரித்தது. அதைத்தொடர்ந்து அரசு அச்சட்ட திருத்தமூலத்தை வாபஸ் பெறவேண்டியேற்பட்டது. இந்த நிலையில் கருணா அம்மான் அவர்கள் அதிகாரப் பரவலாக்கத்துக்கு கருதுக்களை கொண்டிருப்பவர். ஒரே கட்சி, ஒரே நாடு எனக் கூறிக்கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார். கருணா அம்மான் ரி.எம்.வி.பி யின் தலைமைப் போட்டி காரணமாக அக்கட்சியை விட்டு வெளியேறி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தமையும் அமைச்சரானமையும் அண்மையில் நடந்துமுடிந்த சம்பவங்கள்.
கருணா அம்மானைத் தொடர்ந்து ரி.எம்.வி.பி. யின் முக்கிய உறுபினர்கள் எல்லோரையும் தம் பக்கம் இழுக்கும் செயலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது. இதுகுறித்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய விசனம் எழுந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பில் வந்து தங்கியிருந்த கருணா அம்மான் நேரடியாகவே மேயர் சிவகீதா பிரபாகரன் அவர்களை சந்தித்து சிறீ.ல.சு.கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களின்மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக சக்திகளை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் முயற்சிகள் மீண்டும் மீண்டும் மக்களின் மீது திணிக்கப்பட்டால் 25 வருடகாலம் புலியின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அடிமையாக்கப்பட்டிருந்து விடுதலைபெற்ற மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தும் என்பதை நாம் தெரிவிக்கின்றோம், அத்துடன் கிழக்கு மாகாணசபையினை உருவாகவிடாது தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தோல்விகண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பயங்கரவாதிகளின் முயற்சிகளுக்கு உற்சாகமூட்டுவதாகவே மேற்படி சம்பவங்கள் சாதகமாக அமையுமென்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம். இதுவிடயங்களை கவனத்தில்கொண்டு சுதந்திரமாக செயலாற்ற விரும்பும் ஜனநாயக சக்திகள்மீது தமது அதிகார பலத்தினை பிரயோகிக்க முற்படும் கருணா அம்மான் போன்றவர்கள் தமது செயற்பாட்டினை நிறுத்திக்கொள்வது கிழக்குவாழ் மக்களின் எதிர்கால நல்வாழ்விற்கு வழிசமைக்குமென நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்.–—நன்றியுடன் கு.சாமித்தம்பி

0 commentaires :
Post a Comment