தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
கௌரவ வீ. ஆனந்தசங்கரி அவர்கள் 15.06.2009 அன்று தனது 77 ஆவது அகவையை கொண்டாடுகின்றார். இவர் சகல சௌபாக்கியமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என, எமது கட்சி சார்பிலும் இலங்கை வாழ் அனைத்து இன மக்கள் சார்பிலும் வாழ்துகின்றோம்.
எங்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அதற்கு எதிராக இவரது ஜனநாயக குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவரது ஜனநாயக குரல் இனபேதமின்றி இலங்கை வாழ் அனைத்து இனம் சார்பாக ஒலிப்பதனால் தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் மற்றும் பறங்கியர் ஆகியோரின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டார். இதனால் இவர் 2006.11.16 அன்று யுனெஸ்கோ அமைப்பினால் சகிப்புத்தன்மையும் அகிம்சையும் மேம்படுத்துவதற்கான மதன்ஜித் சிங் விருதை பெற்றுக்கொண்டார்.
இந்த நாட்டின் நீண்ட கால இனப்பிரச்சனைக்கு சமஷ்டி முறையிலேயோ அல்லது இந்திய முறையிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அன்றும், இன்றும் உறுதியாக உள்ளார். இந்தக் கனவு, இவரது 50 வருட அரசியல் வாழ்வில் இன்னும் நிறைவேறாமல் இருப்பது இவருக்கு மிகுந்த மனச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது அடுத்த பிறந்த நாளில், இலங்கையில் முற்று முழுதாக ஜனநாயகம் ஏற்பட்டு, இவரது நீண்ட நாள் அரசியல் கனவு நிறைவேறி, இவரது அரசியல் வெற்றிப் பயனம் ஆரம்பித்த கிளிநொச்சி மாவட்டத்தில், எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி, மக்களோடு மக்களாக அடுத்த பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என நாம் எல்லோரும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோமாக.
தி. சுரேஷ்,
ஊடகச் செயலாளா,;
தமிழர் விடுதலைக் கூட்டணி,

0 commentaires :
Post a Comment