6/08/2009

வடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க திட்டம்ஒவ்வொரு பாடசாலைக்கும் ரூ.35 இலட்சம்


வட மாகாணத்தில் 30 புதிய பாட சாலைக் கட்டடங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் வவுனியாவில் தெரிவித்தார்.
மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இந்தப் புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.
‘வடக்கின் வசந்தம்’ 180 நாள் வேலைத்திட்டத்துடனேயே பாடசாலைக் கட்டட நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் பிரேம்ஜயந்த் ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 35 இலட்சம் ரூபாய் செலவிடப்படுமென்று தெரிவித்தார்.
இதற்குக் கேள்விப்பத்திரம் கோரப் படாமல், ‘ரேம்’ எனும் அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன் விரைவில் புரிந்து ணர்வு உடன்படிக்கை செய்துகொள் ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வட மாகாணப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த மாணவர்களினதும் குறை நிறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கு முகமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட மாநாடொன்று நடைபெற்றது.
இதில் வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தற்போதைய நிலைவரத்தை விளக்கினார்.
இந்த மாநாட்டில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்வி பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்க ளிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ஐந்து கண்காணிப்பு அலுவலகங்களை அமைப்ப தாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், அதன் செயற்பாட்டுக்கென 30 சைக்கிள்கள், சீ.டி.எம்.ஏ. தொலைபேசி வசதி, ஃபக்ஸ் இயந்திரம், பிரதிபண்ணும் இய ந்திரம் ஆகிய வசதிகளை அடுத்த வாரம் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

0 commentaires :

Post a Comment