6/12/2009

12 நாட்களாக மூடிக்கிடக்கும் மட்டக்களப்பு 3ம் குறுக்கு கல்லடித் தெரு


மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைச் குளம் மூலம் குடி தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைய வீதிகள் தோறும் குளாய்கள் புதைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு கல்லடித்தெரு வீதியில் உள்ள முக்கிய வீதியாகிய 3ம் குறுக்குத் தெருவில் இவ்வாறு குளாய் புதைப்பதற்கு வெட்டப்பட்ட பாரிய குளியொன்று மூடப்படாமல் குறித்த வீதியில் மக்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். அதாவது குறித்த பாதையில் பாதசாரதிகளைத் தவிர வேறு எந்த வாகனமும் பயணிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.
இதுகுறித்து குறித்த பகுதி மக்கள் அப்பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் இணைப்பாளர் கோல்டன் வெஞ்சமீன் அவர்களிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து கோல்டனின் அழைப்பின் பெயரில் கிழக்கு மாகாண உறுப்பினர் எ.சி.கிருஸ்னானந்தராஜா குறித்த இடத்திற்குச் சென்று நிலமையினைப் பார்வையிட்டார்.
இதுகுறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அங்கு கூடியிருந்த மக்களிடம் கூறுகையில் இதுகுறித்த வேலையினை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தின் அசமந்தப் போக்கே காரணம் எனக் கூறியதுடன் குறித்த நிறுவன அதிகாரிகளுடன் இதுவிடயமாக பேசுவதாக உறுதியளித்தனர்.
குறித்த பாதையில் வெட்டப்பட்டுள்ள குளிக்குள் காணப்படும் பாரிய கற்பாறையை அகற்றுவதில் காணப்படும் தாமதமே குறித்த வீதி மூடிக்கிடப்பதற்கு காரணம் என கோல்டன் வெஞ்சமீன் அவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் எடுத்துக் கூறினார்.


0 commentaires :

Post a Comment