6/25/2009

இலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கிழக்கு முதல்வரினால் திறந்து வைப்பு.


கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக கிராமப்புற மக்கள் தங்களது பொருளாதார திட்டங்களை மேம்படுத்துவதற்காகவும், எதிர்காலத்திற்கான சேமிப்பினை ஊக்குவிப்பதற்குமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பல்வேறு தடவை மத்திய மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளர்கள் மற்றும் பிராந்திய முகாரைமயாளர்கள், வங்கித் துறை சார்ந்த உயர்அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக இலங்கை வங்கியானது, தனது 15கிளைகளை கிழக்கு மாகாணத்தில் நிறுவுவது என உறுதியளித்திருந்தது.
அதன் வெளிப்பாடாகவே தற்போது முதற்கட்டமாக மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் முதற்கட்டமாக இலங்கை வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 23ம் திகதி கரடியனாறு, கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களிலும் இன்று(24.06.09)வாகரையிலும் 6வது கிளையாக இவ் இலங்கை வங்கிக் கிளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி; சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர், நாட்டில் எமது ஜனாதிபதி அவர்களின் தலைமையினால் பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனூடாக கிழக்கில் நல்லதோர் நிலை மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட்டு, தாம் ஒவ்வொருவரும் விரும்பிய தொழிலில் ஈடுபடுவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அண்மையில்தான் ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின்படி மீன்பிடித் தடை முற்றாக நீக்கப்பட்டு, முழு நேரமும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. எனவே விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், சுயதொழில் என்பவற்றின் மூலம் தாங்கள் ஈட்டுகின்ற வருமானங்களில் செலவு போக எஞ்சிய ஒரு பகுதியினை எதிர்கால சேமிப்புக்காக சேமிப்பிலிட வேண்டும். அத்தோடு நீங்கள் மேற்கொள்கின்ற தொழில்களை முன்னெடுத்துச் செல்வதில் ஏதாவது நிதிப் பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் வங்கியில் இலகு தவணை முறையில் மிகக் குறைந்த வட்டி வீதத்துடன் கடன்கள் வழங்கப்படும். அதனைப் பெற்று நீங்கள் உங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக வேண்டியேதான் மக்களின் காலடிக்கே வந்து சேவை வழங்கப்பகடுகின்றது.
அத்தோடு இவ் வங்கிக் கிளையினை அடகு பிடிக்கும் இடமாக மாத்திரம் கருதாது, அன்றாட பணக் கொடுக்கல் வாங்கல், சேமிப்பு, கடன் வசதிகள் பெறல் போன்ற அனைத்து முயற்சிகளையுமே மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இந் நிகழவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, வாகரைப்பிரதேச தவிசாளர் சூட்டி,முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா,வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கே.டி. கருணாரத்ன, சிரேஸ்ட பொது முகாமையாளர் (அபிவிருத்தி)சந்திரசேன, சிரேஸ்ட முகாமையாளர் சபீக், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கீர்த்திசீலன் மற்றும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.


»»  (மேலும்)

கிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட்டக் கலந்துரையாடல்.



கிழக்கு மாகாணத்திலுள்ள கணவனை இழந்த பெண்கள், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் தத்தளிக்கும் பெண்களின் வாழ்வாதார விருத்தி என்பன கருதியும் மீனவப் பெண்கள், மீனவக் குடும்பங்களின் முன்னேற்றம் கருதியும் தேசிய மீனவப் பெண்கள் ஒத்துளைப்பு மையத்தினால் வடிவமைக்கப்பட்ட பெண்கள் வலுவாக்க திட்டம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபை தலைமைக்காரியாலயத்தில் நேற்று (23.06.2009) நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள 1500 பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு அமைய மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பெண்களினால் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையினை தேசிய மீனவ பெண்கள் மையத்தினால் முதலமைச்சரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டதுடன் இது தொடர்பான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவை கேமன்குமார (தேசிய அமைப்பாளர்), தேவதாசன் (சமாதான இணைப்பாளர்), றோஸ்மேரி (பெண்கள் இணைப்பாளர), மற்றும்; மாவட்ட அமைப்பாளர்கள் அடங்கலான குழுவினரும், கிழக்கு மாகாண முதல்வரின் சிரேஸ்ட்ட ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன், இணைப்புச் செயலாளர்களான அஸாத் மௌலானா, பூ.பிரசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

»»  (மேலும்)

வடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு(ரி.எம்.வி.பி) உறுதியான ஆதரவு-பேச்சாளர்-அஸாத் மௌலானா



யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் மற்றும் வவுனியா நகர சபை தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அப்பகுதி மக்கள் பெரு வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்பதுடன். இத்தேர்தலில் அரசுக்கு எமது கட்சி புரண ஆதரவை வழங்கும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்(ரி.எம்.வி.பி) பேச்சாளர் அஸாத் மௌலானா தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
வடபகுதி பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பின் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் என்ற வகையில் இத்தேர்தல் முக்கியத்துவமானதாக நோக்கப்படுகின்றது.
அதே நேரம் இதுவரைகாலம் பயங்கரவாத துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட மக்களின் வாக்குச் சுதந்திரமும், சுயாதீனமான முறையில் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத பிடியில் இருந்து மக்களை மீட்டெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உறுதியான அரசியல் தீர்வை வழங்குவதாக கூறும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மக்கள் ஆதரிப்பதே சாலச்சிறந்த முடிவாக அமையும் அதற்காக எமது கட்சி அற்பணிப்புடன் செயலாற்றும்.
அதேநேரம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிரமாங்களில் தங்கியுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் பூரணப்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகளுடன் மீள்குடியமர்த்த செய்வதே அரசாங்கத்தின் மிக முக்கிய கடமையாகும். அதேநேரம் இந்நாட்டில் மீண்டும் அழிவுகளும் இறப்புக்களும் ஏற்படாமல் தகுந்த நிரந்தரமான அமைதியையும் சுபீற்சமான சகோதரத்துவ சகவாழ்வை கட்டியெழுப்ப தமிழ் மக்களுக்கு உறுதியான அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வே ஓரே வழியாகும் என தமது கட்சி உறுதியாக நம்புவதனையும் அவர் மேலும் தெரிவித்தார்

»»  (மேலும்)

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்பு மனு தாக்கல்

வவுனியா நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் பெயரில் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்தக் கட்சியின் தலைமை வேட்பாளராக எஸ்.என்.ஜி நாதன் போட்டியிடுகின்றார்.தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் வினோ நோகராதலிங்கமும் கலந்து கொண்டார். வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:எஸ்.என்.ஜி.நாதன்பெரியதம்பி பரஞ்சோதி (உதயன்)ஐயாத்துரை கனகையாநடராஜா மதிகரன்பொன்னையா செல்லத்துரைடேவிட் அஜித் ஸ்டீபன் சுராஜ்திருமதி மாதவராசா பாக்கியம்இராமசாமி இராமச்சந்திரன்.இரத்தினசிங்கம் சிவகுமாரன்முத்துசுவாமி முகுந்தரதன்செல்லத்துரை சுரேந்திரன்யேசுராசா பிரதீப்அருணகிரிநாதன் நாகராஜன்செல்வி ஜெஸ்லிகுமார் மதுரினிஆறுமுகம் பிரசன்னா


»»  (மேலும்)

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை, 6.5 மில்லியன் ரூபா பணம் மீட்பு - பிரிகேடியர்

முல்லைத்தீவு, வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100கிலோகிராம் தங்க நகைகள் மற்றும் 6.5 மில்லியன் ரூபா பணம் போன்றன மீட்கப்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வன்னிப் போரின் இறுதிகட்ட நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு வலயப் பகுதியில் மறைந்திருந்த புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களால் பெட்டிகளில் இடப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நகைகள் மற்றும் பெருந்தொகையான பணம் போன்றன மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வியக்கத்தினரால் மøறத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைத் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

»»  (மேலும்)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்சிளுகளுடன் இணைந்த வவுனியாவில் வேட்பு மனு தாக்கல்

வவுனியா நகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஈபிடிபி, ஈரோஸ், சிறி ரெலோ, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுகிறது. வவுனியா நகரசபைக்கான பதினொரு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ஈபிடிபி 6 வேட்பாளர்களையும் ஈரொஸ் 3 வேட்பாளர்களையும் சிறி ரெலோ 2 வேட்பாளர்களையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 வேட்பாளர்களையும் மொத்தமாக 15 வேட்பாளர்களை நியமித்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.வேலாயுதம் சுரேந்திரன்ஜயசேகர ஆராய்ச்சிகே தம்மிக லலித் ஜயசேகரபரராஜசிங்கம் உதயராசாசோமசுந்தரம் சிவகுமார்சிவன் சிவகுமார்சின்னத்தம்பி சிவசோதிபொன்னையா இரத்தினம்புவனேஸ்வரி ஜயக்கொடிஆரிப் மொகிதீன் கனி சேகுகுகதாசன் ஞானேஸ்வரிதுரைராசா ஜெயராஜ்இரத்தினசிங்கம் சிறிகண்ணன்பரமு செந்தில்நாதன்பரஞ்சோதி பிரசாத்அப்துல் பாரி மொகமது சரீப்


»»  (மேலும்)

பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப்பு

பதின்மூன்றாவது அரசியலமைப் புத் திருத்தம் அரசியல் அரங் கில் இன்று சூடான விவாதத்து க்கான கருப்பொருளாக மாநி யிருக்கின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் பதின்மூன்றாவது திருத்தம் பற்நிய வாதப் பிரதிவாதங்கள் அதிகரித்திருப்பது அரசியல் தீர்வின் அவசியம் பற்நிய பிர க்ஞை அதிகரித்திருப்பதையே வெனிப்படு த்துகின்றது.
பதின்மூன்றாவது திருத்தத்தை உடனடி யாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதன் பின் அதனிலும் பார்க்கக் கூடுத லான அதிகாரங்களுடைய ஒரு தீர்வை நடை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப் போவதாகவும் அமைச்சர்கள் மட் டத்தில் கருத்து வெனியிடப்படுகின்றது.
இதே நேரம் எதிர்ப்பும் இல்லாமலில்லை. பதின்மூன்றாவது திருத்தத்துக்கான எதிர்ப்பு இரண்டு கோணங்கனிலிருந்து வருகின்றது. சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களும் எதி ர்க்கின்றார்கள். தமிழ்த் தேசியவாதிகளும் எதிர்க்கின்றார்கள். இரு தரப்பினரும் வேறு பட்ட காரணங்களை முன்வைத்து எதிர்க் கின்றனர். இதிலிருந்து இது அடிப்படைய ற்ற எதிர்ப்பு என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
பதின்மூன்றாவது திருத்தம் தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்பது சிங்களக் கடுங்கோ ட்பாட்டாளர்கள் முன்வைக்கும் தர்க்கம். தனிநாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய ஏற்பாடு கள் எதுவும் இல்லாத நிலையில் இவர்கள் இத்தர்க்கத்தை முன்வைப்பது வேடிக்கை யாக இருக்கின்றது.
பதின்மூன்றாவது திரு த்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து வது தனிநாட்டுக் கோரிக்கையைப் பலவீ னப்படுத்தி ஐக்கிய இலங்கைக் கோட்பா ட்டை வலுப்படுத்திவிடும் என்பதாலேயே புலிகள் இத்திருத்தத்தின் Xழான மாகாண சபைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவிப்பதற்கு முக்கியத்துவம் அனித்து அவர்கள் செயற்பட்டதற்கு இதுவே கார ணம்.
பதின்மூன்றாவது திருத்தம் வட மாகாண த்தைத் தவிர மற்றைய எல்லா மாகாணங் கனிலும் இப்போது நடைமுறையில் இருக் கின்றது. வடமாகாணத்தில் இத்திருத்த த்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மற்றைய மாகாணங்கனில வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் வடமாகாண மக்களுக்கு மறுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே வெனி ப்படுத்துகின்றது. வடமாகாண மக்களைப் புறக்கணிக்கும் இந்த நிலைப்பாட்டை இனவாதம் என்று தான் கூற வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தத்தின் Xழான அதிகாரங்கள் இனப் பிரச்சினையின் தீர்வுக் குப் போதுமானவையல்ல என்பது தமிழ்த் தேசியவாதிகள் முன்வைக்கும் தர்க்கம். புலிகனின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செய ற்பட்ட காலத்தில் தெரிவித்த எதிர்ப்பை இப்போதும் தொடர்கின்றார்கள். பதின் மூன்றாவது திருத்தத்தை ஏற்று மாகாண சபை நிர்வாகத்தை நடத்தியவர்கள் கூடப் புலிகளுடனான சகவாசத்துக்குப் பின் இப் போது எதிர்க்கின்றார்கள்.
பதின்மூன்றாவது திருத்தம் இனப் பிரச்சி னைக்கு முழுமையான தீர்வாகாது என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை. எந்தவொரு தமிழ்க் கட்சியும் இதை முழுமையான தீர் வாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனாலேயே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர் வைப் பின்னர் நடைமுறைப்படுத்தப் போவ தாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.
பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்று நடை முறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் இழக்கப்போவது எதுவுமில்லை எனவும், இதுவரை இல்லாத சில உரிமைகளை அவர்கள் பெறுவார்கள் எனவும் முன்னர் கூநியதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின் றோம். முழுமையான தீர்வை அடைவதற் கான முயற்சியை மேற்கொள்வதற்கும் இது தடையாகாது.
முழுமையான தீர்வு கிடைக் கும் வரை எதையும் ஏற்பதில்லை என்ற நிலைப்பாடு தமிழ் மக்களை இன்று நட் டாற்நில் விட்டிருக்கின்றது. இந்தக் கசப் பான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
thinakaran .edito


»»  (மேலும்)

புலிகள் மீதான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங்கள் நீடிப்பு

புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.
மோதல்களின் முடிவின்போது மோதல் பகுதிகளி லிருந்து பொது மக்களை வெளியேறவிடாது புலி கள் தடுத்துவைத்திருந்தனர்.

பொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை பேராபத்துக்குள் தள்ளியிருந்தனர். இந்த உத்திகளையே கடந்த 30 வருட காலமாக அவர்கள் கையாண்டிருந்தனரெனவும் தெரிவித்தார்.
1997ஆம் ஆண்டு முதல் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய அவர் எதிர்வரும் 05 வருடங்க ளுக்கு புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குவதில்லை யெனத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.



»»  (மேலும்)

6/22/2009

கடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடலுணவு விலை வீழ்ச்சி


யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த பல வருடங்களாக கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கடல் வலயத்தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று சனிக்கிழமை குடாநாட்டின் சகல சந்தைகளிலும் கடலுணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த காலங்களில் மீனவர்கள் குறிப்பிட்ட தூரத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிடும் நாட்களில் மட்டுமே கடல்தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிக கடல் உணவுகளை அவர்களால் பிடிக்கவும் முடியவில்லை.

அத்துடன் மொத்த மீன் வியாபாரிகள் மீனவர்களிடம் கடல் உணவுகளை கடற்கரையில் வாங்கி அவற்றைக் குளிரூட்டிகளில் வைத்து விற்பனை செய்தனர்.
இவ்வாறான காரணங்களால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் உணவுகள் அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தன.
தற்போது 24 மணி நேரமும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் கடலில் தொழில் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இத்தடை நீக்கப்பட்டுள்ளதால் மீனவக் குடும்பங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், பலருக்கு இது நல்ல வருமானத்தைத் தருவதாகவும் கூறியுள்ளனர்.
நாளை திங்கட்கிழமை முதல் குடாநாட்டில் அதிகாலை 5 மணிக்கு கடல் உணவுகளை மக்கள் வாங்கலாம் எனவும் மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
வலி வடக்கு, வடமராட்சி கிழக்கு, தீவுப் பகுதிகளில் கடற்றொழில் நடைபெற்றால் தெற்கே கடல் உணவுகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


»»  (மேலும்)

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்



தேசிய உணவு வாரம் இலங்கையில் இன்று தொடக்கம் எதிர்வரும் இருபத்தெட்டாம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. உள்நாட்டு உணவு உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்கள் நுகர்வு செய்யப்படுவதை ஊக்குவிப்பதும் தேசிய உணவு வாரத்தின் கருப்பொருட்களாக அமைந்துள்ளன.
நாடெங்கும் இன்று தொடக்கம் ஒரு வார காலத் துக்கு இது தொடர்பான பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி செயலகத் தின் வழிகாட்டலின் கீழ் அமைச்சுக்களின் ஏற்பா ட்டில் தேசிய உணவு வாரம் அனுஷ்டிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு நாட்டிலும் உள்நாட்டு உணவு உற்பத்தி எந்தளவு முக்கியமோ உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்களை அந்நாட்டு மக்கள் நுகர்வு செய்வதும் முக்கியமாகும். இல்லையேல் உள்நாட்டு உணவு உற்பத்தி மூலம் நாடொன்று ஈட்டுகின்ற தேசிய வருமானத்தினால் பயன் கிட்டாமல் போகலாம். இறக்குமதி உணவுகளுக்காக வீணான பணத்தைச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கியம் அந்நாட்டுக்கு ஏற்படக் கூடும். எனவே தான் உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரமன்றி உள்நாட்டு உணவுப் பொருள் நுகர்விலும் எமது மக்கள் கரிசனை செலுத்த வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க் கிறது.
வெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான மோகம் இன்று நேற்று அன்றி பண்டைய காலம் தொடக்கம் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி யுள்ளது. இத்தகைய மோகம் அன்றைய காலத்தில் எமது நாட்டை ஆட்சி செய்த அந்நியர்களாலும் வாணிப நோக்கத்துக்காக நாட்டில் கால் பதித்த தூரதேச வாணிபர்களாலும் ஏற்படுத்தப்பட்டதெனக் கூறுவதே பொருத்தமாகும்.
அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளும் வாணிபக் குழுக் களும் இலங்கை போன்ற நலிந்த நிலையில் காணப் பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை வசப்படுத்தும் நோக்கில் சுவை மிகுந்ததும் போதை தருவதுமான உணவுப் பொருட்களை அறிமுகம் செய்தன.
காலப் போக்கில் எமது மக்கள் வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு அடிமையாகும் அபத்தம் ஏற்பட்டது. இத்தகைய அநாவசிய மோகத்திலிருந்து இன்னும் தான் எங்களால் விடுபட்டுக் கொள்ள முடியாதிருக்கிறது.
உள்ளூர் உணவு உற்பத்திகளை துச்சமென எண்ணு வதும் வெளிநாட்டு உணவுப் பொருட்களை மேலானதென எண்ணுவதும் எம்மத்தியில் இன்றும் காணப்படுகின்ற விவேகமற்ற சிந்தனைகளாகும்.
இறக்குமதி உணவுகள் அனைத்து விதத்திலும் தரத்தில் சிறந்தவையென எண்ணுதல் வெறுமனே அறிவுபூர்வமற்ற சிந்தனையாகும். வெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான பற்றுதலானது பணத்தை விரயமாக்கும் செயலென்பது மட்டுமே உண்மை.
இந்தப் பிற்போக்கான எண்ணத்திலிருந்து எமது மக்கள் விடுபடுவதே உள்நாட்டு உணவு உற்பத்தி யைப் பெருக்குவதற்கான அத்திவாரமாக அமையும். உள்நாட்டு உணவுப் பொருட்கள் நுகர்வை மக்கள் அதிகரித்தாலேயே உள்நாட்டு உணவு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான ஊக்குவிப்பை உற்பத்தி யாளர்களுக்கு வழங்க முடியும்.
இலங்கையானது விவசாயச் செய்கைக்கு மிகவும் உகந்ததான கால நிலைகளைக் கொண்ட நாடாக விளங்குகிறது. பிரதான உணவுப் பயிரான நெற் செய்கைக்கு மாத்திரமன்றி உப உணவுச் செய்கைக் கான அனைத்து வளங்களையும் கொண்டுள்ள நாடு இலங்கை ஆகும்.
எமது நாட்டின் வருடாந்த பருவப் பெயர்ச்சி மழையானது நெற் செய்கைக்கு மிகவும் வாய்ப் பானதாகக் காணப்படுகிறது. எமது பண்டைய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களும் நெற்செய்கைக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துள்ளன.
சகல இயற்கை வளங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ள நாம் இனிமேலும் உணவுக்காக வெளி நாடுகளை எதிர்பார்ப்பதென்பது பேதமை!
அரிசியில் தன்னிறைவு பெறக் கூடிய வல்ல மையுள்ள எமது நாடு அவ்வப்போது வெளிநாடு களிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அநாவசிய நிலைமைக்குத் தள்ளப் படுகிறது. இவ் விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உறுதியான கொள்கை யொன்றைக் கொண்டுள்ளது. ‘எமது நாட்டு மக்களுக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்’ என்பதே அக் கொள்கை யாகும்.
அரிசி தவிர இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள் என்றெல்லாம் ஏராளமான ஆடம்பர உணவுப் பண் டங்கள் வெளிநாடுகளிலிருந்து தாராளமாக இறக்கு மதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதியில் பல்வேறு தீங்குகள் உள்ளன.
அவ்வுணவுப் பொருட்களின் சேர்மான உள்ளட க்கங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவற்றை உண்பதால் உடலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம் அந்த இறக்குமதிகளுக் காக எமது நாட்டின் பணம் வீணடிக்கப்படுகிறது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் வெளிநாட்டு உணவுப் பொருட்களின் ஆக்கிரமிப்பு காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை உள்நாட்டில் சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.
உள்நாட்டில் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை எமக்கு இருக்கை யில் வெளிநாட்டு உணவுப் பொருட்களை நாடு வதால் ஏற்படும் தீங்குகள் ஏராளமெனக் கூறலாம்.
தேசிய உணவு வாரம் ஆரம்பமாகும் இன்றைய தினத்தில் இது விடயத்தில் எமக்குள் விழிப் புணர்வொன்று ஏற்படுதல் பிரதானமாகும்.

»»  (மேலும்)

மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி: பாதுகாப்புப் படையினர் அனுப்பிவைப்பு


மேற்கு வங்காள மாநிலத்தில் அரசுக் கெதிரான கலகங்களில் இறங்கி சில கிராமங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மாவோயிஸ்ட் போராளிகளை விரட்டியடிக்க இந்திய இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.
சுமார் 1800 இராணுவத்தினர் மேற்கு வங்காள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
லொறிகள், பீரங்கிகளுடன் சென்ற இந்திய இராணுவத்தினர் சென்ற சனிக் கிழமை மீண்டும் இடங்களை கைப்பற்றி மாவோயி ஸ்டுகளை விரட்டியடித்தனர்.
அடர்ந்த காடுகளூடாகச் சென்ற இராணு வத்தினர் மவோயிஸ்டுகளின் கட்டுப்பா ட்டிலிருந்த லால்கார் நகரத்தை மீளவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இராணுவ உயரதிகாரி தெரிவித்தார். இன் னும் சில நாட்களின் பின்னர் அனைத்துப் பிரதேசங்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென்றார். இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இந்திய மாக்ஸிஸ்ட் கட்சியின் ஆட்சிநிலவுகிறது கடந்த வாரம் மாநில அரசுக்கெதிராகப் புரட்சி செய்த மாவோயிஸ்ட்டுகள் சில கிராமங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கிராமவாசிகள் சிலரும் மாவோயிஸ்டுக ளுடன் இணைந்து கொண்டனர். இதை யடுத்து சென்ற சனிக்கிழமை இந்திய அரசு பாதுகாப்புப் படையை அங்கு அனுப் பியது பொது மக்களின் உயிரிழப்புக் களைத் தவிர்க்கும் வகையில் அங்கு இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்ப ட்டது.
இதில் மாவோயிஸ்டுகள் தங்கள் முன்னரங்க நிலைகளிலிருந்து பின்வாங்கச் சென்றனர் தலைநகர் கொல்கத்தாவிலிரு ந்து 80 மைல் தொலைவில் லால்கார் நகர் உள்ளது. இது உட்பட இன்னும் பல கிராமங்களை படையினர் மீட்டெடுத்தனர்.



»»  (மேலும்)

திருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள் இன்னும் சேரலாம்

திருக்கோயில் காயத்ரி கிராமத்தில் இயங்கிவரும் ஸ்ரீகணேசா முதியோர் இல்லத்தில் சேர்ந்து வாழ வயோதிபர்க ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2006 இல் ஆரம்பிக்கப்பட்ட இம்முதியோர் இல்லத்தை எம்.ஜி.ஆர். சமூக சேவைகள் அமைப்பு சிறப்பாக நடத்திவருகிறது.
அமைப்பின் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தகவல் தருகையில், சுனாமியாலும் பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட வயோதிபர்களை உள்வாங்கி இம்மானிடப் பணியைச் செய்து வருகிறோம்.
தற்போது 09 வயோதிபர்கள் எமது இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான முழுப்பராமரிப்பையும் நாம் கவனித்து வருகிறோம் என்று கூறினார்.
இவ்வாண்டில் மேலும பல முதியோர்களை சேர்க்கவிருக்கிறோம். நாட்டின் எப்பாகத்தில் இருந்தாலும் சரி மனைவியை இழந்த தபுதாரன் அல்லது கனவனை இழந்த விதவை பிள்ளைகளின் கவனிப்பில் தவறியிருப்பின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
அப்படிப்பட்ட தபுதாரன் அல்லது விதவைகள் எமதில்லத்தில் சேரவிரும்பினால் ஸ்ரீ கணேசா முதியோர் இல்லம், காயத்ரி கிராமம், திருக்கோவில் -04 எனும் விலாசத்துடன் அல்லது 0602694239 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்


»»  (மேலும்)

6/20/2009

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியிலேயே நாட்டில் அதிகமான வீதி அபிவிருத்திகள் இடம் பெற்றுவருகின்றது - த.ம.வி.பு.கட்சியின் பொதுச் செயலாளர்


திருநாட்டில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வீதி அபிவிருத்தியானது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியிலேயை இடம் பெற்றுவருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி.கைலேஸ்வரராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட வந்தாறுமூலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எ. கிருஸ்னானந்தராஜா அவர்களினால் வந்தாறுமுலை மட்ஃகணேச வித்தியாலத்தின் விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான மக்கள் கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வந்தாறுமூலை கிராமத்திற்கான அபிவிருத்தியில் ஆர்வமுள்ள கிராமப் பற்றாளர்கள், புத்திஜீவிகள், விழையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில், மட்ஃகணேச வித்தியாலய விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக 850,000 ரூபாய் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.கிருஸ்னானந்தரா அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியினை தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்கள் வீதி அபிவிருத்தியில் காட்டும் முக்கியத்துவமானது எதிர்காலத்தில் இலங்கைத் திருநாட்டின் அனைத்து மாகாணங்களுமே அபிவிருத்தியடைவதற்கு சிறந்த வழிசமைக்கும் எனவும் கூறியிருந்தார்.
ஓரு நாடோ அதன் மக்களோ அபிவிருத்தியடைவதற்கும் அந்நாடு பொருளாதாரத்தில் விருத்தி காண்பதற்கும் அந்நாட்டிலுள்ள வீதிப்போக்குவரத்தானது பெருவிருத்தியடைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார். ஒரு கிராமத்திற்கு வீதிப்போக்குவரத்துக்கள் முதலில் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே அக்கிராம மக்கள் ஏனைய அடிப்படை வசதிகளை அதன் பிறகு படிப்படியாக பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. எனவே மேன்மைதங்கிய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் வீதியபிவிருத்தி அதிகளவில் இடம் பெறுவதையிட்டு நாம் அனைவரும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினருமான திரு. எ. கிருஸ்னானந்தராஜா அவர்களின் மக்கள் இணைப்பாளர் திரு. சுபாசந்திரபொஸ்,மற்றும் மட்டு மாநகர கல்லடித்தெருப் பிரதேச மக்கள் இணைப்பாளர் திரு. கோல்டன் வெஞ்சமீன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது


»»  (மேலும்)

முதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்பேற்றேன்




கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் உயர்ச்சி நிலைக்க வேண்டுமானால் அரச அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் உண்டு இரு துறைகளும் சுமுகமான பாதையில் அரப்;பணிப்புடன் செயலாற்றும் போதுதான் உண்மையான அபிவிருத்தியினை எட்ட முடியும். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நீதி, நேர்மை, உண்மைத்தன்மையுடன் மக்களின் தேவையுணர்ந்து சேவையாற்றி வருகின்றார் எனது நோக்கமும் நீதி, நேர்மை, உண்மைத்தன்மையுடன் சேவையாற்றுவதே ஆகும் இதனாலயே இவ்வாறு வெளிப்பாட்டுத்தன்மையுள்ள முதலமைச்சர் செயலகத்தில் மிக விருப்பத்துடனேயே செயலாளராக சேவையாற்ற முன்வந்தேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக தனது பொறுப்புக்களை கடமையேற்ற திருமதி ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்தார்.
இன்று முதலமைச்சர் செயலகத்தில் முதலமைச்சர் செயலாளராக பதவியேற்ற திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை வரவேற்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான ஆஸாத் மௌலானா, பூ.பிரசாந்தன், முதலமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன்;, பிரதிச்செயலாளரான இ.தயாளன்; முதலமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி ஜுடி தேவதாசன்; மற்றும் அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

»»  (மேலும்)

வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்




தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் உறுப்பினரான திருமதி ஜெயந்தினியின் கணவரான ஜெயசீலன் அவர்கள் இனந்தெரியாத குழுவொன்றினால் பலமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்டவரின் உடலத்தில் அடிகாயங்களும் கொப்புளங்களும் காணப்படுகின்றன. இவரின் கொலை சம்மந்தமாக கிசோ என்பவரை வவுணதீவு பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளனர். இவரோடிருந்த கஜன் என்பவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை பொலிஸார் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவரும் ஆயுதக் குழுவொன்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என பிரதேச மக்கள் கூறுகின்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட ஆயுதக் குழுவின் பெயரினைக் கூறுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். ஆனால் மட்டக்களப்பில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ரி.எம்.வி.பி கட்சியின் ஆரையம்பதி பிரதேச மக்கள் இணைப்பாளர் அமரர் இ. ஜேயக்குமார் (அறபான்) அவர்களைக் கொலை செய்த ஆயுதக்குழுவினர் மீதே சந்தேகம் வருவதாக பிரதேச மக்கள் மௌனப்பாசையில் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.இவரது கொலை சம்மந்தமாக மனைவியான ஜெயந்தினி அவர்கள் தெரிவிக்கையில் இறுதியாக தனது கணவருடன் கிசோ என்பவரே கைத்தொலை பேசியில் மங்கிக்கட்டுக்கு வரும்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அழைத்ததாக கூறியிருந்தார். இவரது கொலை சம்மந்தமாக வவுணதீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் காத்தமுத்து சுப்பிரமணியம் அவர்கள்தெரிவித்துள்ளார்.;தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகிய மண்முனை மேற்குப் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி. ஜெயந்தினியின் கணவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு ரி.எம்.வி.பி கட்சியின் மத்திய செயற்குழு கடும் கண்டனத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்

»»  (மேலும்)

6/19/2009

இலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்!

இலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட பல நிவாரணக் கிராமங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்தியா வழங்கியுள்ள நடமாடும் மருத்துவ மனைக்கும் விஜயம் செய்த இந்திய தூதுவர் இந்திய டாக்டர்களுடனும் உரையாடினார்.இந்தியா அனுப்பிவைத்துள்ள மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றையும் பார்வையிட்ட தூதுவர் பற்றாக்குறை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ள வசதிகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த அவர் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்
»»  (மேலும்)

புலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ஆஜர்



தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவுத் தலைவியாக செயற்பட்டு வந்த
தமிழினி என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாசி இன்று வியாழக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரான தமிழினி, வவுனியா அகதி முகாமில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கென தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தது. குறித்த சந்தேகநபர் கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவரெனவும் பின்னர் 1993ஆம் ஆண்டில் பூநகரி இராணுவ முகாம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றப்புலனாவுப் பிரிவினர் அறிவித்தனர். அத்துடன், மேற்படி சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

»»  (மேலும்)

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் பிரகாசிப்பு


கிழக்கு மாகாண பாடசாலைகள் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
15 வயதிற்குக் கீழ்பட்ட பிரிவில் பரிதிவட்டம் வீசுதல் போட்டியில் மாணவன் எம். ஏ. எம். அர்ஸித் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், அதே மாணவன் குண்டு போடுதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
மேலும் 17 வயதிற்குக் கீழ்பட்ட கோலூன்றிப்பாய்தல் போட்டியில் மாணவன் எம். என். எம். ஜப்ரான் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.
19 வயதிற்குக் கீழ் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மாணவன் எச். எம். பஹ்னாஸ் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தனக்காக்கிக் கொண்டார்.
இப்போட்டிகள் அனைத்தும் திருகோணமலை மக்கைஸர் மைதானத்தில் கடந்த 15ம், 16ம் திகதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

தமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு

வட மாகாணத்தின் துரித அபிவிருத் திக்கான நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளின் பிடியில் இருந்து வட மாகாணம் முற்றாக மீட்கப்பட் டதையடுத்து அப்பிரதேசத்தின் ஒவ்வொரு துறை களையும் மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடி க்கைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கின் அபிவிருத்தி யுகத்தின் ஆரம்பமென்று இதனைக் கூறலாம்.
யுத்தம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வட பகுதியின் அபிவிருத்தியில் மாத்திரமன்றி அப்பிர தேசத்துக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை யும் வழங்குவதில் ஜனாதிபதி கூடுதல் ஆர்வம் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்.
ஐக்கிய இலங்கைக்குப் பொருத்தமான அரசி யல் தீர்வொன்றை வட மாகாண மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதி பதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருப் பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.
புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணம் முற்றாக மீட்கப்பட்டதையடுத்து அங்கு அபிவிரு த்திப் பணிகள் தற்போது பரவலாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. கிழக்கு மக்கள் இப் போது சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதுடன் பல் வேறு துறைகளிலும் அபிவிருத்தி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் அங்கு கல் வித்துறை மற்றும் தனிநபர் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்து வருவதாக மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதுமாத் திரமன்றி சிவில் நிர்வாக செயற்பாடுகளும் மட் டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட ங்களில் வெகுவாக சீரடைந்து வருகின்றன.
வீதி அபிவிருத்தி, போக்குவரத்து மேம்பாடு, விவசாய, வியாபார அபிவிருத்தி போன்றவற்றை கிழக்கில் குறுகிய காலத்துக்குள் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
இதுபோன்ற துரித மீள் கட்டமைப்புப் பணி களே வட பகுதிக்கும் தற்போது தேவையாகி ன்றன. எந்தவித அபிவிருத்தியும் காணாமல் மிக நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதன் மூலமே அங்கு வாழும் மக்களை மீண்டும் வழமை நிலைமைக்குக் கொண்டு வர முடியும்.
எனவே தான் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிரு த்தித் திட்டத்தின் மூலம் யாழ். குடாநாட்டை மட்டுமன்றி வன்னிப் பிரதேசத்தையும் முழுமை யாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசாங் கம் இறங்கியிருக்கிறது.
இத்தகைய சாதகமான நிலையில் தென்னில ங்கை அரசியல் சக்திகளுக்கு மாத்திரமன்றி வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப் புக்கும் வட மாகாண அபிவிருத்திக்குப் பங்களி ப்புச் செய்ய வேண்டிய கடப்பாடு உண்டு.
கிழக்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களில் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்க நிர்வாகம் சீர்குலைந்திருந்ததன் விளைவாக கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகள் அங்கு முட ங்கியிருந்தன. அன்றைய நெருக்கடியான சூழ்நிலை யில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற் கான குறைந்த பட்ச ஒத்துழைப்புகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கவில்லை யென்ற ஆதங்கம் தமிழ் மக்களுக்கு உண்டு.
வடக்கை மீட்கும் நடவடிக்கையின் போது புலிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பு கவனம் செலுத்தியதே தவிர அங்கு அல்ல லுற்ற தமிழ் மக்கள் நலன்கள் தொடர்பாக பெரி தாகக் குறிப்பிடவில்லை. அங்குள்ள மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற கூட்டமை ப்பு எம். பி.க்கள் மக்களின் இன்னல்களைக் கவனத்தில் கொள்ளாதது பெரும் துரோகம்!
இது பற்றிய ஆதங்கம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக உள்ளது. வன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மீது தங்களது வெறுப்பை வெளிப்படையாக வெளிப் படுத்தியும் வருகின்றனர்.
“எங்களது வாக்குகளால் பாராளுமன்றத்தை அலங்கரித்தோர் கடந்த காலத்துத் தவறுகளை இனிமேலாவது நிறுத்திக் கொண்டு எங்களது விமோசனத்துக்கான நடவடிக்கைகளில் அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்” என்பது அம் மக்களின் வெளிப்படையான அபிப்பிராயமாக உள்ளது.
கூட்டமைப்பு எம். பி.க்கள் வட மாகாண அபி விருத்தியிலும் மக்களின் விமோசனத்திலும் ஒத்து ழைத்துச் செயற்படாவிடினும் தடைக்கல்லாக இருந்து விடக் கூடாதென்பதே தமிழ் மக்களின் அபிப்பிராயமாக உள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத் தித் திட்டங்களுக்கு ஒத்துழைத்துச் செயற்படப் போவதாக சிவநாதன் கிஷோர் எம். பி. கூறியிரு ப்பதை கூட்டமைப்பின் ஏனைய எம். பி.க்கள் சிறந்ததொரு முன்னுதாரணமாகக் கொள்வதே இன்றைய சூழ்நிலையில் பொருத்தமாகும்.
வடக்கு, கிழக்கு மக்கள் மிக நீண்ட காலமாக துன்பதுயரங்களுடன் வாழ்ந்து சலிப்படைந்து ள்ளனர். மக்களின் துன்பங்களின் மீது அரசியல் நடத்தும் போக்கு இனிமேலும் வேண்டாம். மக்களுக்கான அரசியல் நடத்தும் மனப்பாங்கு தான் இப்போதைய தேவை
thinakaran .edito

»»  (மேலும்)

மாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்படுத்துவதில் உறுதி


அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை நிர்வாக முறைமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே, அதனை வடக்கு, கிழக்கில் நடை முறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளதென்று அமைச்சர் தெரிவித்தார்.
13வது திருத்தம் அரசியல மைப்பின் ஒரு பகுதியாகும். அதனைப் பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்படும். இதில் அரசாங்கம் உறுதியான நிலை ப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.
வாராந்த அமைச் சரவைத் தீர்மான ங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, மாகாண சபை நிர்வாக முறையில், மத்திய அரசு, மாகாண அரசுக்கென குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும், ஒத்தியங்கு அதிகாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.
ஆனால், சில மாகாண சபைகள் உள்ள அதிகாரங்களையே பயன்படுத்தாமல் உள்ளன.” என்று தெரிவித்த அமைச்சர், உலகில் ஆட்சி மாத்திரமின்றி சகல போக்குகளும் மறுசீரமைப்புக்கு உள்ளாகித்தான் வருகின்றன என்று தெரிவித்தார்.
‘காணி விடயத்தில் பிரச்சினை இருக்குமென நான் நினைக்கவில்லை. முன்பு யுத்தச் சூழ்நிலையில் பேச்சு நடந்தது.
இப்போது அவ்வாறில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே 13வது திருத்தத்திற்கு எதிராகச் கதைக்கின்றார்களே! என்ற கேள்விக்கே அமைச்சர் மெற்கண்ட விளக்கத்தை அளித்தார்.
வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிப்பது அவரவர் விருப்பமாகுமென்று தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாடு ஸ்திரமானது என்று தெரிவித்தார். (


»»  (மேலும்)

6/18/2009

பயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும்


(ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு எனும் தலைப்பில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகத்தில் 5 யூன் 2009 . இடம்பெற்ற நிகழ்வில் எஸ் .எஸ். எம் பஷீர் ஆற்றிய உரை)


இன்று பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மீள் நிர்மாணமும், ஜனநாயக மயப்படுத்தலும் என்பது தொடர்பான இன்றைய நிகழ்வில் முஸ்லிம் மக்களின் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்த கிடைத்த இச்சந்தர்ப்பம் ஒரு சிறப்புரிமையாகும். கிழக்கில் புலிகளினால் துன்புறுத்தப்பட்டு பேச்சு சுதந்திரம், நடமாடும் சதந்திரத்திற்காகவும் போராடியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் ஜனநாயக நிலைப்பாடுபற்றி பேசும்போது பேச்சுரிமையும், நடமாடும் உரிமையும் பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அடைந்திருக்கின்றோமா என்பது தொடர்பில் பேசுவது முக்கியமானதாகும். புலிகளால் சுதந்திரமான நடமாட்டமும், பேச்சுரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து நானும் வந்தவன். ஒரு காலகட்டம் இருந்தது முஸ்லிம் பிரமுகர்கள் எவரேனும் வெளிப்படையாக புலிகளை விமாச்சித்தபோது அவர்கள் கடத்தப்பட்டு ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் ஒன்றல்ல நூற்றுக்கணக்கில் இடம்பெற்றன. ஒரு தடவை ஒரு வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரை அடித்து குற்றுயிரும், கொலையுயிருமாக கடத்தியபோது நாங்கள் சட்டச்சிக்கல் காரணமாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆட்கொணர்வு மனுவினை கொழும்பு நீதிமன்றத்தில் கொண்டுவர நேர்ந்தது. அதன் விளைவாக எச்சரிக்கைத் தொலைபேசி எனது வீட்டிற்கு விடப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில்தான் நாங்கள் வாழநேரிட்டது. நாங்கள் அடிமைகள்போல புலிகளின் கட்டுப்பாட்டில் வாழவேண்டிய நிலை எற்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். அவர்கள் 24மணித்தியாலத்திற்குள் 500ரூபாய் பிரித்தானிய நாணயத்தில் 2பவுணுடன் வெளியேற்றப்பட்டார்கள். இந்த துக்ககரமான சம்பவம் மன்னிக்கப்படலாம் ஆனால் இலகுவாக மறக்கப்படக்கூடியதல்ல. இது தமிழ் சமூகத்தினால் செய்யப்படவில்லை, புலிகளினால் செய்யப்பட்டது. நான் பிறந்த கிராமத்திலும் மற்றும் ஏனைய முஸ்லிம் கிராமங்களிலும் கிழக்கிலே முஸ்லிம்கள் புலிகளால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். எனது அயலவர்கள் கொல்லப்பட்டாhகள். புலிகளுக்கு சற்று கூடுதலான நேரம் கிடைத்திருந்தால் சுமார் 200கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் வாழ்ந்த எமது குடும்பமும் பலியாகிப்போயிருக்கும். நான் கொழும்பில் வாழ்ந்தபடியினால் புலிகளிடமிருந்து அக்கால கட்டத்தில் தப்பிக்கமுடிந்தது. காத்தான்குடி பள்ளிவாசல்களிலும், முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், எனது உறவினர்களும் அதில் கொல்லப்பட்டார்கள். புலிகளினால் பல பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு இலக்குகளாக திகழ்ந்தன. நாங்கள் இவ் அனுபவங்களைத் தாண்டி இப்போது உயிருடன் இருக்கின்றோம். எமது சமூகத்தின் சார்பாக குரல் கொடுக்கும் சந்தாப்பம் இன்றும் எனக்கு கிடைத்திருக்கின்றது. எனது நண்பா (ஈ.பி.டி.பி ) சார்பில் கலந்துகொண்ட எஸ் தவராஜா சொன்னார் நேற்று அமைச்சர் திரு போகொல்லாகம அவர்களுடனான லண்டன சந்திப்பின்போது; அமைச்சர் யுத்த வெற்றிகுறித்து உரையாற்றியபோது அங்குவந்திருந்த எந்தத் தமிழரும் கரகோசம் எழுப்பவில்லை எனக் குறிப்பிட்டார். நண்பர் தவராஜா தமது தலைவருக்கு என்ன நடந்தது என விபரித்திருந்தார். ஆனால் அத்தகைய துன்பங்களை ஏற்படுத்திய அந்த மனிதன் இறந்தவிட்டான். என்பதையிட்டு அவர் கைதட்டுவதற்கு தயாராக இருக்கவில்லை. இது ஒரு முரண்நகை நிலைப்பாடாகும். (இங்கு உரையாற்றிய தவராஜா அவர்கள் தமது தலைவர்மீதும் தன்மீதும் எத்தனித்த கொலைமுயற்சிகள் பற்றியும் தாங்கள் அவற்றில் தப்பித்தமை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். நான் பகிரங்கமாகவே மகிழ்ச்சியடைகின்றேன் என்பதனை தெரிவிக்க விரும்புகின்றேன். என்னிடம் தமிழ் தலைவரின் (பிரபாகரன்) இறப்புப் பற்றியும் புலிகளினுடைய அழிவுபற்றியும் மகிழ்ச்சியடைந்தாக கூறிய தமிழர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் சொன்னார்கள் இதுதான் பயங்கரவாதத்தின் முடிவு எனச் சொன்னார்கள். ஏனெனில் அவர்களை (புலிகளை) எதிர்த்தவர்கள் அங்கு வாழமுடியவில்லை. அவர்கள் அங்கிருந்து ஒடிவந்து மேற்குலகிலே வாழவேண்டி நேரிட்டது அவர்கள் இப்போது அவ்வாறான பயங்கரத்திலிருந்த விடுபட்டு சுதந்திரமாக வாழ்கின்றார்கள.; அத்துடன் அங்கு சுதந்திரமாக போகமுடியுமெனவும் நம்புகின்றார்கள்.. இப்போது நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோமா எனக் கேட்கப்படுமானால் அதற்கான பதில் ஆம் என்றுதான் இருக்கும.; அதனை அங்குள்ள மக்கள் உறுதிசெய்கின்றார்கள். அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடமுடியுமென்பது குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள். நான் கிழக்க மாகாண முதலமைச்சரையும் அவர்களுடன் உள்ளவர்களையும் சந்தித்தபொழுது ஏன் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தீர்கள் என்று கேட்ட பொழுது அவர்கள் நாங்கள் சாதாரண சிப்பாய்கள் எங்களுக்கு வன்னியிலிருந்து விடப்படும் தலைமைத்துவத்தின் ஆணையினை நிறைவேற்றாமல் இருக்கமுடியாது எனவும் அதற்காக வருந்துவதாகவும் மன்னிப்பும் கோரினார்கள். 1990களில் புலிகளால் இளைக்கப்பட்ட அநீதிகளுடன் 1915ம் ஆண்டு சிங்கள –முஸ்லிம் வன்முறையை ஒப்பிட்டால் சில வருடங்களில் சிங்கள –முஸ்லிம் உறவுகள் மீளமைக்கப்பட்டதுடன் இன்று இலங்கையின் மத்திய பிரதேசத்திலே முஸ்லிம்கள் அரசியலிலும், பொருளாதாரத்திலும் செயற்திறன்மிக்க சமூகமாக திகழ்கின்றார்கள். ஆனால் 18வருடங்களாக வடக்கிற்கு மீளப்போகமுடியாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அகதி முகாம்களில், குடிசைகளில், கொட்டில்களில் புத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் வாழ முடிந்தது. இதற்கு தடையாக இருந்தவர்களே புலிகள்தான். இங்கே தமிழ் பேசும் மக்கள் என்ற பதம்குறித்து ஒரு தவறான புரிதல் உண்டு. எனெனில் தமிழ் அரசியல்வாதிகள் நாங்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்ற ஒரே மக்கள் என்ற அடிப்படையில் பயன்படுத்தினர். ஆனால் அது உண்மையல்ல. அப்பிரயோகம் அரசியல் இலாபத்திற்காகவே உபயோகிக்கப்பட்டது. அது உண்மையாக இருந்திருக்குமானால் ஆயிரக்கணக்கான வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் யாவரும் ஒரே மொழி பேசுபவர்களாயின் ஏன் வெளியேற்றப்பட்டார்கள். நாங்கள் பயங்கரவாதத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது, ஜனநாயக வழிமுறைமூலமே போராடவேண்டும் சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை இலங்கை பூரணத்துவமாக நடந்து வருகின்றது என நான் சொல்லவில்லை நாங்களும் சிறுபான்மை என்ற மனப்பதிவிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பது குறித்தும் கவனத்தை குவிக்கவேண்டியுள்ளது. எவ்வாறு நாங்கள் இலங்கையனாக அடையாளங் காண்பது எனவும் சிந்திக்கவேண்டும் .இலங்கையை பிரித்தானியர் விட்டுச்சென்றபோது அவர்கள் அறிமுகப்படுத்திய பிறப்புச் சான்றுப்பத்திரத்தினை எடுத்துக்கொண்டால் அது இனரீதியாக மக்களை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வகைப்படுத்தியிருந்தது. ஆனால் பிரித்தானியாவில் அவ்வாறு இனரீதியாக அடையாளப்படுத்தும் பிறப்புச்சான்றிதழ் பத்திரம் இல்லை. ஒரு குழந்தை பிறந்தவுடன் எந்த இனத்தைச்சேர்ந்தது என்பதனை இங்கு பிறப்புச்சான்றிதழ் பத்திரத்தில் காட்டப்படுவதில்லை. பிரித்தானியரே இதனை எமக்கு அறிமுகப்படுத்தினர். இதிலிருந்தும் நாம் விடுபடவேண்டும். இந்த வேண்டுகோளை இந்த அவையிலே இருக்கின்ற அமைச்சரிடம் (டொக்டர் சரத் அமுனுகம) நான் வேண்டிக்கொள்கின்றேன். வேறு வழிமுறையில் இன அடையாளத்தினை சுட்டிக்காட்டும் படிவத்தினை அறிமுகப்படுத்துங்கள். (பிரித்தானியாவில் இருப்பதுபோல்) அந்தப் படிவத்திலிருந்து இனத்தினைத் தேர்ந்து எடுத்தக் கொள்ளலாம். இனத்தினைக் குறிப்பிட விரும்பாதவர்கள் வேண்டுமானால் ” ஏனையோர்” (ழுவாநசள) என்று குறிப்பிடலாம்” நாங்களும் முஸ்லிம்களும் புலிகளின் அதிகாரத்தின்கீழ் வாழ நேரிட்டபோது பல்வேறுபட்ட பிரேரணைகளை தனியான மாகாணசபை போன்ற தீர்வுகளை தமிழ் தாயகக்கோட்பாட்டுக்கு எதிராகவே முன்வைக்கவும் நேரிட்டது. நாங்கள் ஒத்துழைக்காவிட்டால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம்; பிரிந்தபோது இடையில் அகப்பட்ட பாகிஸ்தானின் நாடற்ற பிஹாரி முஸ்லிம்களை ஒத்தநிலை எமக்கு எற்படுமென தமிழ் தரப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள் சிலர் இந்தியாவிற்குச் சென்று புலிகளின் பிரதிநிதிகள் கிட்டுவுடன் முஸ்லிம்களின் துன்பங்களுக்கு தீர்வுகாணுமுகமாக ஒரு கருத்தொருமைப்பாட்டினை அடைய எத்தனித்தனர். முஸ்லிம் மாகாணசபை கோரிக்கை என்பதும் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டு கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் அரசியல் கட்சியினால் முன்வைக்கப்பட்டதுதான். ஆனால் அத்தகைய கோரிக்கை இன்று இல்லை. இவைகள் எல்லாம் எதிர்விளைவு (உழரவெநசிசழனரஉவiஎந) கோரிக்கைகளாகவே ஏற்பட்டன. இப்போது 13 வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இன்று நடைமுறையிலிருக்கும் மாகாண சபையினை மேல் தரமுயர்த்தும் அதிகாரங்கள் தேவைப்படலாம். ஆனால் அவை ஜனநாயக செயல்முறையூடாகவே அடையப்படவேண்டும். முப்பது வருடங்களுக்கு முந்திய மூலப்பிரச்சினைகள் இன்றில்லை அக்காலகட்டத்திற்கு நாங்கள் திரும்பிப்போக முடியாது.. பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தங்களுடைய துன்பங்களுக்க தீர்வுகாணப்படவில்லை என்று உணர்ந்ததால்தான் ஆயதப் போராட்டம் உருவானது. இன்றும் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர்கள் உணர்வார் களேயானால் அவர்கள் இப்போது என்ன செய்யப்போகின்றார்கள் என்னும் கேள்வி எழும்புகிறது. இன்றைய வெற்றி குறித்து அனைத்து தமிழ் மக்களும் மகிழ்ச்சி அடையவில்லை என்ற பார்வை ஒரு சரியான கருத்தாக அமையாது. தரப்படுத்தல்பற்றிய அங்கலாய்ப்புக்கள் பொருத்தமான காரணியாக அமையாது. தரப்படுத்தல் அதிகளவில் யாழ்ப்பாண மாவட்டத்திலே எதிர்க்கப்பட்டது. மாறாக தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இன்று சர்வதேசப் பாடசாலைகள், கல்விநெறிகள் மிகுந்திருக்கின்ற காலம். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் பிரச்சினைகளுடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் இருந்து வந்திருக்கின்றது. ஏனெனில் நாங்களும் தமிழ்பேசும் சமூகம் என்று பொதுவான வகைப்படுத்தப்பட்டோம். இதன் அடிப்படையிலே முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி உருவானது நான் அந்தக் கட்சியின் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் செயலாற்றியுள்ளேன். இன்று பிரித்தானியாவில் என்ன நடக்கின்றதென்றால் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் தொழில் கட்சிக்கோ, அல்லது மரபுவாதக் கட்சிக்கோ அல்லது ஏனைய கட்சிகளுக்கோ வாக்களிக்காமல் தங்களுடைய வாக்குகளை தமிழ் வேட்பாளர் கபளீகரம் செய்துவருகின்றார். கட்சிகளிலாயினும் தமிழர்களுக்கு தமிழர்களே வாக்களிக்கவேண்டும் என்கிற பிரிவு மேலோங்கி வருகின்றது. இது ஜனநாயகத்திற்கு எதிரான, சமூக ஒருங்கிணைப்பிற்கு பெரும் ஆபத்தான விடயமாகும். இது இனரீதியான பிரிவினைக்கே இட்டுச் செல்லும். நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்னும் சமூக ஒற்றுமைக்கு தடைபோடுகின்ற காரணங்களை அடையாளங்கண்டு அணுகவேண்டும். இன்றைய அரசாங்கம் பயங்கரவாதத்தினை ஒழித்திருக்கின்றது ஆனால் ஊழல், பாதாள உலகம், வெள்ளைவான் கடத்தல் என்பவற்றிற்கெதிராய் யுத்தத்தினை முன்னெடுக்கவேண்டியிருக்கின்றது. நான் நேற்று அமைச்சருடன் கதைத்தபொழுது கிழக்கிலே இரவில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்படாமலும் இருப்பதனை சுட்டிக்காட்டினேன். இந்த நிலைமை தொடரக்கூடாது நாங்கள் இலங்கையராக இருப்பதிலே மகிழ்ச்சியடைகின்றோம்.





»»  (மேலும்)

கிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்.

கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர் முதலமைச்சின் செயலகத்துக்கான செயலாளராக சி.மாமாங்கராஜா என்பவர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் ஒரு வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார். முதலமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இவ்நியமனமானது விசேட செயற்றிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாகும். தற்போது மாகாண சபையின் ஒருவருட காலம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து செயலாளரின் ஒப்பந்த காலமும் நிறைவடைந்துள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு முதலமைச்சின் செயலகத்துக்கான புதிய செயலாளர் இலங்கை நிருவாக சேவைகள் (எஸ்.எல்.எ.எஸ்) தகுதியுடன் வெகு விரைவில் நியமனம் செய்யப்படவுள்தாக முதலமைச்சு செயலகம் தெரிவிக்கின்றது.

Categories: செய்திகள்

Tags:

-->

»»  (மேலும்)

ஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்

யாழ். குடா நாட்டி ற்குத் தேவையான அத் தியாவசிய பொருட் களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ் ப்பாணம் சென்றடைந்தன.
பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் மிக நீண்ட நாட்களுக்குப் பின் னர் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்ப ட்டமை இதுவே முதற் தடவையாகுமெ ன்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
மூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்ல வும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லொறி கள் வடபகுதியிலுள்ள பொருட்களை ஏற் றிக் கொண்டு தென்பகுதியை நோக்கி திரு ம்பவுள்ளதாக வும் அவர் குறிப் பிட்டார்.
ஒரு தடவை க்கு 40 லொறி கள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர் நேற்றைய தினம் 35 லொறிகளே சென்றதென்றும் குறிப்பிட் டார்.
தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற் றிக் கொண்டு செல்லும் சகல தனியார் லொறி களும் ஓமந்தை சோதனைச் சாவடியை சென் றடைந்த பின்னர் அங்கு பாரிய சோதனை க்குட்படுத்தப்பட்ட பின்னர் வடக்கை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
இதற்கமைய, ஓமந்தையிலிருந்து இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சகல லொறிகளும் புறப்பட்டுச் சென்றன.
உணவு, மரக்கறி, பழ வகைகள் எண் ணெய் உட்பட அத்தியாவசிய பொருட் களே நேற்றைய தினம் எடுத்துச் செல்லப் பட்டன.
அதேபோன்று இந்த லொறிகள் கொழும்புக்கு திரும்பும் போது வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைக்க யாழ். குடா மக்கள் தயார் நிலையில் உள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
ஏ-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தென்பகுதிக்கு தேவையான பொருட்களை ஏற்றிவரும் லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனை யிடப்பட்ட பின்னர் தென்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏ-9 பிரதான வீதியையும் அதனை அண்மித்த பிரதேச ங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய சில காலங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படை வீரர்களின் விநியோகத்திற்காக ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர் வமாக திறக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், இராணுவத்தின் பூரண வழித்துணையுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவை யான அத்தியாவசிய பொருட்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், தனியார் லொறிகளும் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் அந்த மக்களுக்குத் தேவை யான பொருட்களை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை வடக்கு வசந்தத்திற்கு உந்து சக்தி யாக அமைந்துள்ளது


»»  (மேலும்)

6/17/2009

வாசகர்களின் கவனத்திற்கு!

பிரபாகரனைத் தலைமையாகக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினர் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு தாயகத்தில் (இலங்கையில்) அமைதியான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் எராளமான தமிழ் மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள தமது உறவினர்களை சந்திப்பதற்காகவும், ஏனைய தேவைகள் கருதியும் இலங்கைக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கின்றனர். மேற்கூறிய தேவைகளுக்காக அங்கு செல்வதற்கு தயாராகும் தமிழ் மக்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் புலி ஆதரவாளர்கள் சிலர் மேற்கொள்கின்றனர். அதன் பிரச்சாரமாக இலங்கைக்கு செல்லும் தமிழர்களை இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தில்வைத்து விமானநிலைய அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து வைப்பதாகவும் லண்டனில் வசிக்கும் சிலர் தமது இணையத் தளங்களின்மூலம் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அங்கு செல்வதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான வருவாய் கிடைப்பதுடன், இலங்கையில் அமைதிநிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பானதகவல்கள் சர்வதேசரீதியாக வெளியாகிவிடும். இந்நிலையில் அதனை தடைசெய்வதன் நோக்கமாகவே இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்கள் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் உச்சநிலையில் இருந்தபோது, அங்கு விஜயம்செய்த மக்கள்பற்றி மெளனம்சாதித்த மேற்படி முன்னாள் புலி ஆதரவாளர்கள் இன்று தமிழ்மக்களின் நலன்கருதி முதலைக்கண்ணீர் வடிப்பது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் நாடகத்தினை வெளிக்காட்டுவதாகவே நாம் கருதுகின்றோம். எனவே மேற்படி பசுத்தோல் போர்த்திய புலிகளின் பொய்யான பிரச்சாரங்களை கவனத்தில் கொள்ளாது உங்களின் பயணத்தினை அச்சமின்றி தொடருமாறு நாம் அறிவுரை கூறவிரும்புகின்றோம்.

ஆசிரியர் மஹாவலி.கொம்.



»»  (மேலும்)

வாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள வாகரை பிரதேசத்தில் கல்வியை முன்னேற்றுவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் இணைப்புச்செயலாளரான பூ.பிரசாந்தன் தெரிவித்;தார் ஜு.ரீ.இசட் நிறுவனத்தின் உதவியுடன் 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்டலடி அ.த.க. பாடசாலையின் புதிய கட்டிடத் தொகுதி ஒன்றையும் நூலகத்தையும் திறந்து வைத்து உரையாற்றிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் மேல் அக்கறையுடன் செயற்படுவதன் மூலமும் சமூக கல்வி விழுமியங்களை புகட்டுவதன் மூலமே கல்வி நிலையில் அபிவிருத்தி காண முடியும், இந்த பிரதேசத்தை பொறுத்தவரை கல்வி அதிகாரிகளும், அதிபர் ஆசிரியர்களும் அக்கறையுடன் செயற்பட்டாலும் பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது. சமுகத்தில் காணப்படுகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கும் இதுவே முக்கி காரணமாக அமைகிறது. வுhகரைப் பிரதேசத்தில் கல்வி கற்பிக்கும் 222 ஆசிரியர்களில் 23 ஆசிரியர்கள் மாத்திரமே வாகரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஏனையவர்கள் பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இதுவும் கல்வி வீழ்ச்சிக்கு காரணியாக அமைவதாக காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக நியமனம் பெறுவதும் அவர்கள்அங்கு தங்கியிருந்து சேவை ஆற்றுவதன் மூலம்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை காணமுடியும், குறிப்பாக எமது பிரதேசத்தில் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர் நியமனத்தை பெறுகிறார்கள் சில காலம் சேவையாற்றி பின்பு வசதியான பிரதேசங்களை நாடுகிறார்கள் இது கவலைக்குரியது, கிழக்கு மாகாண கல்வி நிலையின் வலுவாக்கத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாணசபையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு விளையாட்டு பயிற்சிகள் மாணவர் சுற்றுலாக்கள் தலைமைத்துவம் போன்ற திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது இது போன்று படுவான் கரைப்பகுதிக்கும் புதிய கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்படுமிடத்து அப்பகுதி மாணவர்களது கல்வி நிலையினை விருத்தி செய்ய முடியுமென அப்பகுதி மக்களால் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, இது பரிசீலனை செய்யப்பட்டு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

»»  (மேலும்)

மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின் பின்னணி என்ன?




மேயர் சிவகீதா பிரபாகரன் தனது கட்சியான ரி.எம்.வி.பி யிலிருந்து சி.சு.கட்சிக்கு மாறியுள்ளார். த.ம.வி.புலிகள் அமைப்பானது கடந்த காலங்களில் வன்னி புலிகளின் மூர்க்கத்தனமான அழித்தொழிப்புக்கள், துரோக குற்றச்சாட்டுக்கள், உட்கட்சி குழப்பங்கள், தலைமைப்போட்டிகள், கருத்து வேறுபாடுகள் என்று பல்வேறு சவால்களை எதிர் நீச்சல் அடித்து புடம்போடப்பட்ட கட்சியாகும். அவ்வேளைகளில் பலர் கொல்லப்பட நேர்ந்தது. பலர் ஒதுங்கியும் கொண்டனர். இறுதியாக கருணாம்மான் கூட ரி.எம்.வி.பி. யிலிருந்து விலகி சி.சு. கட்சியில் இணைந்து கொண்டார். இந்த வேளைகளிலெல்லாம் ரி.எம்.வி.பி யை விட்டு வெளியேறாத சிவகீதா அவர்கள் தற்போது மட்டும் அந்த முடிவை எடுப்பதற்கு காரணமென்ன? அவர் ரி.எம்.வி.பி. யை விட்டு வெளியேறுவதற்கு தகுந்த காரணமொன்றையும் அவர் இறுதியாக பங்குகொண்ட ரி.எம்.வி.பி.யின் அரசியல் குழு கூட்டத்தில் அவரால் முன்வைக்க முடியவில்லை என்பதை அறிய முடிகின்றது. கருணா அம்மான் சி.சு.கட்சியில் சேர்ந்த போது பல ரி.எம்வி.பி. உறுப்பினர்களை தன்னுடன் சேர்ந்து வெளியேற்ற முனைந்தார். அதனூடாக ரி.எம்வி.பி. என்னும் கட்சியை சிதைத்துவிட முடியும் என அவர் எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மாறாக முதலமைச்சர் சந்திரகாந்தனின் நிதானமும் உறுதியும் மிக்க தலைமைப்பண்பும் ரி.எம்.வி.பி.யை இலங்கையில் யாராலும் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக மென்மேலும் மாற்றி வருகின்றது. இதனால்தான் கருணாம்மான் சார்பு இணையத்தளங்கள் வன்னி புலிகளை விட அநாகரிகமான முறைகளில் ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது தொடர்ச்சியான சேறுப+சல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்ரர், மேயர் சிவகீதா, சீலன் .... என்று பலர்மீது ஆதாரமில்லாத பொய்க்குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றது. மேயர் சிவகீதா பற்றி அவரை உளவியல் ரீதியாக நோகடிக்கச் செய்ய மிக கீழ்த்தரமான ‘நடத்தை’ குற்றச்சாட்டுகளை கிழக்கு.கொம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதன்காரணமாக மாற்று இணையத்தளங்களான தேனீ போன்ற தளங்கள் கிழக்கு.கொம் இற்கான தொடுப்புகளை நீக்கிவிட நேர்ந்ததும் தெரிந்த விடயமே. இதில் மிக நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் எந்த கிழக்கு.கொம் இணையமானது மேயர் சிவகீதாவை ரி.எம்.வி.பி. யிலிருக்கும் வரை பாலியில் ரீதியாக கூட அவமதித்து குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியதோ, அதே இணையதளம் இன்று சிவகீதா கட்சிமாறியவுடன் அவரை புகழ்ந்து தள்ளுகின்றதுதான். எது எப்படியோ மேயர் சிவகீதா மீதான தொடர்ச்சியான மறைமுக, நேரடி அழுத்தங்கள் வெற்றிகொண்டிருக்கின்றன என்பது உண்மை. இவ்வளவு தூரம் சிவகீதாவை மிரட்டி, துரத்தி சி.சு.கட்சியில் சேரவைப்பதன் அவசியம் என்ன? அதுதான் கருணாம்மானுடைய பாராளுமன்ற தேர்தலை நோக்கிய கணக்கு வழக்குகளும், காய்நகர்த்தல்களும் ஆகும்.கருணாம்மான் புலிகளைப் பிளந்து வெளியேறியபோது அவர் கிழக்கு மக்களின் பெருந்தலைவனாக பார்க்கப்பட்டார். அதன் பின்னர் அவர் களத்தில் நின்று புலிகளோடு மோதமுடியாமல் நாட்டைவிட்டு ஓடியதிலிருந்து கிழக்கில் அவர் கொண்டிருந்த ஆதரவுத்தளம் வலுவிளக்கத் தொடங்கியது. அன்று வன்னிப்புலிகளை துரத்தியடிப்பதிலும், ரி.எம்.வி.பி. யை உருவாக்குவதிலும் அன்றைய பிள்ளையான் வகித்த பங்கு அவரை கட்சியின் தலைமை பொறுப்புவரை உயர்த்தியது. அதுமட்டுமன்றி இரு தேர்தல்களை முகம்கொண்டு வெற்றியீட்டியதோடு அவர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார். பிள்ளையான் இந்த அரசியல் வளர்ச்சியானது கருணாம்மான் எனும் பெயருக்கிருந்த நன்மதிப்பை விட பலமடங்கு நன்மதிப்பினை மக்களிடம் பிள்ளையான் பெற்றுகொள்ள வழிவகுத்தது. அதேவேளை கருணாம்மானுக்குரிய ஆதரவுத்தளம் வெகுவாக குறைந்துள்ளது. அதேவேளை மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வு குறித்து முதலமைச்சர் சந்திரகாந்தனும் அமைச்சர் முரளிதரனாகிய கருணாம்மானும் நேர் எதிர் கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் முரளிதரன் அரசாங்கத்துடன் நன்கு ஒத்தூதுகின்றார் என்று மக்கள் அவர் மீத வெறுப்பு கொண்டிருக்கின்றார்கள். இதன் காரணமாக அமைச்சர் முரளிதரனுக்கு கடந்த காலங்களில் மாவட்டம் பரந்து இருந்த ஆதரவுகள் குறைந்து அவருடைய சொந்த இடமான கல்குடா தொகுதியை அண்டி சுருங்கியுள்ளது. இந்த பலவீனமான நிலையில் இருந்துதான் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கருணா அம்மான் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. கருணா அம்மானை வைத்து கிழக்கு மாகாணத்தில் தமது கட்சிக்கு பலத்த ஆதரவு சேர்க்கலாம் என்று சி.சு.கட்சி நம்பியிருக்கின்றது. ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையே எதிர்வரும் தேர்தலில் சி.சு.கட்சிக்கு கிடைக்கக்கூடிய களநிலைமைகளே இங்கு இருக்கின்றது. கிழக்கு மாகாணமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட கருணா அம்மானுக்குரிய ஆதரவுத்தளம் வெகுவாகக் குறைந்துள்ளது. மறுபுறம் நியமன எம்.பி. பதவியும், அமைச்சு பதவியும் ஒருமுறை மட்டுமே இனாமாகக் கிடைக்கும் என்பதை கருணா அம்மானும் தெரிந்தே வைத்திருக்கின்றார். எதிர்வரும் தேர்தலில் தனது வாக்குப் பலத்தை நிரூபித்துக்காட்ட வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கின்றார். தேர்தலில் வெற்றிகொள்வது மட்டும்மல்ல கடந்த தேர்தலில் சந்திரகாந்தன் பெற்றுக்கொண்ட 43000 வாக்குகளை விட கூடிய வாக்குகளைப் பெறவேண்டும் என்பது அவர் இன்று தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற சவாலாகும். இந்த கணக்குவழக்குகளை ஒட்டியே மட்டக்களப்பு மாவட்டத்தில் தனக்கு எதிராக போட்டியிடக்கூடிய ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்களை தமது பக்கம் இழுத்து அவர்களது வாக்கு வங்கியில் இருந்து தனக்கும் ஒரு விருப்புவாக்கைப் பெற்றுக்கொள்ள அவர் பகிரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையிலேயே மேயரை மடக்கிப்பிடித்து சி.சு.கட்சியில் சேர்க்கும் முயற்சியில் கருணா அம்மான் வெற்றி பெற்றிருக்கின்றார். இதுவே மேயர் சிவகீதாவின் கட்சித்தாவலின் சூத்திரமாகும்.
கு.சாமித்தம்பி



»»  (மேலும்)

6/16/2009

பிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதை கருணா அமைச்சர் உடன் நிறுத்த வேண்டும் - ரி.எம்.வி.பி யின் மத்திய செயற்குழு


பிரபாகரனால் வழங்கப்பட்ட பயங்கரவாதப் பெயரை வைத்துக் கொண்டு வி.முரளிதரன் அமைச்சர் அவர்கள் வன்முறைகளைப் பிரயோகித்து எமது கட்சி உறுப்பினர்களான வவுணதீவு மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் காத்தமுத்து சுப்புறுமணியம் அவர்களையும், மண்முனைப் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. மேரிகிறிஸ்ரினா அவர்களையும் இன்று மாலை மட்டக்களப்பு தேனகத்தில் வைத்து அச்சுறுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் என கட்சியின் மத்திய செயற்குழு அவசரமாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தலைவரின் பாசறையில் வளர்ந்த வி. முரளிதரன் அமைச்சர் அவர்கள் அவ்வமைப்பில் இருந்து மேற்கொண்ட பயங்கரவாதச் செயல்களைக் கௌரவிக்கும் வகையிலேயே வி.முரளிதரன் அமைச்சர் அவர்களுக்கு அம்மான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்றும் அப்பெயரை பயன்படுத்தியே இன்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர்களை பயங்கரவாதத் தலைவரின் ஸ்ரைலில் அச்சுறுத்தி தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான அடக்குமுறை அரசியலில் ஈடுபட்டுவருவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


»»  (மேலும்)

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை



புலம்பெயர்ந்து வாழும் எம் தாயக தேசத்தின்உறவுகளுக்கு வணக்கம்!..... ஒரு தாயானவளின் மடியில் படுத்துறங்கிய குழந்தை தன் தாயின் மடியை விட்டு எங்குதான் தவழ்ந்து சென்றாலும் அது தன் தாய் மடியின் வாசத்தையே சுவாசித்துக்கொண்டிருக்கும்…மறுபடியும் அந்தக் குழந்தை தனது தாயின் மடியைத் தேடியே தவழ்ந்துவரும். அதுபோலவே எமது தாயக தேசத்தை விட்டு நீங்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் நித்திய பொழுதுகளிலும் நீங்கள் தாயக நினைவுகளுடனும், தாயகத்தின் மீதான நேசிப்புடனும் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து நாம் மன மகிழ்ச்சி அடைகின்றோம். புலம்பெயர்ந்து பூமிப்பந்தின் எந்தப் பாகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தாயக பூமி மீதான உங்களது நேசிப்பை நீங்கள் பல்வேறு வழிகளிலும் உங்களது உணர்வுகளால் வெளிப்படுத்தி வந்திருக்கிறீர்கள். எமது மக்களுக்கு நீடித்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நீங்கள் உங்களுக்குத் தெரிந்த வழிகளில் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தீர்கள். எவ்வழியிலேனும் எமது மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவேண்டும் என்பதையே நாமும் விரும்புகின்றோம். ஆனாலும், கடந்து போன காலங்கள் யாவும் மிகவும் கசப்பானவைகளாகவே கழிந்து சென்றிருக்கின்றன. எமது மக்களுக்கு நாம் அனைவரும் எதிர்பார்த்த மகிச்சியைத் தந்து விடாமலேயே கடந்து சென்றுவிட்ட காலங்களை எண்ணி மிகவும் மனத்துயரோடு உங்களோடு நான் சில வார்த்தைகள் மனந்திறந்து பேச விரும்புpகனிறேன்.
கடந்த முப்பத்தைந்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஆயுதப்போராட்ட வழிமுறையிலும், அதன் பின்னர் ஐனநாயக வழிமுறையிலும் இடையறாது நாம் ஈடுபட்டு வருகின்றோம்…. இதுவரை கால எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பலத்த சவால்களுக்கு முகம் கொடுத்து, இடர்களைச் சந்தித்து, எம்மோடு கூடவே இருந்து எமது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த இன்னுயிர் தோழர்கள் பலரையும் நாம் பறிகொடுத்திருக்கின்றோம்! மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அடிக்கடி மரணங்களைச் சந்தித்து வந்த மனத்துயரங்களுக்கு மத்தியிலும், மரணத்தில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் போல் பல தடவைகள் நாம் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்திருக்கின்றோம். எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். எமது மக்களுக்கான அரசிலுரிமைகளை பெற முடிந்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம். ஆனாலும், அந்தச் சந்தர்ப்பங்கள் எவைகளையும் எமது தமிழ் பேசும் தலைமைகள் பலதும் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை. இந்த மனத்துயரங்களே எமக்கும் இன்னமும் எஞ்சியிருக்கின்றன. ஆயுதப்போராட்டம் பிழையானது என்று நான் கருதியிருந்தவனல்ல. அது தேவையான இடத்தில், தேவையான காலத்தின் சூழ்நிலை உணர்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய ஒன்றுதான். எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக கடந்த கால நிகழ்வுகளை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. எமது தாயக தேசத்தில் ஒரு காலத்தில் நீதியான ஒரு ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டது என்பது உண்மைதான். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்று ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றிருக்கின்றேன். ஆனால், பின்னர் போராட்டம் தனது திசைவழியை இழக்கத் தொடங்கியது. எத்தகைய விமர்சனங்களுக்கப்பாலும் நமது மக்களின் விடிவுக்காகவென தமது மகிழ்வான வாழ்வைத் தியாகம் செய்து புறப்பட்டவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் தீவிரம் பெற்றன. எமக்குள் நாமே சுட்டுக்கொண்டு, தமிழ் மக்களின் காவலரண்களாக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகளையும், வல்லமை நிறைந்த தலைவர்களையும் இன்னும் ஏராளமான தமிழ் புத்திஜீவிகளையும் காவுகொண்டு, தமிழ் மக்களின் பலத்தைச் சிதைத்துக்கொண்டுவிட்டோம். ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது தமிழ் மக்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் முளைவிட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப முயற்சியாக ஏற்று ஐனநாயக வழிக்குத் திரும்பியிருந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமல்ல, இன்றுவரை எமது கட்சியாகிய ஈ.பி.டி.பி. யில் அங்கம் வகித்து வரும் எமது தோழர்களும், ஏனைய மாற்று ஐனநாயகக் கட்சிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று ஐனநாயக வழிக்கு வந்திருந்ததை நீங்கள் அறீவீர்கள். ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தபோதிலும் அந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான சுதந்திரம் எமக்கு மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அதற்காக நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்பட்டிருந்தது கிடையாது. யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற பொது நோக்கில், குற்றிய அரிசி எமது மக்களையே சென்றடையவேண்டும் என்ற தீராத இலட்சிய விருப்பங்களோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் வெளியில் இருந்து ஆதரித்திருந்தோம். ஆனாலும், புலிகளின் தலைமை மட்டும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக செயற்பட்டிருந்ததோடு, அன்றைய பிரேமதாச அரசுடன் இணைந்து எமது மக்களுக்குக் கிடைத்திருந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற பொன்னான வாய்ப்பை இல்லாதொழிப்பதற்கு பிரதான காரணியாக செயற்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இதனால் எது நடக்கும் என்று நாம் அன்று எச்சரிக்கையுணர்வோடு சொல்லியிருந்தோமோ இன்று அது நடந்து முடிந்திருக்கிறது. எமது மக்களின் இரத்தத்திலும் தசையிலும் சுயலாப அரசியல் நடத்தப்பட்டு பல்லாயிரம் மக்களின் இழப்புகளோடும், உறவுகளைப் பலிகொடுத்த மனத்துயரங்களோடும் எல்லாமே இன்று நடந்து முடிந்து விட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, இராணுவ வழிமுறையில் அதனை எதிர்கொண்டதன் மூலம், எமது இனத்தின் நண்பனாகத் திகழ்ந்த இந்தியாவைப் பகைத்துக்கொண்டோம். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் காடுமைக்குள்ளாகும்போதெல்லாம் குரல் கொடுத்துவந்த இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைத்தமிழர் விடயத்தைத் திரும்பிப் பார்க்காத நிலைமை ஏற்பட இவ்விதமான செய்பாடே காரணமாகியது. எமது ஆயுதப்போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்த வெற்றி என்பது, இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டும்தான். இந்த வெற்றியில் புலிகளின் உறுப்பினர்களுக்கோ, அன்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ, அல்லது அவரது சகாக்களுக்கோ இருந்த பங்களிப்பை நான் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது புலிகள் தமது தரப்பில் 652 பேர் மட்டுமே மரணமடைந்திருந்ததாக உரிமை கோரியிருந்தனர். ஆனால் இ;னறோ எதுவும் இல்லாமலும் இருந்தவற்றையும் அழித்தும் பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் உயிரும் காவுகொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் அன்று பெற்ற வெற்றியைப் புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருக்கவில்லை. மாறாக, அந்த ஒப்பந்தத்தை உடைத்து சிதைப்பதற்கே காரணமாக இருந்திருக்கின்றார்கள். இந்த வரலாற்றுத் தவறை புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய நீங்கள் இன்று இன்னமும் அதிகமாக உணர்ந்திருக்கின்றீர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டுமன்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட உருப்படியான இன்னும் பல முயற்சிகளும் இவ்வாறே வீணடிக்கப்பட்டன. நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்து வாழும் பல உலக நாடுகளின் ஆதரவுடன் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகூட வீணடிக்கப்பட்டது. இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தும், உலக நாடுகள் பலவும் மேற்கொண்ட தீர்வு முயற்சிகளைக் குழப்பியும் மீண்டும், மீண்டும் ஆயுத வழிமுறையை மட்டுமே தெரிவுசெய்ததன் மூலம் முழு உலகிலிருந்தும் தமிழ் மக்கள் தனித்துவிடப்பட்டனர். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் கொடுமைப்படுத்தப்பட்டாலே குரல் கொடுத்து வந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும், தமிழினத்தின் மீதான தமது அக்கறையை கைவிடும் அளவுக்கு உலகின் பகைமையை புலிகளின் தலைமை சம்பாதித்துக்கொண்டது. இதனால்தான் எமது தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்கணக்காக உலகின் வீதிகளில் நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களெல்லாம் எவராலும் கண்டுகொள்ளப்படாமலே வீண்போனது. இன்று எம் தமிழ் உறவுகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலை கண்டு நீங்கள் வெதும்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் இப்படியெல்லாம் ஆனது? எங்கே நாம் தவறிழைத்தோம்? ஏன் முழு உலகுமே தமிழர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது? உலகின் வீதிகளெல்லாம் திரண்டு நின்ற உங்களை அந்தந்த நாடுகள் திரும்பியும் பார்க்காமல் விடக் காரணமென்ன? இவையே நாம் இன்று எமக்குள் எழுப்பிக்கொள்ளவேண்டிய கேள்விகள். கடந்த காலத்தைப் புடம்போட்டு எமது இனத்தின் நிம்மதியான வாழ்வுக்கு உண்மையில் செய்யவேண்டிய, செய்யக்கூடிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் என்னவென்பது பற்றி நிதாமாக யோசித்துத் தீர்மானம் எடுக்கவேண்டிய வரலாற்றுக் காலகட்டம் இது. முப்பது வருடகால முயற்சிகள் தோற்று தமிழினம் நடுவீதியில் நிற்கும் நிலையில் வெறுமனே எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகவும், சுயதிருப்திக்காகவும் நாம் எதுவும் செய்துகொண்டிருக்க முடியாது. அது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகிவிடும். இன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகளான நீங்கள் சிந்திக்கவேண்டிய விடயங்கள் ஏராளம் இருந்தும், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதானா என்பதையே அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். உணர்வுகளை நாம்; புரிந்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் விரும்பிய அரசியல் வழிமுறையை ஏற்று நடப்பதற்கு உங்களுக்கு இருக்கவேண்டிய ஐனநாயக சுதந்திரத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். உங்களில் பலரும் புலிகளுக்கு ஆதரவானவர்களாக இருக்கலாம், அல்லது புலிகளின் தலைமைக்கு எதிரானவர்களாகவும் இருக்கலாம், புலிகளின் தலைமையால் துரத்தப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். அல்லது அரச பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். இன்னும், வேறு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தப்பட்வர்களாகவும் இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும், எம்மைப் பொறுத்தவரையில் எல்லோருமே எமது தாயகத்தின் பிரiஐகளே. உங்களுடைய முகங்களில் இருக்கும் எந்தவொரு அரசியல் அடையாளத்தையும்விட, யாவருமே மனிதர்கள், எமது தமிழ் உறவுகள் என்ற பொதுவான அடையாளங்களையே உங்களது முகங்களில் நாம் காண்கின்றோம். புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் வெல்லப்பட முடியாதவர் என்றும், யாராலும் கொல்லப்பட முடியாதவர் என்றும் புலிகளின் தலைமையே இன்று வரை ஒரு மாயையை எமது மக்களிடம் வளர்த்து விட்டிருக்கின்றது. இதனால், உங்களில் சிலரது மனங்கள் புலித்தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதையில் எமது உயிருக்கு நிகரான தோழர்கள் பலரையும் நாம் இழந்திருக்கின்றோம். யாருக்கு எதிராக நாம் அன்று போராட புறப்பட்டிருந்தோமோ அவர்கள் எமது தோழர்களை பலியெடுத்திருந்ததை விடவும், புலிகளின் தலைமையே அதிகமாக பலியெடுத்திருக்கின்றது. எனது சிறகுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. எனது கரங்கள் ஒடிக்கப்பட்டன. இதுபோன்ற மனக்கசப்புகளுக்கும், மனத்துயரங்களுக்கும், வலிகளுக்கும், வதைகளுக்கும் மத்தியில் நாம் எமது இலட்சியப் பயணத்தை முன்னெடுத்து வருகின்ற வேளையில்தான் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கபட்டிருக்கின்றது. ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது. மனித மரணங்களில் மகிழ்ச்சி கொண்டாடுபவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல. ஆனாலும், இந்த மானுட தர்மத்தின் பொது விதியை சகல தரப்பினரும் உணர மறுத்ததன் விளைவுகளே இன்று எம் கண் முன்னால் நடந்து முடிந்திருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய உங்களில் பலருக்கும் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டது என்ற மனத்துயரங்கள் இருப்பது எனக்குப் புரிகின்றது. ஏனெனில், புலிகளின் தலமைக்கு ஆதரவாக இருந்து, அவர்களை மலைபோல் நம்பியிருந்தவர்கள் நீங்கள். புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் அடைந்திருக்கும் துயரங்களை விடவும், பல மடங்கு துயரம் எமக்கும் உண்டு. ஆனாலும், அந்தத் துயரங்கள் யாவும் தனியொரு இயக்கமோ, அல்லது குழுவினரோ அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதால் ஏற்பட்ட துயரங்கள் அல்ல. எமது மக்களுக்கு இந்த யுத்தம் எந்தத் தீர்வையும் பெற்றுத்தந்து விடாமல், எமது மக்களின் இனிய வாழ்வை நடுத்தெருவிலும், நலன்புரி முகாம்களிலும் தொலைத்து, அவலங்களை மட்டும் எமது மக்களின் மீது சுமத்தி விட்டிருக்கின்றது. இந்தத் துயரங்களே எமக்கு இன்று மிச்சமாகியிருக்கின்றது. உறவுகளை அழிவு யுத்தத்திற்குப் பலி கொடுத்துவிட்ட வெறுமையின் வேதனைகளையே கடந்த காலம் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது. விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்திப் போராடியிருந்த அனைத்து விடுதலை அமைப்புகளையும் பலாத்காரமாக தடை செய்து அவர்களது அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் புலிகளின் தலைமை தாமே தங்களது கரங்களில் எடுத்துக்கொண்டது. ஆனாலும், அந்த அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் எமது மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்த மறுத்து, அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்விற்காகப் பயன்படுத்த விருப்பமின்றி, அனைத்துப் பலங்களையும் புலிகளின் தலைமை பறிகொடுத்துவிட்டு தாமே நடத்திய அழிவு யுத்தத்திற்குத் தாங்களும் பலியாகியிருக்கின்றார்கள். இதனாhல், புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதால் இழக்கப்பட்டது தனியொரு அமைப்பு மட்டுமல்ல. முழுத் தமிழினத்தினதும் போராட்டம், போராடும் சக்தி முழுவதும் புலிகளின் தலைமையின் மடைமையால் இழக்கப்பட்டுள்ளது. எம் இனிய புலம்பெயர் வாழ் உறவுகளே!...நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல. ஆனாலும், நாம் தோற்றுப்போவதற்கு நாமே காரணமாகவும் இருந்துவிடக்கூடாது. இதுவரை நாம் நடந்து வந்த தூரமும், சுமந்து வந்த பாரமும் அதிகம். இத்தனை பாரம் சுமந்து, எத்தனை விலைகளைக் கொடுத்தும் கண்டபலன் ஒன்றுமில்லை என்றால் எவ்வளவு வேதனை? இந்த நிலைமை தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்பட அனுமதிக்கலாமா? நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். வறட்டுக் கௌரவமும், பிடிவாதப் போக்கும் கொண்டு தீர்வுக்காண சந்தர்பங்கள் எல்லாவற்றையும் வீணடித்த அரசியல் தந்திரோபாயமற்ற செயற்பாடுகளுக்கு இனியேனும் முடிவு கட்டுவோம். வேறு யாருக்காகவில்லாவிட்டாலும், மீண்டும், மீண்டும் பல முறை இடம்பெயர்ந்து, அனைத்தையுமே இழந்து இன்று நலன்புரி நிலையங்களுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்ற மூன்று இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வனிப்பதற்காகவென்றாலும் நடைமுறை சாத்தியமான அனைத்தையும் செய்ய முயல்வோம். எதையாவது செய்வதென்றால், எங்கிருந்தாவது ஆரம்பித்தால்தானே முடியும்? எதிலிருந்து ஆரம்பிப்பது? இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்காகவென முன்வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையை நாம் இதற்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து தொடங்கி எமது இலக்கு நோக்கி நகர்வதே நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல என்பதை உலகத்தின் கண் முன்னால் எடுத்துக்காட்டும் வழிமுறையாகும். இன்று எமக்கு முன்னால் பாரிய பணிகள் விரிந்து கிடக்கின்றன. நடைமுறைச் சாத்தியமான வழிமுறையிலான அரசியல் தீர்வு நோக்கி நாம் பயணித்து வருகின்ற அதேவேளை யுத்தத்தினால் சிதைந்துபோன எமது தேசத்தையும், தொலைந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளையும் மறுபடியும் தூக்கி நிறுத்தவேண்டியது எமது வரலாற்று கடமையாகும். புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளாகிய உங்களுக்கும் இந்தப் பணிகளில் பாரிய பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். எமது தேசத்தைக் கட்டியெழுப்பி எமது மக்களுக்கான மகிழ்ச்சி தரும் வாழ்வை மறுபடியும் எடுத்து நிறுத்தி, எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியில் உயர நிமிர்த்தி, எமது தேசப்பற்றையும், மக்கள் மீதான நேசத்தையும் வெளிப்படுத்தி நிற்கவேண்டியது உங்களது பணியாகும். எமது தேசத்தின் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் உங்களுக்கும் பங்குண்டு. அரசியல் கட்சிகளே எமக்கு எப்போதும் அடையாளங்களாக இருந்துவிட முடியாது. எமது தேசம், எமது மக்கள் இவைகளே நமது அடையாளங்களாக இருக்கவேண்டும் என்பதே பரந்த சிந்தனையின் வெளிப்பாடாகும்.கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியில் சிறந்து விளங்கும் தேசமாக மாற்றியமைப்பதற்கு நாங்கள் எல்லோருமாகப் பாடுபடுவோம் என்று அறைகூவல் விடுக்கின்றேன். விரிக்கும் சிறகுகள் இரண்டாக இருப்பினும், பறக்கும் திசை வழி ஒன்றுதான் என்பார்கள். அதுபோலவே நீங்கள் விரும்பும் அரசியல் பாதைகள் பலவேறாக இருப்பினும் நாம் அனைவருமே அடையவேண்டிய இலக்கு ஒன்றுதான். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இன்று எங்களின் தயவை எதிர்பார்த்து வாழும் அந்த மூன்று இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் பணியிலிருந்து ஆரம்பித்து, படிப்படியாக அனைத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதை எமது இலக்காகக் கொள்வோம். புலம்பெயர்ந்து வாழுகின்ற புத்திஐPவிகள், முன்னாள்ப் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், கலை இலக்கிய படைப்பாளிகள், நவீன எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், தேசப்பற்றாளர்கள் என சகல தரப்பினரும் இணைந்து எமது தேசத்தை கட்டியெழுப்பும் இந்த மாபெரும் பணியை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்பதே இன்று தாயகத்தில் வாழும் எமது மக்களின் எதிர்பார்பார்ப்பாகும். சக அரசியல் கட்சிகளின் துணையோடு, எமது மக்களின் பூரண ஆதரவோடு, சமூகப் பெரியார்கள், சமூக அக்கறையாளர்கள், மற்றும் தமத்தலைவர்கள் ஆகியோரின் அனுசரணையோடு, எமது தேசத்தின் இளம் சந்ததியினரின் பங்களிப்போடு இந்தப் பணியைச் செய்து முடிக்க நாம் அனைவரும் கரங்கோப்போம்!



நேசமுடன்என்றும் மக்களோடு வாழும்தோழர் டக்ளஸ் தேவானந்தாசெயலாளர் நாயகம் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி
»»  (மேலும்)

கும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் கும்புறுமூலை முச்சந்தியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த இச்சோதனைச் சாவடியில் பிரயாணிகள் மற்றும் வாகனங்கள் முழுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டு வந்தன. இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு இச்சோதனைச் சாவடி அகற்றப்பட்டதாக பாதுகாப்பு உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இச்சோதனைச் சாவடியில் அண்மைக் காலமாக பொலிஸாரும் இணைந்து கடமையாற் றினர்.
இச்சோதனைச் சாவடி இயங்கிய காலப் பகுதியில் வாகனங்கள் உப பாதையூடாகவே செல்ல அனுமதிக்கப்பட்டன. தொப்பிகல மீட்பு நடவடிக்கையின் போது கும்புறுமூலை படை முகாமிலிருந்தும் பீரங்கித் தாக்குதல் நடத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

எனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது’

எனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நான் எந்த கட்சியையும் சாராதவன்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
அதேவேளை, எனது மாவட்டத்து மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். நாளை வவுனியாவிலும் அடுத்து மன்னாரிலும் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதும் உறுதியென அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் மீதான பிரேரணையின் போது நடுநிலை வகித்ததால் கிஷோர் எம்.பி.க்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையடுத்து அதுபற்றி அவரிடம் கேட்ட போதே கிஷோர் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கஷ்டப்பட்ட மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தாம் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அவர்; அவ்வாறு தமக் கெதிராக எவரும் விசாரணை நடத்த முடியாதெனவும் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டி ருந்தது. மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அவசர கால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவையொன்றிருந்தது. இப்போது அத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை.
எமது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் அவர்களிற்கான இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.
கொழும்பிலேயோ வெளிநாடுகளிலேயோ இருந்து கொண்டு எமது மக்களுக்கு எம்மால் சேவை செய்ய முடியாது. அதனால் நான் மக்களோடு எனது மாவட்ட த்தில் இருக்கிறேன். அவர்கள் இனியும் அல்லல்பட விடமுடியாது. அவர்களுக்கான கெளரவமான எதிர்காலம் அவசியம்.
நான் கட்சி விட்டு விலகப் போவதில்லை, அமைச்சர் பதவி இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியுமென்பதில்லை. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் இருந்து கொண்டே மக்களுக்குச் சேவை செய்தவன்.
தேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.
நமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக் களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது.
அதனால் எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சம யமாக்க எமது மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதென தீர்மானித்துள்ளேன் எனவும் கிஷோர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.


»»  (மேலும்)

6/14/2009

கிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை காலமும் இருந்த மீன்பிடித்தடை நீக்கம்.




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களும் தமது ஜீவனோபாயத் தொழில்களை எந்தவொரு தங்கு தடைகளுமின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதில் விசேடமாக கிழக்கு மாகாணத்தின் பிரதான தொழிலில் 2வது இடத்தில் இருக்கும் மீன்பிடித் தொழிலுக்கு இதுவரை காலமும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் வேண்டுகோளின்படி முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் இருந்த மீன்பிடித்தடை நாளை(15.06.2009) முதல் நீக்கப்படும் என இன்று (14.06.2009) மூதூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மற்றும் கிழக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படைத் தளபதி ஆகியோர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தார்கள்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், எமது மாகாணமானது மீன்பிடி மூலம் அதிக வருமானத்தை ஈட்டுகின்ற ஒரு மாகாணமாகும். எமது கிழக்கு பிராந்தியக் கடலிலே அதிகளவான மீன்கள் காணப்படுகின்றன. நீங்கள் இனிமேல் எதுவித தங்கு தடைகளுமின்றி உங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவரும் தனிநபர் வருமானங்களைக் அதிகரித்துக் கொண்டு நாட்டின் தேசிய உற்பத்தியிலும் தாங்கள் அதிகளவு செல்வாக்கு செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசுகையில் இன்று கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக திருமலையில் மீன்பிடித்தடை அகற்றப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இத்தடையினை நீக்குவது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் பேசிவருகின்றேன். வெகு விரைவில் அம்மாவட்டங்களுக்கான மீன்பிடித் தடையும் நீக்கப்படும்.
இதுவரை காலம் கடலில் மிகக் குறுகிய எல்லைக்குள் உமது மீன்பிடி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாளை (15.06.2009) முதல் அவ் எல்லை முதற்கட்டமாக அதிகரிக்கப்பட்டு இதுவரை காலமும் பயன்படுத்தப்படாமல் இருந்த 25 குதிரை வலு எஞ்சின்கள் கொண்ட இயந்திரப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளலாம். அத்தோடு அதிகாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை நீங்கள் கடலில் சென்று மீன்பிடிக்கலாம். திருமலை துறைமுகத்துக்குட்பட்ட கடல் எல்லைப்பரப்பில் குறித்த ஒருசிலர் மாத்திரம் முதற்கட்டமாக மீன்பிடிக்க முடியும், எதிர்காலத்திலும் இதுவும் தளர்த்தப்பட்டு முழுமையான சுதந்திரத்தோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதியுடன் மற்றும் மீன்பிடி அமைச்சுடனும் பேசி தீர்வு காணமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு மீன்பிடி அமைச்சின் ஊடாக பல மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, சுசந்த புஞ்சி நிலமே, நஜீப் ஏ மஜீத்,கிழக்கு மாகாண விவசாய மீன்பிடித்துறை அமைச்சர் து.நவரெத்தினராஜா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கடற்படைத்தளபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.



»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தானம் செய்து மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.


திருமலையில் புத்தி ஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்களுடன் ரி.எம்.வி.பி கடசியின் தலைவர் சந்திப்பு.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக திருமலை மாவட்டத்தின் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திருமதி ஜுடி தேவதாசன் தலைமையில் கட்சியின் கொள்கைகள், நிலைப்பாடு, எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(13.06.2009) காலை திருமலையில் இடம்பெற்றது. இதில் திருமலை மாவட்ட பொதுசன அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிராந்திய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட கட்சி பிரமுகர்கள், மற்றும் கடசி நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் கட்சியின் உருவாக்கம் அதன் தேவபைபாடு என்பன குறித்தும் எதிர்கால வேலைத்திட்டங்கள், மற்றும் கட்சியை மக்கள் மயப்படுத்துவது தொடர்பாகவும் விரிவான விளக்கம் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கட்சியின் ஊடகப்பேச்சாளரான ஆஷாத் மௌலானா அவர்கள் கட்சியினது அரசியல் முன்நகர்வுகள் தொடர்பாகவும் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் கட்சியின் தோற்ற பின்னணி குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அத்தோடு இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் கேட்கப்பட்ட வினாக்களுக்கு கட்சியின் உயர் பீடத்தினால் பூரண விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் ரி.எம்.வி.பி கட்சியை மக்கள் மயப்படுத்துவது தொடர்பில் திருமலையில் மாவட்ட அமைப்பாளர் பிரதான காரியாலயம் ஒன்றும் பிராந்திய ரீதியில் பிராந்திய காரியாலயங்கள் அமைப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது அத்துடன் கிராமங்கள் தோறும் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.


»»  (மேலும்)

நீங்கள் எவடம்? எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய சம்பவம் பற்றி என் கருத்துக்கள் .sakaran

பொதுவாய் யாழ் குடா நாட்டில் வசிக்கும் அநேகமானவர்களுக்குஇ (எல்லாரும் அல்ல) முஸ்லிம்கள் எல்லாரும் துரோகிகள் என்கிற மனநிலை துரதிர்ஷ்டவசமாய் புலிகளினால் ஏற்படுத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம். அந்த தப்பபிப்ராயம் இப்போதும் அங்கே இருக்கிறது. அதை மெல்ல மெல்லத்தான் களைய முடியும். அங்கே இனி வரப்போகும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களுக்கு அதை ஒரு சமூகஇ உளவியல் ரீதியான நோக்கில் எதிர்கொள்ள வேண்டிய கடமையும்இ பணிகளும் நிறையவே இருக்கிறது.
அதே மனிதர்களின் பட்டியலில்இ கருணா அம்மானின் பேரும் சேர்ந்திருப்பது வியப்பல்ல. அன்று தொண்டைமான் எடுத்த அதே நிலைப்பாட்டை பின்பற்றி கருணாவும் முடிவு எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். (வேறு காரணங்கள் எனக்குத் தெரியாது.) அவரைப் பற்றி கிழக்கு வாழ் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். வடக்கின் மக்கள் அல்ல. ஆனால் இப்படியெல்லாம் ஜனநாயக வழியில் சிந்திக்க இன்னும் வடக்கு வாழ் மக்கள் பழகவில்லை என்றே எடுத்துக்கொள்கிறேன். (வ. அழகலிங்கம் சொல்லியிருப்பது போல)
அவர் தான் ஒரே தலைவர். அவருக்கு எல்லாம் தெரியும். அவர் எது செய்தாலும் சரிதான் என்று கண்மூடித்தனமாய் வாழ்ந்த இரண்டு தலைமுறைகள் அங்கே (வடக்கில்) தோன்றிவிட்டன. எப்படி அவர்கள் தம்மைத் தாமே திருத்திக்கொள்ளப் போகிறார்கள்? வரப்போகும் தலைவர்களுக்கு இதுவும் ஒரு முக்கிய பிரச்னை.
அடுத்து இந்த சமூகத்தில் இருந்து அப்படியே அதே எண்ணங்களுடன் மேல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் யாழ் மக்களிடம் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? இதே அனுபவம் பல்வேறு தடவைகள் எனக்கும் நேர்ந்திருக்கிறது. கொழும்பின் புறநகர் ஒன்றில் பிறந்து வாழ்ந்து வந்த என்னிடம்இ 'அந்த ஊரே நீங்கள்? அப்பஇ அண்ணை உங்களுக்கு அவரைத் தெரியுமே? இவரைத் தெரியுமே? நானும் அங்கே ரெண்டு கிழமை இங்க வெளிநாட்டுக்கு வர முதல்ல நிண்ட நான். தெரியாதே? அப்ப நீங்கள் அந்த ஊரில்ல' என்று என்னிடமே வாதாடிய பல நபர்களை எனக்குத் தெரியும். சுமார் 5 லட்சம் வாழ்கிற நகரில் (அங்கே நான் பிறந்திருந்தாலும்) ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஆட்களை நான் எப்படித் தெரிந்து வைத்திருக்க முடியும் என்கிற ஒரு சிறு உண்மை கூட அவர்களுக்குத் தெரியவில்லை. தவிர என்னை சந்தித்த பின்இ 'உவன் கள்ளன். அதுவும் சிங்களவன். நல்லாத் தமிழ் பேசப் படிச்சுக்கொண்டு எனக்கு கதை விடுகிறான்' என்று விமர்சனமும் பண்ணுவதும் எனக்குத் தெரியும்.
அவர்களின் பேதைமை எனக்குப் புரிகிறது. யாழ் குடாநாட்டைப்போல் ஒரு சிறிய நிலப்பகுதியில்இ யாழ் நகர் போன்ற நகரங்கள் தவிர அநேகமான பகுதிகளில் வீடுகளுக்கு இலக்கங்களே இல்லை. ஆனால் அங்கே இருக்கிற ஒருவரிடம் இன்னாரைத் தெரியுமா என்று கேளுங்கள். அவர் இவரின் மாமா அல்லது ஒன்று விட்ட சகோதரம் என்று ஆராய்ச்சி பண்ணியே கண்டுபிடித்து விடுவார்கள். அத்தனை சின்ன நிலப்பரப்பில் ஒருவரை ஒருவர் தெரியாமலிருக்க நியாயமே இல்லை. (தபால் ஊழியர் விரல் நுனியில் அத்தனை பேரின் உள்வீட்டு விவகாரங்களே அடங்கியிருக்கும்.) இப்படி ஒரு சிறு எண்ணிக்கையில் உள்ள சமுதாயம் வெளி உலகமே தெரியாமல்இ இது தான் உலகம் என்று நினைத்தபடி வெளிநாட்டுக்கும் வந்து அதே நினைப்பில் வாழ்கிறது. அவர்களிடம் அவர்கள் இப்போ வாழும் (வெளி) நாட்டின் தலைவர் யார்இ அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன என்று கேளுங்கள். ஒரு மண்ணும் தெரியாது. ஆனால் தெரியாத்தனமாய் ஊரிலே நடக்கிறது என்று கேட்டீர்களோ தொலைந்தீர்கள். எத்தனை ஆமி செத்ததுஇ பெடியங்கள் என்ன மாதிரி அட்டாக் குடுத்தவங்கள் என்று வந்துகொண்டே இருக்கும். நிறுத்தவே முடியாது.
அத்தோடு இன்னொன்று. அங்கேயிருந்து வந்த படித்த மனிதர்களுக்கே தென்னிலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயம் புரிவதே இல்லை. வடஇ கிழக்கில் உறவுகள் இல்லாத தமிழர்கள் இலங்கையில் எப்படி இருக்கமுடியும்? (மலையகம் ஓகே.) இது பெரிய பிரச்னை அவர்களுக்கு. என்னைப்போல் பலர் நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட நூறோ இருநூறோ ஆண்டுகளுக்கு முன் வந்து குடியேறிஇ கோயில்கள்இ பள்ளிக்கூடங்கள் அமைத்து எத்தனையோ சிங்கள ஊர்களில் தமிழ் பேசி வாழ்கிறோம் என்றால் என்னமோ புதுமையான ஒரு பூச்சியைப்போல் பார்ப்பார்கள்.
அவர்களை சொல்லி குற்றமில்லை. நான் வேறு சூழ் நிலையில்இ பலவித இன மக்களுடன்இ கலாசாரங்களுடன் வாழ்ந்தவன். தவறிப்போய் அங்கே பிறந்திருந்தால் நானும் அப்படித்தான் சிந்திப்பேன்இ பேசுவேனோ? இருந்தாலும் அவர்கள் என் சகோதரரர்கள். அறியாமை இன்னும் விட்டுப்போகவில்லைஇ அவ்வளவு தான். ஆனால் காலம் மாறும். அறிந்து கொள்வார்கள். நம்பிக்கை இருக்கிறது.


»»  (மேலும்)

நீங்கள் எவடம்?” ஐயோ கவனம்! எஸ்.எம்.எம் பஷீர்

புலிகள் துடைத்தழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றாலும் புலிப் பக்தர்கள் பலர் புலம் பெயர் நாடுகளில் பைத்தியம்போல் அலையத் தொடங்கி இப்போது மெதுமெதுவாக பலர் சொஸ்தமடைய, சிலர் இன்னமும் தீராப் பைத்தியங்களாக உலா வருகின்றார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்புலிப்பைத்தியனினால் பாதிக்கப்பட்ட இலண்டனில் வாழும் ஒரு முஸ்லிம் பிரமுகர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினை என்னுடன் பகிர்த்துகொண்டார்.

துன்பியல் ( Tragedy )

லண்டனில் ஹரோவிலுள்ள பல சரக்கு கடையொன்றில் இலங்கை தமிழ் பத்திரிகை வாங்குவதற்காக அங்கு சென்றிருந்த கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் அட்டாளைச்சேனை அரசினர் கல்லூரி ஓவியக்கலை விரிவுரையாளரும், முன்னாள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி உபஅதிபரும், தற்காலிக அதிபருமாக கடமையாற்றியவரும், மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராகவும் சிறப்புறப் பணியாற்றிய பிரபல சமூக சேவையாளரும், முன்னாள் இந்தியப் பிரதமர் திரு நேருஜீ அவர்களின் உருவப்படத்தினை வரைந்து நேருஜீ 1955 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, முன்னாள் இலங்கை பிரதமமந்திரி திரு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களின் முன்னிலையில் அவ் ஓவியத்தினைக் கையளித்து சிறந்த ஓவியருக்கான பல விருதுகளைப பெற்று;, இலங்கையிலும், இந்தியாவிலும் பரவலாக அறியப்பட்ட ஓவியர் கலாபூசணம் அல்ஹாஜ் எம்.எஸ்.ஏ அஸீஸ் (ஜே.பி)அவர்களிடம்; கடையில் சம்பாஷனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் “நீங்கள் எவடம்"; என்று கேட்க ஜனாப் அஸீஸ் அவர்களும் மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு என மிடுக்குடன் சொல்ல அங்கு நின்றிருந்த முன்னாள் சட்டத்தரணி ஒருவர் யாரோ, யாரோ எல்லாம் மட்டக்களப்பில் தெரியுமா எனக்கேட்க கதை வளர்ந்து முன்னாள் மட்டுநகர் அரச அதிபர் திரு மௌனருசாமி அவர்களையும் சொல்லி மேலும் அவரது மைத்துனரான முன்னாள் ரொலே(1989) எம்.பி கருணாணாகரனையும் தெரியுமென சொல்ல எத்தனித்து “கருணா” எனத் தொடங்கியவுடனேயே பக்கத்தில் போதையில் நின்ற ஒருவர் இவர்மீது பாய்ந்து தாக்கியபோது கூடியிருந்தவர்கள் இவரைக் காப்பாற்றியதுடன், அடித்தவன் சார்பில் மன்னிப்புக் கேட்டனர்.

துன்பியல-நகைச்சுவை (Tragi-comedy);


சரி போனால் போகட்டுமென்றால் அச்சம்பவம் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர் ஜனாப் அஸீஸ் அவர்கள் இன்னொரு முதியவரைச் சந்தித்தபோது அவரும் இவரை நீங்கள் இவரை “எவடம்” என்று கேட்டு;. பேச்சு வளர்ந்து இவர் முன்னாள எம்.பி இராஜதுரை தனது நண்பரெனச் சொல்ல “அவன் தமிழினத் துரோகி” என்று அந்த முதியவர் இவர்மீது பாய்ந்தார்.

நகைச்சுவை (Comedy)
இனிமேல் எவடம் என்று யாரும் கேட்டால் மட்டக்களப்பார் என்னை விடு சாமி என்று ஓடப்போகின்றார்கள், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து முதனமுதல் ஆசிரியர் நியமனம்பெற்று எங்களுக்கு கற்பிக்க வந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “அடே இங்கே மீன்பாடுது, தேனோடுது என்கிறாங்க ஆனால் இங்கு என்னென்றால் ஆளுக்குமேல் ஆள்தான் பாயுறான்.” இறுதியில் அவரும் வீடுவாங்கிக்கொண்டு மட்டக்களப்பில் வாழத் தொடங்கிவிட்டார். ஆனால் இப்போது மீன்பாடுதோ, தேன் ஓடுதோ இல்லையோ ஐரோப்பாவில யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்மீது ஆளுக்குமேல் ஆள் பாயுறாங்க, ஒரு ஆலோசனையை சொல்லாமல் இருக்க முடியவில்லை “ கருணாகரப் பரம்பொருளே அடியேனை கண்பார்த்து அருள்வாயே” என்ற தேவாரத்தைப் பாடுபவர்கள் ஒரே மூச்சில் கருணாகரனான கடவுளை பாதுகாப்பிற்கு அழைத்து விடுங்கள். தப்பித்தவறி விக்கியோ, திக்கியோ கருணா.... என்று நிறுத்தினால்போதும்;: மதராஸ் தமிழில்; சொல்வதானால் உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள் போங்கள்.
“கருணாகரப் பரம்பொருளே மட்டக்களப்பாரை கண்பார்த்து அருள்வாயே!”



»»  (மேலும்)

யதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால் அரசியல் தீர்வு சாத்தியமாகும்


பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டுவிட்டது. அடுத்தது அரசியல் தீர்வு. ஒன்றிரண்டைத் தவிர மற்றைய கட்சிகள் அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசுகின்றன. புலிகள் தோற்கடிக்கப்படும் வரை ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது அவர்களும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள்.
அரசியல் தீர்வு பற்றி வெறுமனே பேசினால் போதாது. இன்று தேவைப்படுவது ஆக்கபூர்வமான செயற்பாடு. ஆக்கபூர்வமான செயற்பாடு எனக் கூறும் போது இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முன்வைக்கப்படும் தீர்வு முழுமையான அரசியல் தீர்வின் முன்னோடியாக இருக்க வேண்டியது ஒரு விடயம்.
நடைமுறைச் சாத்தியமான தீர்வாக இருக்க வேண்டியது மற்றைய விடயம். இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்பதாலேயே இவ்விரு விடயங்களும் ஆக்கபூர்வ அணுகுமுறை ஆகின்றன.
அரசாங்கம் அரசியல் தீர்வை இன்னும் முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்தகால செயற்பாடுகளின் பின்னணியில் பார்க்கும் போது இக்குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டதாகவே தெரிகின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி கடைசி நேரம் வரை பங்குபற்றவில்லை.
அரசியல் தீர்வு தொடர்பாகத் தனது நிலைப்பாடு என்ன என்பதையும் வெளிப்படுத்தவில்லை. யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசிக்கின்றது. அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்று அரசாங்கத்தைக் குறை கூறுவதற்கும் இந்த ஆலோசனைக்கும் தொடர்பு இல்லை எனக் கூற முடியாது.
அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் எடுத்துக் கூறினார். பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முதலில் நடைமுறைப்படுத்துவது என்றும் அதன் பின் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை நடைமுறைப்படுத்துவது என்றும் கூறினார். இரண்டாவது கட்டத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். இதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.
அடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துகள் அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படுவதற்கு இன்னும் தயாராக இல்லை என்ற அபிப்பிராயத்தையே தோற்றுவிக்கின்றன.
ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்கிறார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். வடக்கும் கிழக்கும் இணைந்த அரசியல் தீர்வைக் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்கிறார் இன்னொருவர்.
அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் ஒத்துழைக்காததும் இங்கு முக்கிய பிரச்சினையல்ல. அது இரண்டாம் பட்சமானது. அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமானது.
‘ஏற்றுக் கொள்ளக் கூடிய’ தீர்வை முன்வைக்கும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்குத் தலைவர்கள் அவசியமில்லை. எல்லோரும் அதைச் செய்யலாம். தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே தலைவர்கள் தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதையே மக்கள் அறிய விரும்புகின்றார்கள். இவர்கள் ஏற்கக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்கா விட்டால் பேசாமல் இருந்து விடுவார்களா?
எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்ற தெளிவான விளக்கமும் தேவைப்படுகின்றது. கடந்த காலங்களில் இவர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டார்கள். தனிநாடு தான் புலிகளின் நிகழ்ச்சி நிரல். இதில் கூட இவர்களிடம் நிலையான நிலைப்பாடு இருக்கவில்லை. சிலர் பகிரங்கமாகவே தனிநாட்டை ஆதரித்துப் பேசினார்கள்.
வேறு சிலர் தாங்கள் தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று பட்டும் படாமலும் பேசினார்கள். இந்த நிலையில் தாங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்பதை இவர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தீர்வை அடைவதற்குப் பின்பற்றப் போகும் நடைமுறை என்ன என்பதையும் கூற வேண்டும்.
இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கான சூழ்நிலை இல்லை என்று மேலே கூறியதற்கான விளக்கம் அவசியமாகின்றது.
இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்ட இரண்டு தீர்வுகள் கைதவறிப் போயிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாண சபை ஒன்று. மற்றையது பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம். இவ்விரு தீர்வுகளும் கைதவறிப்போனதற்கான பொறுப்பைச் சிங்களத் தலைவர்கள் மீது சுமத்த முடியாது. தமிழ்த் தலைவர்களே இதற்குப் பொறுப்பாளிகள்.
வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில் புலிகளுக்குப் பிரதான பங்கு உண்டு. இதற்காகப் பிரேமதாசவுடன் சேர்ந்து செயற்பட்டார்கள். செயலற்றுப் போன மாகாண சபைக்குத் தேர்தல் நடத்திப் புதிய சபையைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்த் தலைவர்கள் முன்வைக்கவில்லை.
அப்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாகாண சபை செயலற்றதாக்கப்பட்டதற்கு மெளன அங்கீகாரம் அளித்தார்கள் என்பதே இதன் அர்த்தம்.
பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் எதிர்த்ததாலேயே அது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற முடியாமற் போனது. இத்தீர்வுத் திட்டம் கைதவறிப் போனமை மிகப் பெரிய பின்னடைவு.
மாகாண சபைக்கும் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக் கோட்பாட்டுக்கு அமைவாக வேறொரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அரசியல் போராட்டம் நடத்தியிருந்தால், முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலை தென்னிலங்கையில் தோன்றியிருக்காது. ஆனால் இவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று அவர்களின் ஆயுதப் போராட்டத்துக்குப் பக்கபலமாகச் செயற்படத் தொடங்கினார்கள்.
அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டிருந்த தலைவர்கள் நியாயமானதெனப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல்தீர்வு முன்வைக்கப்பட்ட போது அதை நிராகரித்துத் தனிநாட்டு அணியுடன் இணைந்து கொண்டமை தமிழ்த் தலைவர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை தனிநாட்டுக்கான முதலாவதுபடி என்ற சந்தேகத்தைச் சிங்கள மக்களிடம் தோற்றுவித்தது.
முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலை தோன்றுவதற்கு இது பிரதான காரணமாகியது. பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்ட காலத்தில் அடங்கிப் போயிருந்த பேரினவாதிகளின் குரல் தமிழ்த் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாட்டினால் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இடம்பெற்ற பல சம்பவங்கள் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலையைத் தோற்றுவித்தன.
இந்த நிலையில் கூட்டமைப்புத் தலைவர்கள் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றப் போகின்றார்கள்? ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று வாளாவிருப்பார்களா? அல்லது நடைமுறைச் சாத்தியமான வழியில் தீர்வை அடைவதற்கு முயற்சிப்பார்களா?
ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பது அரசியல் தலைமைக்குரிய செயற்பாடல்ல. அதே நேரம், யதார்த்தத்துக்குப் புறம்பான கோரிக்கையை முன்வைப்பது இவ்வளவு காலமும் விட்ட தவறை மீண்டும் விடுவதாகவே அமையும். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்த கருத்து நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இப்போது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே, இத்திருத்தத்தின் கீழான மாகாண சபையை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையில்லை.
பாராளுமன்றத்தின் சம்மதமும் தேவையில்ல. மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பை மாற்ற வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இல்லை.
இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது. இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடஙக்ளிலும் வாழும் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
இது அவர்களின் உடனடி எதிர்பார்ப்பாக உள்ளது. மாகாண சபை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்த எதிர்பார்ப்பு சாத்தியமாகும். மேலும், மாகாண சபையின் மூலம் மக்கள் புதிய சில அதிகாரங்களைப் பெறுவார்கள். அவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை.
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பணி பூர்த்தியடையும் நிலைக்கு வந்து விட்டது. இறுதி அறிக்கை விரைவில் கையளிக்கப்படவிருக்கின்றது. இந்த அறிக்கை பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை முன்வைக்குமென அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
அடுத்த கட்டமாக இந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தலாம். தீர்வு வெளியாகியதும் இதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்காதிருக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்க மறுத்தால் தமிழ் மக்களிடமிருந்து அது முற்றாக அந்நியப்பட்டுவிடும்.
கிடைக்கும் தீர்வுகளை ஏற்றுக் கொண்டு அவற்றைச் சரியான முறையில் செயற்படுத்துவதன் மூலம் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் சரியான அணுகுமுறையைப் பின்பற்றினால் நிச்சயம் அது சாத்தியமாகும்.
சமகால யதார்த்தத்துக்குப் புறம்பான செயற்பாடு தமிழ் மக்களை இன்று படுகுழியில் தள்ளியிருப்பதிலிருந்து தமிழ்த் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


»»  (மேலும்)