மட்டக்களப்பு மாநகர சபைக்கு அருகில் இயங்கி பலவருடங்களாக மூடப்பட்டிருந்த மாநகர சபைக்கு சொந்தமான ரெஸ்ற் கவுஸ் மீண்டும் “ஹோட்டல் சிங்கிங் பிஸ் ” என்ற பெயரில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.
20 மில்லியன் ரூபா செலவில் இது கிழக்கு மாகாண சபையால் புனரமைக்கப்பட்டு நேற்று வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் கி.சந்திரகாந்தனும் மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தனா பிரபாகரனும் இதனைத் திறந்து வைத்தனர்.
யுத்த சூழல் காரணமாக இந்த ரெஸ்ரோறன்றும் மாநகரசபை கட்டிடமும் பல வருடங்களாகப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன.
மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலையடுத்து மாநகர சபையை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றதும் இக்கட்டிடத்தின் திருத்தவேலைகள் நடைபெற்றன.
கிழக்கில் உல்லாசத்துறையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஒரு கட்டமாக இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டுள்ளது என மேயர் தெரிவித்தார்.
மட்டக்களப்பிற்கு வருபவர்களுக்குத் தங்குவதற்கு ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்க இந்த ஹோட்டல் உதவுகின்றது.
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர்கள் மாநாட்டை முன்னிட்டு இது திறந்துவைக்கப்பட்டுள்ளது எனவும் மேயர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.

0 commentaires :
Post a Comment