மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு இப்படி படுகொலை செய்யப்டப்டிருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.இது உண்மையிலே வருத்தமளிக்கின்ற செயலாகும். இதனை யார் புரிந்திருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நான் பொலிஸாரினைக் கேட்டிருக்கின்றேன். இந்தச் சம்பவமானது உண்மையில் கிழக்கின் சாதாரண நிலையினைக் குழப்ப விரும்புகின்றவர்களின் செயலாகவே நான் பார்க்கின்றேன். அதாவது கிழக்கு மாகாணத்திலே தற்போது அமைதியும் ஜனநாயகமும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இந்த வேளையிலே அதனை விரும்பாத ஒரு சில விசமிகளே இவ்வாறான வேலைகளைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறாது இருப்பதற்குரிய அனைத்து நடவடிக்கையினையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுவருகின்றார்கள். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கையினயும் கோரி இருக்கின்றேன்." என இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
0 commentaires :
Post a Comment