நேபாள நாட்டின் பிரதமர் பிரசாந்தா நேற்று முன்தினம் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர் நாட்டு மக்களுக்காக தொலைக் காட்சி மூலம் விடுத்த உரையில் பதவி விலகுவதாக அறிவித்தார். ஆளும் கூட்டணியில் இடம்பெற்று இருந்த நேபாள கம்யூனிஸ்டு - மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சி விலகியதால் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல்போனது. இதனால் அவர் பதவி விலகவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
நேபாள நாட்டின் இராணுவ தளபதி ருக்மாங்கட். இவருக்கும் அரசாங்கத்துக்குமிடையே மோதல் ஏற்பட் டது. முன்னாள் மாவோயிஸ்டுகளை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளும்படி நேபாள அரசு இவருக்கு உத்தர விட்டது. ஆனால் அவர் அவர்களை சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டினார். இது தொடர்பாக சில விளக்கங் களை கேட்டு அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி அந்த உத் தரவை நடைமுறைப்படுத்தாமல் தாமதப்படுத்தினார்.
அதோடு அரசாங்கம் 8 தளபதிகளுக்கு ஓய்வு கொடு த்தது. ஆனால் அவர்களை ருக்மாங்கட் மீண்டும் பதவி யில் அமர்த்தினார். இதுபோன்ற செயல்களால் கோபம் அடைந்த பிரசாந்தா ருக்மாங்கட்டை இடைநிறுத்தம் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கூட்டணி கட்சி யான நேபாள கம்யூனிஸ்டு - மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சி ஆட்சியில் இருந்து விலகியது. 601 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபையில் (பாராளுமன்றத் தில்) கம்யூனிஸ்டு கட்சிக்கு 108 உறுப்பினர்கள் இருக் கிறார்கள். இந்த கட்சி ஆட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து பிரசாந்தா ஆட்சி மெஜாரிட்டியை இழந்தது.
இந்த நிலையில் மெஜாரிட்டியை இழந்து விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி கோரியது.
இதற்கிடையில் ஜனாதிபதி ராம் பரண் யாதவ், தளபதியை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் தளபதிக்கு எழுதிய கடிதத்தில் நாட்டின் தலைவர் என்ற முறையிலும் இராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர் என்ற முறையிலும் பதவியில் நீடிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு இருக் கிறார்.
இராணுவத் தளபதியை இடைநிறுத்தம் செய்ததும் புதிய தளபதியை நியமித்ததும் அரசியல் சட்ட நெறி முறைகளின்படி செய்யப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.
இராணுவத் தளபதி விவகாரத்தில் ஜனாதிபதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நான் பதவி விலகுகிறேன். இராணுவத் தளபதியை பதவியில் நீடிக்கும் படி ஜனாதிபதி கேட்டுக்கொண்டு இருப்பது ஜனநாயகத் தின் மீது விழுந்த மிகப்பெரிய அடி ஆகும். அமைதியை ஏற்படுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த நட வடிக்கை தோல்வியைத்தான் தரும்.
மக்களின் எதிர்பார்ப்பு முழுவதையும் எங்களால் நிறை வேற்ற முடியவில்லை. அவற்றை நிறைவேற்ற நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். நாங்கள் செயல்பட விடாமல் எதிர்க்கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் தடை யாக இருந்தனர். நேபாளத்தின் உள்நாட்டு விவகாரத்தில் அந்நிய சக்திகள் அடிக்கடி குறுக்கிட்டன. இவ்வாறு பிரதமர் பிரசாந்தா கூறினார்.

0 commentaires :
Post a Comment