5/26/2009

கிழக்கு மாகாணத்தில் அரச சேவையில்பணிபுரியும் ஊழியர்களின் வருடாந்த சம்பளஅதிகரிப்பை உடன் வழங்குமாறு பணிப்புரை

கிழக்கு மாகாண அரச சேவையில் பணி புரியும் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்புக்களை உரிய காலப் பகுதிக்குள் தாமதமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பிரதம செயலாளர் வே. பொ. பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
உத்தியோகத்தர்களின் சம்பள உயர்ச்சி திகதிக்கு ஏற்ப காலதாமதமின்றி சம்பள அதிகரிப்பு படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மாகாணத்தின் அனைத்து திணைக்களத் தலைவர்களையும் அவர் கேட்டுள்ளார்.
அரச சேவையில் பணி புரியும் உத்தியோகத்தர்களுக்கு அவர்களது செயலாற்றுகை வினைத்திறமைக்கு அமைவாக வருடாந்தம் சம்பள அதிகரிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும் சில திணைக்களங்களில் இந்த விடயம் தொடர்பில் தாமதங்கள் நிலவி வருவதால் நிருவாக ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


0 commentaires :

Post a Comment