கடந்த காலங்களில் கிழக்குமக்கள் அனுபவித்த இன்னல்கள் தொல்லைகள் கொலைகள் கடத்தல்கள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு கடந்த ஒருவருடமாக சுதந்திரமான நிம்மதியான காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ள இக்கால கட்டத்தில் தற்போது அங்குநடைபெறும் சிலஅத்துமீறிய அராஜகங்களை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகின்றது. சகோதரப்படுகொலையைத் தொடர்ந்து நம்மவர்க்குள்ளேயே பழிவாங்கல்கள் இன்னமும் தொடர்ந்தவண்ணம் இருப்பதை நினைத்து நாம்வெட்கித்தலை குனியவேண்டியுள்ளது. வீசிமுடிந்த பயங்கர சூறாவழியிலும் சுழன்றுவந்த பயங்கர வாதத்திலிருந்தும் கொதித்தெழுந்த சுனாமியிலுமிருந்தும் சிறிதுசிறிதாக மீண்டு ஆயுதக்கலாச்சாரமற்ற மக்களாட்சியைக் கொண்டபிரதேசமாக கிழக்குப்பிரதேசம் விளங்கவேண்டுமென்பதில் கிழக்குமக்கள் மிகமுனைப்புடன் ஆட்சியாளர்களை எதிர்பார்க்கின்றார்கள். இனங்களுக்கான சகோதரஒற்றுமையுடன் நீதியானதும் நேர்மையானதுமான மக்களாட்சியையே நாம் இன்று இங்கு எதிர்பார்க்கின்றோம். கிழக்கில் இரண்டுதலைமைத்துவத்தைக் கொண்டு தற்போது அங்குள்ள அரசியல்களநிலமைகள் வழிநடத்தப்பட்டு வருகின்றபோதும் இருதலைமைக்குமிடையில் சிலமுரண்பாடுகள் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இவை பேசித்தீர்க்கப்பட்டு கிழக்கின் அபிவிருத்தியலும் அங்குவாழும் மக்களின் கல்வி பொருளாதார அபிவிருத்தியிலும் சேர்ந்து பயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 2007 ற்கு முன்னர் பட்டகஸ்டங்கள் அதனால் பாதிப்பிற்குள்ளான நம் கல்வி கலாச்சாரம் எனபனவற்றால் ஒவ்வொரு தமிழனும் தாம் இழந்தவற்றை நாம்யாவரும் ஒன்றாகஇணைந்து நிவர்த்திசெய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். மேலும் 2007 இல் இடம்பெற்ற இடப்பெயர்வுகளால் ஏற்பட்ட மனிதப்பேரவலம் மறக்கமுடியாத சம்பவமாகும். அவையாவற்றையும் நாம் பாடமாகவும் அனுபவங்களாகவும் மனதில்வைத்திருந்து நம் இளையதலை முறையினரை வழிநடத்த வேண்டிய பாரியபொறுப்பு இரண்டு அரசியல்தலைவர்களுக்கும் மற்றும் இங்குவாழும் சமூகத்தலைவர்கள் கல்விமான்களின் முன் அவசரகடமையாக உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. இவற்றைவிடுத்து அண்மைக்காலமாக கிழக்கில் இடம்பெறும் சிறுவர் சிறுமியர்களின் கடத்தலானது நெஞ்சைஉலுக்கும் வேதனைக்குரிய செயலாகும். அன்று திருமலையிலும் தற்போது மட்டக்களப்பிலும் கடத்தப்பட்ட சிறுமியும் கொலைசெய்யப்பட்டுள்ளதை கிழக்குமக்களும் மனிதத்தை நேசிக்கும் யாவரும் இக்கொடியசெயலினை வெறுக்கின்றனர். அரசியல் காற்புணர்ச்சியாலோ அன்றி பணத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ பழிவாங்கும் நோக்கத்துடன் இடம்பெறும் இப்படியான செயல்களைக் கிழக்குமக்கள் இனங்கண்டு அவர்களை உலகிற்கு வெளிபடுத்தவேண்டிய அவசியமுள்ளது. அப்படியில்லாவிட்டால் மீண்டும் மீண்டும் இப்படியானகொடியசெயல்களை அவர்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பார்கள். இதன் மூலம் சிறுவர்களைக்கடத்தும் ஒருகலாச்சாரம் இங்கு உருவாகலாம். மேலும், மாகாணமுதலமைச்சர் திரு. சி. சந்திரகாந்தன் அவர்களும் மத்தியஅமைச்சர் திரு வி. முரளீதரன் அவர்களும் இப்பாதகங்களையும் கொடுமைகளையும் மற்றும் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் கைதுசெய்ய பாதுகாப்புப்படைகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பிப்பதுடன் மட்டுமன்றி அதற்கு துணைநிற்போரையும் நீதியின் முன்நிறுத்தி அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கான தங்களாலான எல்லாமுயற்சிகளையும் தாமதியாது செய்யவேண்டும். இதுவே கிழக்குமக்களின் முன்நிற்கும் தற்போதய பேரவாவாகும்
5/04/2009
| 0 commentaires |
அமைதியின்பின் கிழக்கில் இன்னமும் தொடரும் அநீதிகள்!-படுவான்கரையான்

0 commentaires :
Post a Comment