5/28/2009

கலாசார பன்மைத்துவத்தின் ஊடாக சமாதானம்


இன்றைய உலகில் சமாதானத்தின் பயணம் பல்வேறு பரிமானங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமாதானம் மக்களின் கலாசார விழுமியங்களினூடாக சமாதானத்தை ஏற்படுத்துவதில் கல்விசார்பான அமைப்புக்கள் முன்னின்று உழைத்து வருகின்றன.
கடந்த காலங்களில் எல்லோர் மனங்களிலும் நீறுபூத்த நெருப்பாக காட்சி தந்து கொண்டிருந்த சமாதானத்தின் தேவையை நன்குணர்ந்ததன் வெளிப்பாடுதான் 'கலாசார பன்மைத்துவம் ஊடாக சமாதானம்' எனும் தொனிப்பொருளினை முன்னிறுத்தி ஒற்றுமை மிக்கதான சமாதானத்தினை அனைவரும் பெறத்தக்க வகையில் அமைந்த செயலமர்வு அக்கரைப்பற்று கல்வி வலயத் தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் போற்றத்தக்கதான ஓர் அம்சமாகும்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 100 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அமைந் துள்ளன. அவற்றில் மூவினங்களுக்குமான பாடசாலைகளில் சைவ, இஸ்லாமிய, பெளத்த, கிறிஸ்தவ சமயரீதியிலான மாண வர்களும் கல்வி கற்று வருகின்றனர்.
இவ் வாறு பல் சமயம் சார்ந்த மாணவர்களை கொண்டு இவ்வலயத்தில் அவர்களுக்குரித்தான கலை கலாசாரங்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து செயல்வடிவம் கொடுத்து அதனை அனைவரும் கண்டுகளிக்கச் செய்து அதனூடாக சமாதான சகவாழ்வை ஏற்படுத்தியவர் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீம்,
இப்பிரதேசத்தினது பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் மே மாதம் 15, 16, 17 ஆம் திகதிகளில் கலாசார பன்மைத்துவம் ஊடாக சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்குடன் வதிவிடச் செயலமர்வாக நடைபெற்றது.
இந்நிகழ்வுகளின் தலைவராக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யு. எல். எம். ஹாசீம் அவர்களும் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி அவர்களும், கெளரவ அதிதிகளாக யூ. எல். ஏ. அkஸ் அவர்களும், மற்றும் கிழக்கு மாகாணத்தின் கெளரவ கல்வி அமைச்சரின் ஆலோசகரான எஸ். திவகலாலா அவர்களும், மிஹிZ / கிரிஷிஸி அமைப்பினது தொழில்நுட்ப ஆலோசகரான எம். பவளகாந்தன் அவர்களும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.
உண்மையில் இந்நிகழ்வு இன்றைய சூழலில் மிகவும் ஆரோக்கியமானதாக காணப்பட்டது எனலாம். ஏனெனில் அக்க ரைப்பற்று கல்வி வலயத்தினுள் காணப்படும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, பெளத்த மாணவர்களுக்கிடையே சமாதான வாழ்வு பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காக வும், அவர்களது கலாசார பண்பாட்டுக் கோலங்களை ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காகவும், அவைகளை ஏனையவர்கள் புரிந்து கொண்டு நல்லி ணக்கத்துடனான நற்புறவை ஏற்படுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் மூலமாக எதிர்கால சமூகத் தலைவர்களான மாணவர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதனை ஒரே நோக்காகக் கொண்டு அக்கரைப்பற்று கல்வி வலயத்துடன் மிஹிZ / கிரிஷிஸி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இவ்வலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமாதா னத்தினை விரும்புகின்ற பெரியார்கள், சமயப் பெரியார்கள் உட்பட பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயற்பட்டறையின் சிறப்பம்சமாக மாணவர்களினால் ஆக்கப்பட்ட கலை நிகழ்வுகள் பல மேடை ஏற்றப்பட்டு சமாதான சகவாழ்வினை கூறும் அம்சங்கள் இதனூ¡க பறைச்சாற்றப்பட்டமை மிகவும் சாந்தமான நிலையினை தோற்றுவித்திருந்தமை பாராட்டப்பட வேண்டிய அம்சமாய் அமைந்திருந்தது.
இவ்வாறு சுமார் 300க்கும் அதிகமான மாணவர்கள் தங்களது திறமைகளை இக் கலாசார பன்மைத்துவத்தின் ஊடான சமாதான நிகழ்வுகளினை வெளிக்காட்டினர். இச்செயலமர்வுக்கான அனுசரணையினை மிஹிZ / கிரிஷிஸி அமைப்பு வழங்கியிருந்தது.
இவை போன்ற செயற்பாடுகளை செயற்படுத்துவதற்காக கடந்த காலத்தில் அமைதி சமாதானம் போன்றவற்றில் அக்கறை கொண்டதன் நிமித்தம் பாடசாலைகளில் சமாதானத்தை வலியுறுத்தும் வகையிலமைந்த சமாதான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் கல்வி வலயங்கள் தோறும் கல்வியின் ஊடாக சமாதானத்தினை அடைந்து கொள்ளும் நோக்குடன் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கான சமாதான கல்வியதிகாரியான எஸ். செய்னுத்தீன் அவர்களது முயற்சியின் பலனாக இவ்வலயத்திலுள்ள பாடசாலைகளில் சமாதானம் பற்றிய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களையும், கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும் திட்டமிட்டு நடத்தி வருகின்றமை சிறப்பானதாக கருதப்படுகின்றது.
அரசின் பல்வேறு சமாதான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைவாக கடந்த அரசாங்க காலத்தில் நியமனம் செய்யப்பட்ட இச்சமாதான கல்வியதிகாரிகளின் கடப்பாட்டுடன் பாடசாலைகளில் சமாதானக் கழகங்கள் அமைக்கப்பட்டு பாடங்களினூடாக மாணவர்களுக்கிடையில் சமாதானத்திற்கான பண்புசார் விருத்திகளை ஏற்புடை செய்யும் நோக்குடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்ததாக பயிற்றுவித்து எதிர்கால நற்பிரஜையை தோற்றுவிக்க இச்சமாதான கல்வி பயன்படுகின்றது.
மூவின மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசம் கடந்த காலங்களில் ஒற்றுமையின் சின்னமாக பல்வேறு தரப்பினராலும் போற்றப்பட்டதன் விளைவு பாடசாலை மாணவர்களின் பன்மைத்துவ கலாசாரத்தினை ஒன்றிணைத்து அனைவரையும் சமாதானத்தின் பால் இணையவைப்பதன் மூலமாக ஒன்றுமை கொண்ட எதிர்கால நற்றிறமையுள்ள சமாதான சகவாழ்வினை விளைவிப்பதில் இவ்வதிவிடச் செயலமர்வு பாராட்டும் படியாக அமைந்திருந்தது.
பாடசாலை மாணவர்களிடமிருந்து சமாதானத்தின் பயணத்தை ஆரம்பிப்பது மிகவும் இலகுவானதாகும். பாடசாலைக் கலைத்திட்டத்தின் பல்வேறு வடிவங்களின் ஒன்றுதான் இணைப்பாடக் கலைத்திட்ட செயற்பாடுகளாகும். அதனை சரியாக இனங்கண்டு மாணவர்களுக்குரிய முறையில் செயல் வடிவத்தை வடிவமைத்து வழங்குகின்ற போது அதனை இலகுவாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை பல் கலாசார மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் இச்செயலமர்வு நடைபெற்றமை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது எனலாம்.
அனைவரும் சமமான கல்வியினை பெறத்தக்க வகையில் இன்றைய கல்வியானது அதனை அடைந்து கொள்வதிலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எல்லோரும் கல்வியை பெறுவதன் ஊடாக சமாதானத்தின் பாதை ஆரம்பமாகிறது. எல்லோரும் மனிதர்கள்.
மனிதத்துவம் நிறைந்த அம்சங்களை வெளிக்காட்டுகின்ற போது அங்கே சிறந்த நற்பிரஜையை தோற்றுவிக்க முடியும் என்பது கல்வியின் தத்துவமாகும். அதனை நிலை நிறுத்துவதில் இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் சமத்துவ சகவாழ்வினை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமில்லை எனும் கருத்தினை வலியுறுத்தும் வகையில் வருகை தந்திருந்த அதிதிகளின் உரைகளிலிருந்து அறியக்கூடியதாய், இருந்தது. மேலும் தன்னுடைய கலாசாரத்தை மற்றவரும், மற்றவரின் கலாசாரத்தை நாமும் புரிந்து கொண்டு வாழ்வோமானால் உலகம் சமாதான பூமியாக தோற்றமளிக்கும் என்பதை இம்மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் சுட்டிக்காட்டி நின்றமை கண்கூடு.


0 commentaires :

Post a Comment