5/01/2009

மட்டுநகரில் கடத்தப்பட்ட சதீஸ்குமார் விதுஷிகாவை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு வேண்டுகின்றேன். – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கிருஸ்ணானந்தராஜா


மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல கோட்டைமுனை கனிஸ்ர வித்தியாலயத்தில் 03ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி சதீஸ்குமார் விதுஷிகா கடத்தப்பட்ட சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பிலும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சார்பிலும் மிகமிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் சில தீய சக்திகள் திட்டமிட்ட முறையில் பாடசாலை மாணவ, மாணவிகளை கடத்துவதும், கப்பம் கோருவதும் தொடர் கதையாகி வருகின்றது.
எனவே சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இவ்வாறான ஈனச் செயல்களை கைவிடுவதுடன், கடத்தப்பட்ட மாணவியையும் உடன் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறான செயல்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஒரு வித அச்சமும், பதட்டமும் ஏற்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பாடசாலைகளுக்கும், பிற செயற்பாடுகளுக்கும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப மறுக்கின்றார்.
இதனால் தற்போது நகரில் அனைத்துப் பாடசாலைகளும் செயல் இளந்து காணப்படுகின்றது. எனவே தற்போதைய அசாதாரண நிலையை சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் கருமத்தில் கொள்வதுடன் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு இயல்பு வாழ்வினை குளப்பி பதட்டத்தினை ஏற்படுத்தி அதில் குளிர்காயும் விசப்பரீட்சையில் யாரும் ஈடுபடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.


E.கிருஸ்ணானந்தராஜா


0 commentaires :

Post a Comment