மூதூரில் இருந்து இடம் பெயர்ந்து மட்டக்களப் பில் தங்கியுள்ள மக்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கட்டைபறிச்சான் பகுதியில் உள்ள தில்லங் கேணியில் மீளக் குடியமர் த்தப்படவுள்ளனர். இதற் கான தீர்மானம்
மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மீள்குடியேற்ற இணைப்பாளர் அ. செல்வேந்திரன் தெரிவித்தார்.
இதற்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். தற்போது மட்டக்களப்பிலுள்ள 13 நலன்புரி நிலையங்களில் 615 குடும்பங்களைச் சேர்ந்த 2127 பேரும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 465 பேரும் தங்கியுள்ளனர்.
இவர்களின் சொந்த இடங்கள் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் தில்லங்கேணியில் தற்காலிகமாக குடியமர்த்தப்படவுள்ளனர். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன், அ. செல்வேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், இடம் பெயர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment