5/09/2009

அட்டாளைச்சேனை இரு முக்கியஸ்தர்கள் நாளை தேசிய காங்கிரஸில் இணைவு

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம். பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் எஸ். எல். எம். ஹனீபா ஆகியோர் நாளை 10ம் திகதி தேசிய காங்கிரஸில் இணைந்துகொள்கின்றனர்.
பாலமுனையில் நடைபெறவுள்ள அபிவிருத்தி சம்பந்தமான நிகழ்வொன்றில் வைத்து அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான ஏ. எல். எம். அதாஉல்லாவின் முன்னிலையில் மேற்படி இருவரும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
பாலமுனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியான பாறூக் நீண்டகாலமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினராக இருந்து வருகின்றார்.
எஸ். எல். எம். ஹனீபா பாலமுனையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக மர்ஹ¤ம் அஷ்ரபினால் நியமிக்கப்பட்டு இன்றுவரை கடமையாற்றி வருகின்றார். இவர் தற்போது பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்தின் அதிபராகவும் செயல்படுகின்றார்.


0 commentaires :

Post a Comment