5/28/2009

இளைஞர்கள் சமூகப்பற்றுடன் செயற்படவேண்டும். – பூ. பிரசாந்தன்.


சமூகத்தின் பிடிப்பற்ற தன்மையும் தூரநோக்கற்ற குறுகிய இலாப சிந்தையும் பலரிலும் மேலோங்கிக் காணப்படுவதனாலேயே இளைஞர் சமூகம் இன்றும் உதவிகளை எதிர்பார்த்து நிற்கவேண்டிய சூழ் நிலையில் உள்ளது.
எந்த வேளையிலும் பிறருக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் இன மத மொழி பேதமின்றி சேவை வழங்க முன்வரும் வேளையில் நல்லதொரு எதிர்காலம் தானாக வந்தடைவதற்கு வழி கிடைக்கும். சோம்பேறித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து இளைஞர்களும் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும் இளைஞர் அபிவிருத்தி சம்மேளனத்தின் தலைவருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இலங்கை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய இளைஞர் கொடி நிதி சேகரிப்பு நிகழ்வை 2009.05.25ம் திகதி மட்டக்களப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் ஆரம்பித்து வைத்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள சுமார் 5000 இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகளும் சமூகசிந்தையுடன் செயற்பட்டால் மாத்திரம் போதாது அனைத்து இளைஞர்களும் நாட்டின் நன்மை கருதி விளையாட்டுத் துறையுடன் நிறுத்திக் கொள்ளாமல் கலை கலாச்சார பொருளாதார அபிவிருத்திகளுக்காகவும் முன்னின்று உழகை;கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட பணிப்பாளர் திரு.வு.ஈஸ்வரராஜா, மண்முனைப்பற்று இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திருமதி. நிஷாந்தி அருள்மொழி மற்றும் பிரதேச, மாவட்ட இளைஞர் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.



0 commentaires :

Post a Comment