5/17/2009

மாவிலாறு முதல் முல்லைத்தீவு வரை...




எமது நாட்டில் கடந்த 25 வருடங்களாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கை தற்பொது அதன் இறுதித் கட்டத்தை அடைந்துள்ளது.
புலிகளின் பிடியில் சிக்கித் தவித்த அப்பாவி தமிழ் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து அவர்களது கட்டுபாட்டில் இருந்த நிலத்தை விடுவித்து இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் சாந்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வழிவகுக்கும் நோக்குடனே இந்த மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எமது நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இவை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்று அழைக்கப்பட்டன.
அந்தப் பிரதேசங்களில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்றங்களும், வங்கிகளும் செயற்பட்டு வந்தன. பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அப்பாவி பொதுமக்களும், சிறுவர், சிறுமியரும், யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இளம் தற்கொலை குண்டுதாரிகளும் உருவாக்கப்பட்டிருந்தனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலகட்டத்திலும் இந்த அத்தனை நடவடிக்கைகளும், புலிகளால் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை மத்திய வங்கி, கொலன்னாவை எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம், சர்வதேச விமான நிலையம், கொழும்பிலுள்ள உலக வர்த்தக நிலையம் போன்ற பிரதான பொருளாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்தினர். நாட்டின் முக்கியத் தலைவர்களை கொலை செய்ததன் மூலமும் கொலை செய்ய முயற்சித்ததன் மூலமும் புலிகளின் செய்பாடுகள் மேலும் பலமடையத் தொடங்கின.
இந்நிலையில் எமது நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் பொலிஸாரினது ஒத்துழைப்புடன் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்.
“பிளவுபடாத ஒருநாடு” பெரும்பான்மையினரின் இணக்கப்பாடு, கெளரவமான சமாதானம் என்பவற்றை தனது இலக்காகக் கொண்ட ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் புலிகளுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. ஆனால் புலிகள் இதற்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை.
பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்த அரசாங்கம் அரசியல் ரீதியான அணுகுமுறையொன்றின் தேவையையும் புறக்கணிக்கவில்லை.
ஜனநாய ரீதியான தீர்வுகளுடன் உடன்பாடு கெள்ளாத புலிகள் கெபிதிகொல்லாவ பிரதேசத்தில் தாய்மார்களையும், பிஞ்சுக் குழந்தைகளையும் படுகொலை செய்தனர். சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த தண்ணீர் விநியோகத்தை வழங்க மறுத்து மாவிலாறு அணைக்கட்டை மூடி அப்பாவி பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினர். இது போன்ற பயங்கரவாத செயல்கள், மக்களின் உரிமைகளை பறிகொடுக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன.
இதனால் கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து விடுவிப்பதற்கு இராணுவப் பங்களிப்புடனான மனிதாபிமான நடவடிக்கை ஒன்று அவசியம் என்பதற்கு அமைய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
சம்பூர், வாகரை, தொப்பிகலை என்று படிப்படியாக கைப்பற்றி வெற்றிகரமாக முன்னேறிய பாதுகாப்புப் படையினர், கிழக்கு மாகாணம் முழுவதையும் வெற்றிகரமாக விடுவித்தனர்.
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மாத்திரம் ஆரம்பமான இந்த படை நடவடிக்கைகள் கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேலும் முடுக்கி விடப்பட்டது.
மாவிலாறு அணைக்கட்டை புலிகள் 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி மூடியதை அடுத்து ஜூலை மாதம் 8ம் திகதி இந்த அணைக்கட்டை திறப்பதற்கான மனிதாபிமான ஆரம்பித்து வைக்கப்பட்டு அது வெற்றிகரமாக முடிந்தது.இந்நிலையில் கிழக்கு மாகாணத்தையும், அங்குள்ள மக்களையும் பாதுகாப்பாக மீட்டெடுத்தது போன்று வடக்கை புலிகளிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பது உணரப்பட்டது. இதற்கமைய வட பகுதிக்கான தரைமார்க்கமான இராணுவ நடவடிக்கை 2007ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் இரண்டு வருட காலத்தில் அந்த நடவடிக்கை படையினருக்கு பாரிய வெற்றியைப் பெற்றுத்தந்திருக்கிறது.
57 வது படைப்பிரிவு

ஜகத் டயஸ்
இராணுவத்தின் 57வது படைப்பிரிவு மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையில் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 2007ம் ஆண்டு மார்ச் மாதம் வவுனியாவில் தங்களது நடவடிக்கைகளை இந்தப் பிரிவு தொடங்கியது. இந்தப் படைப்பிரிவு புலிகளின் கோட்டையான கிளிநொச்சியை நோக்கி நகர ஆரம்பித்தது. வடமேற்கு கரையோரம் ஏ-9 வீதி ஆகியவற்றில் புலிகள் கொண்டிருந்த மூலோபாய முக்கிய நிலைகளை தகர்த்த வண்ணம் இந்தப் படைப்பிரிவு முன்னேறியது. இந்தப் பிரிவினர் கைப்பற்றிய, முன்னேறிய பிரதேசங்கள் பின்வருமாறு:-
27. 03. 2007 சின்னப்பண்டிவிரிச்சான்22. 12. 2007 புலிகளின் சக்திவாந்த முகாமான வியட்நாம் தளம் வீழ்ந்தது.22. 12. 2007 பெரிய பண்டிவிரிச்சான், பெரிய தம்பனை பிரதேசங்கள் வீழ்ந்தன.24. 04. 2008 மடு தேவாலயப் பிரதேசம்25. 04. 2008 உயிலங்குளத்தின் வடக்கு29. 04. 2008 மடு தேவாலயம் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பிடம் கையளிப்பு17. 05. 2008 பாலம்பிட்டி நகர்23. 05. 2008 மூன்றுமுறிப்பு கிராமம்14. 06. 2008 பெரிய மடு குளம்26. 06. 2008 பெரிய மடு26. 06. 2008 செட்டிக்குளம் 54 தளம்17. 07. 2008 நட்டன் கண்டல் கிராமம்22. 07. 2008 உயிலங்குளம், துணுக்காய்24. 07. 2008 மல்லாவியின் தென்பகுதி28. 07. 2008 சிவன் கோயில் பிரதேசம்13. 08. 2008 கல்விலான் கிராமம்13. 08. 2008 முழங்காவில்22. 08. 2008 அக்கராயன் குளத்தின் தென்பகுதி25. 08. 2008 தண்ணிமுறிப்பு குளக்கட்டின் 800 மீற்றர் பிரதேசம் படையினர் முன்னேற்றம்27. 08. 2008 ஆலங்குளம்02. 09. 2008 மல்லாவி நகர்30. 09. 2008 முறிகண்டி புகையிரத நிலையம்29. 10. 2008 அக்கராயன் குளக்கட்டு06. 11. 2008. அக்கராயன் குளம்29. 11. 2008 ஒதியமலை கிராமம்30. 11. 2008 கொக்காவில் நகரம்10. 12. 2008 தெருமுறிகண்டி சந்தி02. 01. 2009 கிளிநொச்சி / கிளிநொச்சி நகர்17. 01. 2009 இராமநாதன் புரம்28. 01. 2009 விசுவமடு நகர்
58வது படைப் பிரிவு, முதலாவது அதிரடி செயலணி

சவேந்திர சில்வா
இராணுவத்தின் முதலாவது அதிரடி செயலணியாக பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையில் செயற்பட்டு வந்த அணியே பின்னர் 58 வது படைப் பிரிவாக மாற்றப்பட்டது. இந்தப் படைப் பிரிவு 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மன்னாரிலிருந்து நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
நாட்டின் வடமேற்கு கரையோர வழியாக வேகமாகவும் வெற்றிகரமாகவும் நகர்வுகளை மேற்கொண்ட இந்தப் படைப்பிரிவு பாக்குநீரிணை வழியாக புலிகளுக்கு இருந்த முக்கியமான விநியோக பாதைகளைத் துண்டித்தது.
02. 09. 2007 மன்னர் சிலாவத்துறை22. 12. 2007 புலிகளின் உயிலங்குளம் சோதனைச்சாவடி27. 12. 2007 செட்டிகுளம்08. 02. 2008 அடம்பன் குளத்தின் தென்பகுதி28. 02. 2008 கட்டுக்கரைக்குளத்தின் வடக்கு21. 04. 2008 புலிகளின் பிரதான முகாம்களில் ஒன்றான “லீமா பேஸ் – 3” படையினரிடம்26. 03. 2008 பரப்பக் கண்டல்30. 04. 2008 “வன் எய்ட் தளம்” வேப்பல் குளம்09. 05. 2008 அடம்பன் நகர்24. 06. 2008 முள்ளிக்கண்டல் கிராமம்27. 06. 2008 அடம்பன் குளம், நகர்28. 06. 2008 பரப்பக்கண்டல் பானு தளம்29. 06. 2008 மன்னாரில் புலிகளின் இறுதிக் கோட்டையான அரிசி ஆலை, ஆலங்குளம், ஆந்தன் குளம், நட்டுபாலம், வண்ணான் குளம் கிராமங்கள்30. 06. 2008 பெரிய மடுவுக்கு தென்மேற்கு பகுதியில் 57 வது படைபிரிவுடன் இணைவு16. 07. 2008 கடற் புலிகளின் மிக முக்கிய தளங்கள் அமைந்துள்ள விடத்தல் தீவு படையினர் வசம்20. 07. 2008 இலுப்பக்கடவாய் பிரதேசம்31. 07. 2008 வெள்ளாங்குளம் பாலம்02. 08. 2008 வெள்ளாங்குளம் கிராமம்12. 08. 2008 முழங்காவில் பல்லவராயன் கட்டு பிரதேசம்21. 08. 2008 நாச்சிக்குடா16. 10. 2008 மணியன்குளம்20. 10. 2008 வண்ணேரிக் குளம்28. 10. 2008 நொச்சி மோட்டை29. 10. 2008 ஜயபுரம் கிராமம்09. 11. 2008 புலிகளின் கரையோர கோட்டை கிராஞ்சி10. 11. 2008 பாலாவி மீனவக் கிராமம்13. 11. 2008 பேய்முனை, வலைப்பாடு15. 11. 2008 புலிகளின் முக்கிய பிரதேசமாக இருந்த பூநகரி படையினர் வசம்23. 12. 2008 சின்னப் பரந்தன்27. 12. 2008 நவநாவற்குளம் கிராமம்01. 01. 2009 பரந்தன் இரணைமடு சந்தி இது இராணுவ கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடம்.02. 01. 2009 முக்கிய தலைநகரான கிளிநொச்சி, கிளிநொச்சி நகர் படையினர் வசம்08. 01. 2009 முரசுமோட்டை15. 01. 2009 தர்மபுரம்17. 01. 2009 இராமநாதன்புரம்19. 01. 2009 தர்மபுரத்தில் புலிகளின் எண்ணெய்க் கிடங்கு படையினர் வசம்0. 01. 2009 புலிகளின் தர்மபுரம் கட்டுப்பாட்டு அறை தரைப் படையினர் வசம்28. 01. 2009 விசுவமடுவுக்குள் பிரவேசம்05. 02. 2009 விசுவமடு படையினர் வசம்09. 02. 2009 சுதந்திரபுரம்20. 02. 2009 தேவிபுரம் அம்பலவான் பொக்கணை24. 02. 2009 புலிகளின் முக்கிய நகரான புதுக்குடியிருப்பு நகருக்குள் பிரவேசம்02. 03. 2009 புதுக்குடியிருப்பு சந்தி12. 03. 2009 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை01. 04. 2009 பச்சபுல்மோட்டை05. 04. 2009 புதுக்குடியிருப்பு முழுவதும் விடுவிப்பு22. 04. 2009 அரசாங்கம் பொது மக்களுக்காக அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் வடபகுதி புதுமாத்தளன், அம்பலவான் பொக்கணை26. 04. 2009 வலைஞர் மடம்28. 04. 2009 இரட்டை வாய்க்கால்
59வது படைப்பிரிவு

நந்தன உடவத்தை
இராணுவத்தின் 59வது படைப்பிரிவு: மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் மணலாறு ஊடாக நடவடிக்கைகளை தொடர்ந்த இந்தப் படைப்பிரிவினர் புலிகளுக்கு முல்லைத்தீவு பிரதேசத்தில் இயற்கையான பாதுகாப்பு அரணாகக் கருதப்பட்ட ஆண்டான் குளம் மற்றும் நாகச்சோலை ரியிரிமிசீ8(மி மிக மெதுவாகவும் வெற்றிகரமாகவும் ஊடறுத்துச் சென்று அந்தப்பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
இந்தப் படைப்பிரிவு கைப்பற்றிய பிரதேசங்களை பிரிகேடியர் பிரசன்ன சில்வா பின்னர் வழி நடத்தினார்.
29. 05. 2008 முனகம் தளம்04. 07. 2008 புலிகளின் முக்கிய தளமான “மைக்கல் பேஸ்”27. 07. 2008 “சுகந்தன் பேஸ்” தளம்17. 08. 2008 புலிகளின் 100 பதுங்கு குழிகளைக் கொண்ட “ஜீவன் பேஸ்” தளம்21. 08. 2008 நாயாறு களப்புக்கு மேற்கு27. 08. 2008 உலத்துவெளி பிரதேசம்23. 10. 2008 கஜபா புரம்11. 11. 2008 தண்ணிமுறிப்பு குளத்திலிருந்து குமுழமுனை வரை முன்னேற்றம்17. 11. 2008 குமுழமுனை கிராமம்02. 12. 2008 பெரிய குளம் கிராமம்04. 12. 2008 அலம்பல்26. 12. 2008 முள்ளியவலை02. 01. 2009 கிளிநொச்சி25. 01. 2009 முல்லைத்தீவு நகர்
53வது படைப் பிரிவு

கமல் குணரத்ன
இராணுவத்தின் 53வது படைப்பிரிவு மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
யாழ். குடா நாட்டில் முகமாலை முன்னரங்கு பாதுகாப்பு பகுதியில் இந்தப் படைப்பிரிவு ஆரம்பத்தில் நிலைக் கொண்டிருந்தது. யாழ். குடாவுக்குள் புலிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் தாக்குதல்கள் நடத்திய வண்ணம் ஏ-9 பிரதான வீதிக்கு தென்பகுதியில் நிலை கொண்டிருந்தனர்.
குடா நாட்டுக்குள் புலிகளின் பிரவேசத்தை தடுத்த முக்கிய படைப்பிரிவு இதுவாகும். தற்காப்பு அணியாக செயற்பட்ட இந்தப் படைப்பிரிவு 2008 நவம்பர் மாதம் தொடக்கம் தாக்குதல் பிரிவாக செயற்படத் தொடங்கியது.
19. 11. 2008 முகமாலை முன்னரங்கு பாதுகாப்பு நிலைப் பகுதியிலுள்ள புலிகளின் முதலாவது முன்னரங்கை கைப்பற்றினர்.06. 01. 2009 முகமாலை, கிளாலி முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளை முழுமையாக கைப்பற்றினர்08. 01. 2009 சோரன்பற்று பிரதேசம் கட்டுப்பாட்டில்09. 01. 2009 ஆணையிறவு வீழ்ந்தது12. 03. 2009 புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி01. 04. 2009 பச்சை புல்மோட்டை05. 04. 2009 புதுக்குடியிருப்பு
55 வது படைப்பிரிவு

பிரசன்ன சில்வா
இராணுவத்தின் 55 வது படைப்பிரிவு பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
யாழ். குடா நாட்டில் முகமாலை பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் ஆரம்பத்தில் நிலைகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் புலிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வந்தனர்.
ஏ-9 பிரதான வீதிக்கு வடபகுதியில் இவர்கள் கடமைகளை மேற்கொண்டனர். 2008ம் ஆண்டு நவம்பரிலிருந்து தாக்குதல் பிரிவாக மாற்றப்பட்டது. கரையோர பிரதேசத்தை இந்தப் படைப்பிரிவு கைப்பற்றியது.
19.11.2008 - புலிகளின் முகமாலை முதலாவது பாதுகாப்பு முன்னரங்கைக் கைப்பற்றினர்.06.01.2009 - கிளாலி, முகமாலை பாதுகாப்பு முன்னரங்குகளை கைப்பற்றினர்.07.01.2009 - பளை08.01.2009 - சோரன்பற்று09.01.2009 - ஆனையிறவு11.01.2009 - கெலில்14.01.2009 - சுண்டிக்குளம்05.02.2009 - சாலை
2வது அதிரடி செயலணி

ரோஹன பண்டார
இராணு வத்தின் 2வது அதிரடி செயலணி பிரிகேடியர் ரோஹன பண்டார வின் தலைமை யில் செயல்ப ட்டது. இந்தப் படைப் பிரிவு 2008 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பாலமோட்டைக்கு தெற்காக தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
ஏ-9 பிரதான வீதியின் மேற்கு - கிழக்கு பகுதிகளின் ஊடாக தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த முதலாவது இராணுவ செயலணி இதுவாகும்.
11.07.2008 - நவ்வி கிராமம்27.08.2008 - பாலமோட்டை04.12.2008 - புளியங்குளம்06.12.2008 - கனகராயன் குளம்21.12.2008 - நெடுங்கேணி28.12.2008 - நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் வரையான வீதி படையினர் வசம்.
3வது அதிரடி செயலணி

சத்தியபிரிய லியனகே
இராணுவத்தின் 3வது அதிரடி செயலணி பிரிகேடியர் சத்தியபிரிய லியனகேவின் தலைமையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இந்தப் படைப் பிரிவு 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வன்னி விலான் குளம் பிரதேசத்தி லிருந்து நடவடிக் கைகளை முன்னெ டுத்தது.
ஏ-9 பிரதான வீதியின் மேற்கு - கிழக்கு பகுதியின் ஊடாக தாக்குதல்களை முன்னெடுத்த இரண்டாவது இராணுவச் செயலணி இதுவாகும்.
17.11.2008 - மாங்குளம் நகர், பனிக்கன்குளம்25.11.2008 - ஒலுமடு15.12.2008 - அம்பகாமம் கிராமம்18.12.2008 - பாலம் பாசி20.12.2008 - கருப்பட்ட முறிப்பு
4வது அதிரடி செயலணி

நிஷாந்த வன்னியாராச்சி
இராணு வத்தின் 4வது அதிரடி செயலணி கேர்ணல் நிஷாந்த வன்னி யாராச் சியின் தலைமை யில் செய ற்பட்டது.
இந்தப் படைப் பிரிவு 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெடுங்கேணி பிரதேசத்திலிருந்து தமது தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. முல்லைத்தீவு களமுனையில் இருந்த இராணுவத்தின் 59வது படைப் பிரிவுடன் இணைந்து இந்தச் செயலணி செயற்பட்டது.
0.12.2008 - நெடுங்கேணி28.12.2008 - நெடுங்கேணி, புளியங்குளம் வீதி05.01.2009 - ஒட்டுச்சுட்டான்21.01.2009 - உடையார் கட்டுக்குளக்கட்டு10.02.2009 - குருவிக் குளம்11.02.2009 - புதுக்குடியிருப்புக்கு தென் பகுதி24.02.2009 - புதுக்குடியிருப்பு நகருக்குள் பிரவேசம்

0 commentaires :

Post a Comment