தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜாக்கொப் ஷ?மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இருவாரங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்த தென்னாபிரிக்காவின் பொதுத்தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றியீட்டி இருந்தது.
இந்நிலையில், தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டபோது அறுதிப்பெரும்பான்மையில் ஷ?மா வெற்றியீட்டியுள்ளார்.
ஹுமாவிற்கு ஆதரவாக 277 வாக்குகள் பாராளுமன்றில் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எதிராகப்போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டன்டாலாஷ?கு 44 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தது.
பொதுத்தேர்தலைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவின் நான்காவது ஜனநாயக பாராளுமன்றம் 400 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடந்த புதன்கிழமை கூடியபோதே இத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தென்னாபிரிக்காவின் பிரபல்யம் வாய்ந்த அரசியல் வாதியான மக்ஸ்சிசுலு பாராளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஷ?மா (வயது 67) நாளை சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.2005 ஆம் ஆண்டில் அவமானமான முறையில் பாராளுமன்றைவிட்டு வெளியேற்றப்பட்டபின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விடயமாக உள்ளதாக ஷ?மா தெரிவித்தார்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் வேலைவாய்ப்பினை வழங்கவும் பாதுகாத்துக் கொள்ளவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஷ?மா தெரிவித்தார்.
2005 இல் துணை ஜனாதிபதியாக இருந்து ஷ?மா மீது அவதூறுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவர் வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த தேர்தலுக்கு முன்னர் இவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையென கருதி வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment