புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு அரசாங்கம் இவ் உள்ளூராட்சி மன்றங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம், இவ் உள்ளூராட்சி மன்றங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிப்பதற்காக ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டு இதற்காக மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலும் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபைக்காக மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா- பிரபாகரன் தலைமையில் 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு மாநகர சபையின் நடவடிக்கை மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சிறந்த ஆளுமையும், நற்பண்பும், பேச்சாற்றலும் மொழி அறிவும் கொண்ட மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா- பிரபாரன் தலைமையில் 19 மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று மாநகர சபையையும், மாநகரத்தையும் அபிவிருத்தியின் பால் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இம்மாநகர சபையின் பிரதிமேயர் ஜோர்ஜ் பிள்ளை மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி இங்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் சேதமடைந்துள்ள கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதில் மட்டக்களப்பு மாநகர சபையும் தமது முழுமையான பங்களிப்புக்களை செய்து வருகின்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மாநகர சபையின் ஆணையாளர் எம். உதயகுமார் மற்றும் அதன் ஊழியர்களும் தமது முழுப் பங்களிப்பையும் வழங்கி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபையை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாரனின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் கடந்த ஒரு வருடத்துக்குள் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் கிறவல் வீதிகள், தார்வீதி, கொங்கிaட் வீதிகள் என்பன புனரமைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிதியிலிருந்தும் தேசநிர்மாண அமைச்சின் நிதியிலிருந்தும் இவ்வீதிகள் புனரமைக்கப்பட்டன.
மாநகர சபையினால் 90 நாள் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலமும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுடன் சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதேபோன்று யு. எஸ். ஐட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பொதுச் சந்தைக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன் கனேடிய மாநகர சபைகள் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்திக் கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன.
இவற்றில் மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட முதியோர் இளைப்பாறும் மண்டபம், மாநகர சபையில் கணினிமயப்படுத்தப்பட்ட நவீன கணக்குப் பகுதியும் அத்தோடு மட்டக்களப்பு நகர நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை என்பன திறந்து வைக்கப்பட்டன.
அத்தோடு கனேடிய மாநகர சபைகளின் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன் சீலப்பைகளும் வழங்கப்பட்டுள்ளன.
திண்மக்கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம், அதன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றது.
பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் பல்வேறு விடயங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாநகர சபையை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று ஓராண்டு பூர்த்தியையொட்டி மாநகர சபையினால் மாநகர வார நிகழ்வுகள் கடந்த 17.04.2009 முதல் 24.04.2009 வரை நடத்தப்பட்டன.
இதில் கடந்த 17.04.2009ம் திகதி சமயவழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் புனித மரியாள் இணைப் பேராலயம், மட்டக்களப்பு நகர ஜும்ஆப்பள்ளிவாசல், மங்களராமய பெளத்த விகாரை என்பவற்றில் சமய நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்தோடு அன்றைய தினம் மட்டக்களப்பு சின்ன ஊறணி, பேச்சியம்மன் கோயில் வீதியின் 2ம் குறிக்குத் தெரு கிறவலிடும் வேலை ஆரம்பிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உத்தியோக பூர்வ இணையத் தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
18.04.2009 அன்று மட்டக்களப்பு எல்லை வீதியிலுள்ள திசவீரங்சம் சதுக்கம் சிரமதான மூலம் துப்புரவு செய்யப்பட்டதுடன், முதல்வர் சபையில் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
20.04.2009 அன்று கல்லடி சார்ல்ஸ் வேலுப்பிள்ளை வீதி கிறவலிடப்பட்டது.
21.04.2009 அன்று மாநகர அன்று மாநகர சபை அலுவலகம் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.
22.04.2009 அன்று மட்டக்களப்பு மாநகர சபையினால் முதல் தடவையாக மக்களுக்கான துரித நடமாடும் சேவையொன்றும் மாநகர மண்டபத்தில் நடத்தப்பட்டது.
இத்துரித நடமாடும் சேவையில் பொதுச் சுகாதாரம் ஆதனவரி, நாணாவிதவரி, திட்டமிடல், பொறியியல் பகுதி, நிர்வாகம், நகர அபிவிருத்தி, நூலகம், பாலர்பாடசாலை, போன்ற பகுதிகளில் மக்களுக்கு மிக நீண்டகாலம் தீர்க்கப்பட முடியாமல் இருந்த பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன.
23.04.2009 அன்று மட்டக்களப்பு அரசடியில் புனரமைக்கப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டதுடன் திண்மகழிவு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் திண்மக்கழிவு தொடர்பான விழிப்புணர்வுக் 8ஸிr>விசீழிu நடத்தப்பட்டது. 24.04.2009 அன்று மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கிடையிலான கலாசார விளையாட்டு நிகழ்வுகள், உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா-பிரபாகரன், பிரதி மேயர் ஆபிரகாம் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் உட்பட உறுப்பினர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மீன்பாடும் தேன்நாடாம் மட்டு மாநகரில் மட்டக்களப்பு மாநகர சபையின் சேவையும் அதன் அபிவிருத்தியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment