5/19/2009

யுத்தம் நிறைவுபெற்றதாக முப்படைகளின் தளபதிகள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு




புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் யாவும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைத் தளபதிகள் சம்பிரதாய பூர்வமாக அறிவித்தனர். இதற்கமைய கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் இடம்பெற்று வந்த பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்ப ட்டுள்ளதுடன், 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பி க்கப்பட்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கை 2009 மே மாதம் 18ம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட, விமானப் படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக, பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரட்ண, சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இந்த உத்தியோகபூர்வ அறிவித்தலை தெரிவித்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த சம்பிரதாய நிகழ்வில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சகல அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த இராணுவ நடவடிக்கை பூர்த்தியானதை தொடர்ந்து புலிகளிடமிருந்து சகல நிலப்பரப்பும் மீட்கப்பட்டு நாடு முழுவதும் பயங்கரவாதப் பிடியிலிருந்து வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டு சுதந்திரம் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முப்படைகளின் தளபதி என்ற வகையில் பாதுகாப்புப் படையி னருக்கு வழங்கிய பொறுப்பை அதி காலை புலிகளிடமிருந்த இறுதி பிரதேசத்தைக் கைப்பற்றியதன் மூலம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
புலிகளிடம் சிக்கித் தவித்த சகல பொதுமக்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கை முடிவடைந்ததையடுத்து புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட மோதல்களில் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை, உட்பட 250ற்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 30 வருடங்களாக இலங்கையை ஆட்டிப் படைத்த பயங்கரவாதம் இந்த இறுதி மோதலுடன் முடிவுக்கு வந்துள்ளது என்றும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் கலந்து கொண்ட சகலரும் ஒருவ ருக்கொருவர் கைலாகு கொடுத்து வெற்றி வாழ்த் துக்களை பரிமாறிக் கொண்டனர்.

0 commentaires :

Post a Comment