5/19/2009

தலைவருக்கு வீர வணக்கம்! படையினருக்கு நன்றிகள்! ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்! -கிழக்கான் ஆதம்-


ஈழ மக்களின் போராட்ட வரலாற்றை திசைதிருப்பிய மாபெரும் மனிதர் சில தினங்களுக்கு முன் தனது முடிவை நிரூணயித்துக் கொண்டார். தனியாக தமிழருக்கு நாடு பெற்றுத் தருவதாக கூறிய இவர் இன்று தமிழர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து நடைபிணங்களாக அவர்களை மாற்றிவிட்டு போராடி உயிர்நீத்தார்.
வீரவணக்கம்
படுகொலைக் கலாச்சாரத்தை தமிழருக்குள் விதைத்து இன முரண்பாடுகளைத் தூண்டி இலங்கை மக்களை தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் என பாகுபடுத்தி பேதமேற்படுத்திய ஜனநாயகவாதிக்கு வீரவணக்கம்.
வாசலில் மண்கூட்டி நேசத்துடன் கைகோர்த்து பாசத்துடன் பழகிய சின்னம் சிறுசுகளை இரத்த வாசத்துடன் இறுகிய உள்ளத்துடன் இயங்கவைத்துக் கொண்டிருந்த இயந்திர துப்பாக்கிதாரிக்கு எங்கள் வீரவணக்கம்
பாடசாலைகளில் பாடம் கற்கச் சென்றவர்க்களைப் பிடித்துப் புத்தகங்களைப் பறித்து துப்பாக்கிகளைத் திணித்து கல்விச்சோலைகளை செஞ்சோலையாக மாற்றிய பகுத்தறிவுவாதிக்கு எங்கள் வீர வணக்கம்
வீரராகப் பிறந்து புத்திசாலிகளாக வளர்ந்து சிங்கங்களாக கர்சித்த எம் சமூதாயத்தை அடிமைகளாக பிடித்து மடையர்களாக வளர்த்து எலிகளாக எங்கும் திக்குமுக்காடச்செய்த தீரருக்கு வீர வணக்கம்
சமூதாயச் சீர்திருத்தங்கள் செய்து பல்லினமக்கள் வாழ்ந்த வடகிழக்கில் ஓரினமக்கள் கூட வாழத் தகுதியில்லை எனக் கூறி தங்கள் புலியினம் மட்டும் படாடோபமாக வாழ பாலமமைக்கப் பார்த்த பாசிச வாதிக்கு எங்கள் வீர வணக்கம்
மாட்டுமந்தைகள் என்று சொல்லி மாட்சிமைமிக்க முஸ்லீம்களை வீட்டுக்கொருபலி வீதிக்கொரு கொலை ஊருக்கொரு சுத்திகரிப்பு எனச் செய்த சுத்துமாத்துக் காரருக்கு வீரவணக்கம்
இருக்கும் காணியில் அரைவாசி மட்டுமே உழைத்து பெற்ற பிள்ளையில் வீட்டுக்கொன்றைத் தத்துக்கொடுத்து படலைக்கு இரண்டு விதவைகள் உறுவாக்கிய பஞ்சமா பாதகருக்கு வீர வணக்கம்
வீடொன்று கட்டினால் ஐம்பதுவீதம் புலம்பெயர்திருந்தால் மாதத்துக்கு சில இலட்சம் மத்தியகிழக்கில் உழைத்தால் உழைத்ததில் அரைவாசி கார் வாங்கினால் முதல் மாதம் மொத்த்த்தில் முற்பதுவீதம் மோட்டார் சைக்கில் வாங்கினால் ஒடும்போது வழிப்பறியென பைனாஸ் நடத்திய கலக்சன்வாதிக்கு வீர வணக்கம்
வீட்டுக்குள் சாத்வீகம் பங்கருக்குள் டாம்பீகம் காட்டுக்குள் பூர்வீகம் மக்களுக்குள் வீராவேசம் படித்தவருக்கு நெற்றியில் பொட்டு பாமரருக்கு டம்ளரில் கஞ்சி தன்பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் கல்வி என வழங்கிய சோசலிச வாதிக்கு வீர வணக்கம்
வாழ்வதோ சொகுசுவாழ்கை சுவாசிப்பதோ ஐரோப்பிய பணக்காற்று குடிப்பதோ சுத்த பழரசம் குளிப்பதோ மேட்கத்தேய குளியல் தொட்டி பிரயாணம் செய்வதோ அதியுயர் சொகுசுக்கார் என வாழ்ந்த மக்கள் போராளிக்கு வீர வணக்கம்
அரசியல் சாக்கடை அதில் நுழைந்தால் புலிக்கிரை நாளை தமிழர் படை எங்களின் எழுச்சி பொங்குதமிழ் எங்களை எதிர்த்தால் போகும் உயிர் புலிகள் தவிர்ந்த அனைவரும் துரோகி என்று சீறிய புலிக்கு எங்கள் வீர வணக்கம்.
நன்றிகள்


0 commentaires :

Post a Comment