5/27/2009

நேபாள அரசுக் கெதிராக மீண்டும்கிளர்ந்தெழத் தயாராக வேண்டியுள்ளது



மாவோயிஸ்ட் தலைவர்
நேபாளத்தில் மற்றொரு புரட்சிக்குத் தயாராகுமாறு மாவோ யிஸ்ட் இயக்கத் தலைவரும் முன்னாள் பிரதமருமான பிரச ண்டா அறிவித்துள்ளார். நேபாளின் மன்னராட்சிக்கு எதிராகப் போராடிய மாவோயிஸ்டுகள் கடந்த 2006ம் ஆண்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்து தேர்தலில் போட்டி யிட்டனர்.
தலைவர் பிரசண்டா பிரதமரானார். மாவோயி ஸ்ட் போராளிகளை இராணுவத்தில் இணைக்கும்படி இரா ணுவத் தளபதிக்கு பிரதமர் பிரசண்டா உத்தரவிட்டார் இதை ஏற்க மறுத்த இராணுவத் தளபதியை பிரதமர் பிரசண்டா பதவி நீக்கம் செய்தார். இதனால் ஜனாதிபதி ஆத்திர மடைந்து பிரதமர் பிரசண்டாவை பதவி நீக்கம் செய்தார். தற்போது புதிய பிரதமரும் பதவியேற்றுள்ளார்.
இந்நிலை யில் விரக்தியடைந்துள்ள மாவோயிஸ்ட் தலைவர் பிரச ண்டா மற்றொரு புரட்சிக்குத் தயாராகும்படி போராளிக ளைக் கேட்டுள்ளார். ஆயுதங்கள் அமைதிபெறவில்லை போராட்டத்தை வேறு வடிவத்தில் முன்னெடுக்க வேண்டி யுள்ளதென்றும் பிரசண்டா அறிவித்துள்ளார். இதனால் நேபாளத்தில் மீண்டும் குழப்பும் தோன்றுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட மாவோ யிஸ்டுகள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப் பார்களா அல்லது ஜனநாயக அரசியல் போராட்டத்தைத் தொடர்வார்களா என்பது பற்றிக் கூறமுடியாதுள்ளதா கவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.



0 commentaires :

Post a Comment